கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

“நீங்க சுகன்யாவுக்கு எடுத்துட்டு வந்தப்புடவை கலர் அவளுக்கு ரொம்ப பொருத்தமா, அருமையா அமைஞ்சுப் போச்சு. அவ முகத்தைப் பாருங்களேன்!! மகிழ்ச்சியிலே என் பொண்ணு தங்கமா மின்னிக்கிட்டு இருக்கா.. என் பொண்ணு சந்தோஷத்தை பாத்து என் கண்ணே பட்டுறும் போல இருக்கு…” சுந்தரி பதிலுக்கு தன் வருங்கால சம்பந்தியை சகஜமாக புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“உண்மையை நான் சொல்லிடறேன். புடவை என் பொண்ணு மீனாவோட செலக்ஷன். என் அண்ணிக்கு நான் தான் செலக்ட் பண்ணுவேன்னு அவ அடம் பிடிச்சா… சரின்னு அவ இஷ்டப்படி விட்டுட்ட்டேன்; நான் சும்மா கடையில அவகூட நின்னுக்கிட்டு இருந்தேன்…”

“ம்ம்ம்…இன்னய இளசுங்க சாய்ஸ் நமக்கு புரிஞ்சாத்தானே?” சுந்தரி கண்ணை சிமிட்டி அவள் சொல்வதை ஆமோதித்தாள்.

“சுகன்யாவோட அளவு ஜாக்கெட்டு இல்லேயேன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்… ஆனா நீங்க, ரவிக்கைத் துணியை அழகா கட் பண்ணி,
“நீட் அண்ட் க்ளீனா’ தெச்சு, ப்ளவுசை ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணிட்டீங்களே…!! நீங்க ஸ்டிச்சிங்ல ஒரு எக்ஸ்பர்ட்ன்னுதான் சொல்லணும்…” மல்லிகா சுந்தரியை மனமாரப் பாராட்டினாள்.

இருதரப்பினருடைய மனதிலும் இருந்த இனம் தெரியாத இறுக்கம் நிச்சயதார்த்ததுக்குப் பிறகு வெகுவாக குறைந்திருந்தது. சம்பந்திகள் ஒருவர் மற்றவருடன் கும்பலாக கூடத்தில் உட்க்கார்ந்து கலகலவென மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“உங்களுக்கு எந்த குறையும் இல்லாம நல்லபடியா எல்லாக் காரியமும் நடந்து முடியணுமேங்கற படபடப்பும், பரபரப்பும் எனக்கு ஆரம்பத்துல கொஞ்சம் இருந்திச்சி… என் மைத்துனர் ரகுதான் எல்லாத்தையும் முன்னே நின்னு செய்து முடிச்சார். அவருக்கு நான் எல்லாவிதத்துலேயும் கடமை பட்டு இருக்கேன்..” ரகுவின் கையை குமார் பிடித்துக் கொண்டார்.

“நான் தூக்கி வளர்த்த பொண்ணோட கல்யாணம். நான் தானே எல்லாத்தையும் செய்யணும். ஆல் இஸ் வெல் தட்ஸ் எண்ட்ஸ் வெல்..” ரகு சிரித்தான்.

“சுகன்யா ஒரு நிமிஷம் இங்கே வாம்மா” மல்லிகா அவளை தன் பக்கத்தில் உட்கார வைத்து அவள் தோளில் கை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டாள்.

“சொல்லுங்க அத்தை…” சுகன்யா மல்லிகாவின் அருகில் நகர்ந்து அமர்ந்தாள். வெட்கப் புன்முறுவலுடன் அவள் தன் தலை குனிந்திருந்தாள். மல்லிகா அவள் முகத்தை நிமிர்த்தி கண்களில் பாசத்துடன் அவள் முகத்தை ஒரு முறை உற்று நோக்கினாள்.

“சுகன்யா…!! நான் உன்னை
“சுகு”ன்னு கூப்பிடலாமா?” மல்லிகா எதிரில் உட்க்கார்ந்திருந்த தன் மகனைப் பார்த்து சிரித்தாள்.

“அம்மா… செல்வா மட்டும்தான் சுகன்யாவை
“சுகு”ன்னு கூப்பிடலாம். நீ ஏன் என் அண்ணன் கூட இப்பவே போட்டிக்குப் போறே? மத்தவங்கல்லாம் என் அண்ணியை
“சுகா” ன்னு கூப்பிடற மாதிரி நீயும் கூப்பிடேன்..!!” மீனா உரத்த குரலில் சிரித்தாள்.

“உங்க இஷ்டம் அத்தே” சுகன்யா தன் உதட்டைக் கடித்துக்கொண்டு செல்வாவை நோக்கியவள் மீனாவின் கையை மெல்ல கிள்ளினாள்.

“சுகா, நான் வாங்கிட்டு வந்த புடவையும், செயினும் உனக்கு பிடிச்சிருக்காம்மா…?” சுகன்யாவின் வாயால் அவள் விருப்பத்தை மல்லிகா கேட்க விரும்பினாள்.

“ம்ம்ம்… ரொம்பத் தேங்க்ஸ் அத்தே.. புடவை கலர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த டிசைன்ல நான் ஒரு பட்டுப்புடவை வாங்கனும்ன்னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க எனக்கு வாங்கிக் குடுத்திட்டீங்க…!!” சுகன்யா முகத்தில் சிரிப்புடன் இப்போது தயக்கமில்லாமல் மல்லிகாவின் முகத்தை நோக்கிப் பேசினாள்.

“சுகா… கோபத்துல ஒண்ணு ரெண்டு தரம் ஏதோ அர்த்தமில்லாம உன் கிட்ட நான் கடுமையா பேசியிருக்கேன். அதையெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதேம்மா.” மல்லிகா கெஞ்சலாக பேசினாள்.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.