வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 114

அவன், என்னை வேணும்னு, சொல்லி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளியே ரொம்ப சித்ரவதையை அனுபவிச்சிட்டேன். அவரை வெச்சுகிட்டே, அவரு பாக்காதப்ப என்னை அசிங்கமாப் பாப்பான். அசிங்கமா சைகை செய்வான். யாரும் இல்லாதப்ப கமெண்ட் அடிப்பான். ட்ரிப் போறாருன்னா, நைட்டு துணைக்கு கூட படுத்துக்கட்டுமான்னு அவர் முன்னாடியே கேப்பான். இவருக்கு அது எதுவும் தப்பா தெரியாது.

என்கிட்ட வந்து, காய்ஞ்சு போயிருப்ப, அவனே மாசம் ஒரு தடவைதான் தொடுவான். நான் நினைச்சா அதையும் நிறுத்த முடியும். உன் புருஷன் அதையும் கேப்பான். அவன் ஒரு ஆம்பிளைன்னு ஏன் வெயிட் பண்ற? அவனையே ஆட்டிப் படைக்கிற நான் ஆம்பளையா, இல்ல அவனா? பேசாம நான் சொல்றதேயே கேளுங்கிறான்!

ஒரு தடவை, ஹரீஸ்கிட்ட, அந்தாளு கால்ல அடிபட்டுடுச்சின்னு ஏதோ ஹெல்ப் கேட்டதுக்கு, நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னு சொன்னான். அதுக்கு என் புருஷனும், அவருக்கு வலிக்குதுன்னா, காலை கூட புடிச்சு விடனும், அவரு உன் அப்பா மாதிரின்னு கோவமா பேசுறாரு.

அவர் போனதுக்கப்புறம், நான் கேட்டா, உன் புருஷன், என் காலை மட்டுமில்லை, வேறெதை வேணா புடிக்கச் சொல்லுவான்னு அசிங்கமா சிரிக்கிறான். இந்த சித்ரவதையைத் தாங்க முடியலைடா! என்று சொல்லி அழுதாள்!

அதிர்ச்சியில் இருந்தாலும், கோபத்தில் கேட்டேன். அவன் பொண்டாட்டி, எப்புடி இதை வேடிக்கை பாக்குறா?

அவளுக்கு பணம் இருந்தா போதும்! புருஷன் யோக்கியதை, அவனோட கனெக்‌ஷன் எல்லாம் தெரியும். மாசம் அவளுக்கு ஒரு நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா போதும். கம்முனு இருப்பா. நினைச்சப்ப ஃபங்க்‌ஷன், க்ளப், ஹோட்டலுக்கு போகனும். அவ்ளோதான். நல்ல சீர் வரும்னு நினைச்சுதான் என்னை மருமகளா ஏத்துகிட்டாளாம். இப்ப, சொத்து இல்லைன்னு தெரிஞ்சவுடனே அவளுக்கு எம் மேல செம கோவம். அதுனால, புருஷன் என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டா!

ஹரீஸ்கிட்ட மனசு விட்டு பேசிப் பாத்தியா?

கண்மூடித்தனமா நம்புற முட்டாள்கிட்ட, என்ன பேசச் சொல்ற? அதையும் மீறி ரெண்டு மூணு தடவை பேசுனப்பல்லாம், என்கிட்டதான் சண்டைக்கு வந்தாரு. வெக்கத்தை விட்டு, ஒரு தடவை, அவிங்க அப்பா பார்வை சரியில்லைன்னு சொன்னதுக்கு, என் புத்தி கெட்ட புத்தி, வக்கிர புத்தின்னு சொல்லி அடிக்க வந்துட்டாரு! என்ன பண்ணச் சொல்ற???

கட்டுன புருஷன் நம்ப மாட்டேங்குறான். மாமானார் தப்பா நடந்துக்குறான். மாமியாரு வேடிக்கை பாக்குறா. என் அப்பா அம்மாகிட்ட சொல்றது வேஸ்ட். உனக்கு என்னைப் பத்திய கவலையே இல்லை. அப்ப நான் யார்கிட்ட போயி, என்னான்னு சொல்றது?

போடா, இப்ப மட்டும் எதுக்கு வந்த? இத்தனை வருஷமா கண்டுக்காதவன், இப்ப என்ன புதுசா பாசம்? அன்னிக்கு சொன்னியே, நீ அனாதை, உனக்கு யாருன்னு இல்லைன்னு! இப்ப நான் உன்னை விட பெரிய அனாதை! சந்தோஷமா உனக்கு! இப்ப எதுக்கு வந்தியாம்? போ! வந்துட்டான் பெருசா!

எத்தனை நாளா உன்கிட்ட பேசியிருக்கேன். பெரிய இவனாட்டாம், பேசாமியே இருந்துட்டு, இன்னிக்கு என்னாத்துக்கு வந்த? உனக்கு அவ்ளோ வீம்பு இருக்குன்னா, எனக்கு எவ்ளோ வீம்பு இருக்கும்? அப்படி ஒண்ணும், நீ என் விஷயத்துல தலையிட வேண்டாம்.

இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் சற்றே நீங்கிய நிம்மதியில், அவள் எப்போதும் எதிர்பார்க்கும் என் பாசம், புதிதாக கிடைத்த சந்தோஷத்தில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்! என் தோளில் சாய்ந்து கொண்டே!

யார்ரா இவன்? அக்காங்கிறான், ஆனா பேசுனதே இல்லைங்கிறான். பாசத்துல உருகுறான். அப்பா அம்மாவையே தள்ளி வெச்சிட்டேங்கிறான். ஒண்ணும் புரியலியே என்பவர்களுக்கு, என் முன் கதைச் சுருக்கம்!

என் பெயர் மதன். இப்போதைய வயது 27. என் அக்காவின் வயது 30. எனக்கு பெண்கள் என்றாலே வெறுப்பு. அதற்கு மிக முக்கியக் காரணம், என் பாட்டி, என் சித்தி அப்புறம் மிக முக்கியமாக என் அம்மா!

என் தந்தை மிக அழகானவர். நல்ல வாட்டசாட்டமானவர். என் அம்மா, மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். பார்க்கச் சுமாராகத்தான் இருப்பார். ஏகப்பட்டச் சொத்து, ஏகப்பட்ட பிசினஸ்கள்!

பணம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, பல தலைமுறைக்குச் சேரும்!

என் அம்மாவின் அப்பா (தாத்தா), பணத்தை பெருக்கும் வேளையில் பிசினசில் தொடர்ந்து ஈடுபடுகையில், என் அம்மாவை ஒழுங்காக வளர்க்க வேண்டிய என் பாட்டியோ, தன் இஷ்டம் போல் ஆட, விளைவு, என் அம்மா, சுய சிந்தனையற்ற, பிடிவாதம் கொண்ட ஒரு முட்டாளாகவே வளர்ந்தார்.

அப்படிப்பட்ட முட்டாளை, தன் அழகை வைத்து, காதல் என்ற வலையில் என் தந்தை வீழ்த்தினார். பிடிவாதம் கொண்ட என் அம்மாவும், மணந்தால் என் தந்தையைத்தான் மணப்பேன் என்றூ சாதித்தார். அவர் அப்போது, எங்கள் நிறுவனத்திலேயே, ஒரு மேனேஜராக இருந்தார். என் தந்தை அழகு மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலியும் கூட. ஆனால், அது குறுக்குபுத்தியாக மட்டுமே வேலை செய்யும்!

அது என் தாத்தாவிற்கு நன்கு தெரியும். ஆகையால் அவர் திருமணத்தை முடிந்த வரை எதிர்த்தார். ஆனால் பலனில்லை. இறுதியில், முட்டாளான என் அம்மாவிடம், பாசத்தின் காரணமாக, புத்திசாலியான என் தாத்தா தோற்றார்.

அந்தக் கல்யாணத்தின் விளைவு நான் பிறந்தேன். என் அப்பா, எங்கள் நிறுவனத்தின் எம் டி ஆனார். என் தந்தைக்கு காசு வேண்டும். என் அம்மாவிற்கு, என் தந்தையின் அழகை அடைந்தால் போதும். இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை இருந்தது. என் அப்பா, பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். பிசினஸ் விஷயமாக வெளியூர் அடிக்கடி சென்று வருவார்.

நான் பெரும்பாலும் வேலைக்காரர்கள் கையில்தான் வளர்ந்தேன். என் பாட்டியைப் போலே, என் அம்மாவும், என்னிடம் பெரிதாக பாச காட்டவில்லை. சின்ன வயதிலிருந்து நான் கேட்டதெல்லாம் கிடைக்கும், பாசம் ஒன்றைத் தவிர. என் தாத்தா மட்டுமே, எனக்காக மிகவும் வருந்துவார். அந்தச் சின்ன வயதில், நான் பாசத்திற்க்காக ஏங்குவதும், அது கிடைக்காமல் நான் தவிப்பதும், அவருக்கு பெரும் துயரத்தைத் தந்தது. இருந்தும் அவராலும், ஒரு அளவிற்கு மேல் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அவர் ஆரம்பத்திலிருந்தே என் தந்தையை நம்பவில்லை.

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.