வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 114

நான் பத்தாவது படிக்கும் சமயம், இன்னும் 10 நாட்களில் எனக்கு பொதுத் தேர்வு வருகின்ற சமயம். அந்தச் சமயத்தில்தான் அந்த உண்மை எங்களுக்கு தெரியவந்தது.

அதாவது, என் தந்தைக்கு, என் அம்மாவைத் திருமணம் செய்யும் முன்பே, இன்னொரு திருமணம் ஆகி இருந்தது. அவருடைய முதல் மனைவிக்கும் கூட, காசிற்க்காக என் அம்மாவை, என் அப்பா மணப்பது சம்மதம் என்கிற உண்மை.

அந்த உண்மை தெரிந்த அடுத்த நாள், என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்.

அன்னையின் தற்கொலை எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சில மனச் சிக்கல்களையும் எனக்கு தந்தது.

கேவலம், இந்தத் தருணத்தில் கூட, எனக்காக வாழ வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லையா? இவர் ஆசைப்பட்டால், தந்தை வேண்டும். தந்தை ஏமாற்றி விட்டார் என்றால் தற்கொலை செய்து கொள்வார். அவ்வளவு சுயநலம், பிடிவாதம். அப்புறம் ஏன் என்னைப் பெற்றெடுக்க வேண்டும்?

ஏனோ, எனக்கு என் தந்தையை விட, என் தாயின் மேல் கடும் வெறுப்பு வந்தது.

அந்த முகம் தெரியாத அந்த முதல் மனைவியின் மேலும் கடும் வெறுப்பு வந்தது! எந்த மாதிரி பெண்ணாக இருந்தால், காசுக்காக, தன் கணவனை விட்டு, இன்னொரு பெண்ணை ஏமாற்றச் சொல்லுவாள்? இந்த துரோகமும், ஏமாற்றமும், சின்ன வயதிலிருந்தே கிடைக்காத பாசமும், என்னை ஒரு உணர்வற்ற, பெரிதாக எதற்க்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு மனிதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. நான் ஒரு இரும்பு மனிதனானேன்.

பொதுத் தேர்வு ஆரம்பிப்பதற்க்கு இரண்டு நாட்கள் முன்பு, என் தாய் இறந்த ஒரு வாரத்திற்க்குள், என் தந்தை, அவர் முதல் மனைவியையும் என் வீட்டிற்க்கே கூட்டி வந்தார். அதற்க்கு என் தாத்தா பெரிய எதிர்ப்பு தெரிவிக்கையில், தன் பையனான என்னை அழைத்துக் கொண்டு தான் வெளியேறி விடுவதாகவும், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்றும் என் தந்தை பயமுறுத்த, வேறு வழியின்றி என் தாத்தாவும், எனக்காக அதைச் சகித்துக் கொண்டார்.

அப்பேர்பட்ட என் தந்தைக்கும், அவர் முதல் மனைவிக்கும் பிறந்தவள்தான், இவள். என் அக்கா!

என்னை விட மூன்று வருடங்கள் மூத்தவள். இந்தச் சம்பவம் நடக்கும் போது அவள் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

என் தந்தை, சித்தியுடனும், இவளுடனும் என் வீட்டுக்குள் நுழையும் போதுதான் இவளை முதலில் பார்த்தேன். அப்போது, அவள் கண்களில் மிரட்சி இருந்தது. அவளது தந்தை மேலும், தாயின் மேலும், வெறுப்பு இருந்தது. என்னைப் பார்த்த போது கொஞ்சம் பரிதாபம் கூட இருந்தது.

நானோ, எந்த உணர்வையும் காட்டாமல், கல்லைப் போல் முகத்தை வைத்திருந்தேன்.

அதன் பின்னும் இதே நிலை நீடித்தது. எப்போதும் போல் என் தந்தை என்னை கண்டு கொள்வதில்லை. சித்தியும் அப்படியே. என் தாத்தா மட்டுமே, என்னிடம் கூடுதல் நேரம் ஒதுக்கினார்.

நான் எதையும் வெளியே காட்டாமல், படித்து தேர்வு எழுதினேன். 2 மாதம் கழித்து தேர்வு முடிவு வெளிவந்த போது, நான் பள்ளியிலேயே முதலிடம் வாங்கியிருந்தேன். அது என் தாத்தாவிற்கு மிகப் பெரிய சந்தோஷம் கொடுத்தது. என் தாத்தா, என்னைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட போதுதான், என் அக்கா என்னிடம் தயங்கித் தயங்கி வந்தாள்.

கங்கிராட்ஸ்! என்றூ சொன்னவள், ஒரு சின்ன கிஃப்ட்டை என்னிடம் நீட்டினாள்.

ஒரு பக்கம் எனக்கு ஆச்சரியம், இன்னொரு பக்கம் கடுப்பு. ஏனெனில், அவள் வீட்டுக்கு வந்து 2 மாதம் ஆகியிருந்தாலும், அவள் என்னிடம் பேசியதே இல்லை, நானும் அவளை கண்டு கொண்டதே இல்லை. அதே சமயம், நான் இன்னொன்றையும் கவனித்திருந்தேன், அவள், அவளுடைய அப்பா, அம்மாவிடமே அதிகம் பேசுவதில்லை என்பதையும். அவள், என் தாத்தாவிடம் மட்டும், கொஞ்சம் அதிக நேரம் பேசுவதையும், சில சமயம் என் தாத்தா, மிக லேட்டாக வீட்டிற்கு வருகையில், அவரை கவனித்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவள், இன்று அவளாகவே வந்து கிஃப்ட் தருகிறாள்.

இருந்தும், என் தந்தை, அவள் அம்மாவின் மீதான கடுப்பில், மூஞ்சில் அடித்தாற்போல் சொன்னேன்.

எங்க வீட்டு காசுல, எனக்கே, கிஃப்ட் தர்றியா?

அவள் என்னையே வெறித்து பார்த்தாள். பின் மெதுவாய் சொன்னாள்,

நான் பார்ட் டைம்ல, வீகெண்ட்ல, ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம்ல வொர்க் பண்றேன். அதுல சம்பாதிச்ச காசுதான் இது!

உன் வயசுக்கு, இந்த நேரத்துல, இத்தனை அதிர்ச்சியையும் வாங்கிட்டு, இவ்ளோ அருமையா மார்க் வாங்கியிருக்கிற உன் திறமையை என்னால சாதாரணமா எடுத்துக்க முடியலை. அதுனாலத்தான் இந்த கிஃப்ட்.

மத்தபடி, அவரு எனக்கு அப்பாங்கிறதுனால, காசை வைச்சுதான் எல்லாத்தையும் நான் பாப்பேன்னு நீயா முடிவு பண்ணிக்காத, என்று சொல்லியவள், கிஃப்ட்டை அருகிலுள்ள டேபிளில் வைத்து விட்டு செல்ல ஆரம்பித்தாள்.

இரண்டு எட்டு வைத்தவள் நின்று, பின் மீண்டும் திரும்பி சொன்னாள். நடந்த விஷயங்கள், உன்னை எந்தளவு பாதிச்சிருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா, இதுனால நீ மட்டும்தான் பாதிப்படைஞ்சிருக்கன்னு நீயா நினைச்சுகிட்டீன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. உனக்குனாச்சும், தாத்தான்னு ஒருத்தர் இருக்காரு, ஆனா எனக்கு என்று சொல்லியவள், ஒரு பெரு மூச்சு விட்டு, எப்படியிருந்தாலும் உன் திறமைக்கு, நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு, என் வாழ்த்துக்கள்.

எந்தக் காலத்துலியும், இந்தத் திறமையை, உன் படிப்பை நீ விட்டுடாம, இன்னும் மேல வளரனும் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்!

அவளது அன்றைய பேச்சு, எனக்கு மட்டுமல்ல, என் தாத்தாவிற்கும் அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால், தாத்தா, அவளுடனும் பாசம் காட்ட ஆரம்பித்தார். நாங்கள் கவனித்த வரை, அவளும் பாசத்துக்காக ஏங்குவதும், அவளது பெற்றோர்களின் மேல் வெறுப்பாய் இருப்பதும், சுயமாக படிப்பு, இன்ன பிற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும், மிக முக்கியமாக, முடிந்தவரை அந்த வீட்டின் பணத்தையும், வசதிகளையும் அனுபவிக்காமல் இருப்பதும் புரிந்தது.

இவை யாவும், அவள் மேலுள்ள என் நல்ல அபிப்ராயத்தை அதிகப்படுத்தியது என்றால், தாத்தாவிற்கு அவள் மேல் மிகுந்த பாசத்தை ஏற்படுத்தியது. ஒரு வகையில், தாத்தாவும் பாசத்திற்கு ஏங்குபவரே. மனைவியும் சரியில்லை, பெற்ற பெண்ணும் சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். நானோ, உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை. இந்த நிலையில், இவள் காட்டிய அன்பு, என் தாத்தாவிற்க்கும் மிகுந்த தேவையாய் இருந்தது.

அவள் எவ்வளவு பாசம் தாத்தாவிடம் காட்டினாலும், தாத்தாவிடம் இருந்து கூட, எந்த பணத்தையும், நகையையும், வசதியையும் பெற மறுத்து விட்டாள். வற்புறுத்திய தாத்தாவையும், இதை வாங்கினால், எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள்.

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.