கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

“ரெயில்வேயிலேருந்து ரிட்டயர் ஆனவன் நான்.. பென்ஷன் வருது இன்னும்… இந்த கிழவனுக்கு என்ன செலவு இருக்கு சொல்லுங்க… சிவ சிவா.. ஏதோ கொஞ்சம் பேங்குல கிடக்கு.. வேற யாருக்கு இதெல்லாம்… எல்லாம் நம்மப் பேத்திக்குத்தான்..”

“தாராள மனசுங்க உங்களுக்கு..” சுகன்யாவின் இன்றைய சொத்து மதிப்பை கூட்டி கழித்துப் பார்த்த சீனுவுக்கு உண்மையிலேயே சில வினாடிகள் பேச்சு வரவில்லை.

சிவதாணுவா கொக்கா…? வாழ்க்கையில் பழம் தின்று கொட்டைப் போட்டவராயிற்றே…? சுகன்யாவின் சொத்து விவரத்தை பேச்சோடு பேச்சாக சம்பந்தி வீட்டாரின் காதில் விழட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது பக்கத்தில் சற்று தள்ளி, சுந்தரி, கனகாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மல்லிகாவின் காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்து கொண்டிருந்தது.

“மீனா..!! .உங்கண்ணன் புடிச்சலும் புடிச்சான்… நல்ல புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கான்டீ.. அவன் காட்டுல சரியான மழைதான் போ…” சீனு மெல்ல முணுமுணுத்தான்.

“சீனு… நான் குபேரன் பெத்த பொண்ணுல்லே… என்னைக் கட்டினப் புடவையோட உன் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கே… மறந்துடாதே… ஞாபகமிருக்கட்டும்… என் அப்பாகிட்ட இந்த அளவுக்கு எதுவும் கிடையாது!!” மீனா அவனை முறைத்தாள்.

“கோச்சிக்காதடீ செல்லம்… சும்மா டமாசுக்கு சொன்னேன்…”

“ரொம்ப வழியறே.. சட்டுன்னு தொடைச்சுக்கோ” மீனா மெல்ல அவன் காதுக்கு மட்டும் விழுமாறு சீறினாள்.

***

செல்வா, சீனு, சுகன்யா மூவரும் வீட்டிற்கு வெளியில் காம்பவுண்டுக்குள் மெல்ல உலவியவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் தனது உறவுகளும், தனக்கு வரப்போகும் புதிய உறவுகளும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, நாளை காலை தனது மனதுக்குப் பிடித்தவனுடன், தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நிலையில், சுகன்யாவின் மனது இலவம் பஞ்சாகியிருந்தது.

என்ன ஆகுமோ? தன் மனதின் ஆசை நிறைவேறுமா? என்று மனதுக்குள் இருந்த அவசியமில்லாத இறுக்கங்கள், உளைச்சல்கள் எல்லாம் நீங்கியதால், சுகன்யாவின் முகம் பூரண நிலவாக ஒளி வீசிக்கொண்டிருந்தது.

நீல நிற கார் ஒன்று வீட்டுக்கு அருகில் வேகமாக வந்து நின்றது. சுகன்யா திரும்பிப் பார்த்தாள். நல்லசிவமும், ராணியும் காரிலிருந்து இறங்கி கை நிறைய மல்லிகைப்பூவுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். குனிந்த தலையுடன் சம்பத் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான். தன் குடும்பத்தின் நெருங்கிய உறவைக் கண்டதும், சுகன்யா சட்டென முன்னால் நகர்ந்து அவர்களை வரவேற்க ஓடினாள்.

“வாங்க வாங்க அத்தே… உள்ளே வாங்க மாமா… அவர்கள் இருவரையும் நோக்கி ஓடி, மரியாதையுடன் தன் கரங்களைக் கூப்பி வரவேற்றாள்.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.