கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

“மிஸ்டர் செல்வா… ஒரு நிமிஷம்…” செல்வாவும் சீனுவும் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திரும்பினார்கள். சம்பத் தன் பைக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.

“மச்சான்… அவன் எது சொன்னாலும் பேசாம சரி சரின்னு தலையை ஆட்டிக்கிட்டு இரு… வீணா நீயா வாயைத் தொறக்காதே…” மீதியை நான் பாத்துக்கறேன். சீனு செல்வாவின் காதில் மெல்ல முணுமுணுத்தான்.

“யெஸ்…சொல்லுங்க சம்பத்…” சீனு தன் அருகில் இருக்கும் தைரியத்தில் செல்வா நட்புடன் புன்னகைத்தான்.

“உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்…”

சம்பத் ஒரு சிகரெட்டை கொளுத்திக்கொண்டான். அவன் சிகரெட்டைக் கொளுத்தும் போது அவன் விரல்கள் நடுங்கியதை சீனு தன் ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டான். ம்ம்ம்.. பையன் விரலெல்லாம் நடுங்குது…. இவன் மொகமே வேத்து விறுவிறுத்து இருக்கு; இப்பா தப்புத்தண்டாவா எதுவும் பேச மாட்டான்னுதான் தோணுது… சீனு மனதுக்குள் நிம்மதியானான்.

“இவர் சீனு… என் டியரஸ்ட் ஃப்ரெண்ட்.. நீங்க ஃபிரீயா பேசலாம்…”

“இஃப் யூ டோண்ட் மைண்ட் தென் இட்ஸ் ஆல் ரைட்…”

சம்பத் தன் கையிலிருந்த சிகரெட்டை வேக வேகமாக இழுத்தான். கடைசி இழுப்பை இழுக்கும் வரை அவன் பேசவில்லை. அவன் மனதுக்குள் சுகன்யா பூரணமாக குடியேறியிருந்தாள். சம்பத்… யூ ஆர் வெரி வெரி ஹேண்ட்சம் என சிரித்தாள். அவன் தன் தலையை இடம் வலமாக உதறிக்கொண்டவன் அவர்களை நேராகப் பார்ப்பதை கூடியவரைத் தவிர்த்தான்.

“மிஸ்டர் செல்வா… நான் உங்க கிட்ட சின்சியரா மன்னிப்பு கேக்க வந்திருக்கேன்… போன்ல சுகன்யாவைப் பத்தி நான் ரொம்ப தப்பா பேசிட்டேன்… அதை நெனைச்சு நான் ரொம்பவே வெக்கப்படறேன்.. வருத்தப்படறேன்.”

சீனுவுக்கு கதை நொடியில் புரிந்துவிட்டது. இவன் நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன்… இவன் யோக்கியமானவன்தான்… எதோ மூடுல சும்மா இருக்கற சங்கை எடுத்தி ஊதிட்டு இருக்கான்… ப்ப்ச்ச்ச்… என்னப் பசங்கப்பா…? சம்பத்தின் மேல் ஒரு நல்ல எண்ணம் சட்டென அவனுக்கு எழுந்தது.

“உங்ககிட்ட பேசின அன்னைக்குத்தான் ரொம்ப வருஷங்கள் கழிச்சி எங்க ரெண்டு பேரோட சந்திப்பு நடந்தது. நான் அவங்களை எட்டு வருஷமா காதலிக்கறேன்னு சொன்னதெல்லாம் சுத்தப் பொய்…”

“ப்ச்ச்.. ம்ம்ம்ம்…” அவன் தொடர்ந்து பேசமுடியாமல் நீளமாகத் தன் மூச்சை இழுத்துக்கொண்டான்.

“ப்ளீஸ்… கூல் டவுன் மிஸ்டர் சம்பத்…” செல்வா ஆதரவாக அவன் கையைப் பற்றிக்கொண்டான்.

“சுகன்யா என்னை யாருன்னு கேட்டுட்டு, அவங்க பாட்டி என்னை அவங்களோட மொறை மாபிள்ளைன்னு சொன்னதுக்கு அப்புறமும் எனக்கு கொடுக்க வேண்டிய சாதாரண மரியாதையை கூட காட்டாம, முகம் கொடுத்து பேசாம ரூமுக்குள்ள போயிட்டாங்கற எரிச்சல்ல, என்னை இன்ஸல்ட் பண்ணிட்டாங்கற தப்பான எண்ணத்துல, அர்த்தமில்லாத ஒரு வெறுப்புல, உங்களையும் அவங்களையும் நான் கன்னாபின்னான்னு பேசிட்டேன்..”

“இட்ஸ் ஆல்ரைட் மிஸ்டர் சம்பத்…” செல்வா அவன் தோளை மெதுவாக தொட்டான்.

“நான் உங்ககிட்ட திரும்பவும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னோட புத்தியில்லாத பேச்சுக்காக சுகன்யாவை உங்க வாழ்க்கையில எந்த சந்தர்ப்பத்திலேயும் நீங்க சந்தேகப் பட்டுடக்கூடாது. திஸ் இஸ் மை ஹம்பிள் ரெக்வெஸ்ட் டு யூ…” சீனுவுக்கு சம்பத்தின் குரல் தழுதழுத்தது போலிருந்தது.

“ம்ம்ம்..” செல்வா முனகினான்.

“உங்க திருமணத்துக்கு என்னை நீங்க இன்வைட் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்…” சம்பத் தன் முகத்தில் விரக்தியுடன் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டான்.

“நிச்சயமா… யூ ஆர் ஏ பெர்ஃபெக்ட் ஜெண்ட்ல்மேன்…” செல்வா அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

“ஆல் த வெரி பெஸ்ட் டு யூ.. மிஸ்டர் செல்வா…”

சம்பத் செல்வாவின் கையை ஒருமுறை அழுத்தமாக குலுக்கினான். அவனிடம் மன்னிப்பு கேட்டதும் தன் மனம் இலேசாகத் தொடங்கியதை அவன் தெளிவாக உணர ஆரம்பித்தான். அதே சமயத்தில் அவன் மனசுக்குள் சுகன்யா நுழைந்தாள். அவனிடம் வம்பு பண்ண ஆரம்பித்தாள்.

ஸாரி.. சம்பத்… நான் வேணும்ன்னு உங்கக்கிட்ட பேசாம போகலே… அந்த நேரத்துல நான் அப்செட்டா இருந்தேன். என் நிலைமை அந்த மாதிரி… புரிஞ்சுக்கோங்க…. தன் முல்லைப் பற்களை காட்டி, அவன் கல் மனதை தன் மோகனப்புன்னகை எனும் உளியால் மெல்ல செதுக்க ஆரம்பித்தாள். முறுவலித்தாள். மெல்ல சிரித்தாள். நகைத்தாள். மெல்ல மெல்ல திரையாடுவதைப் போல் ஆடி ஆடி மறைந்தாள். சம்பத் தன் முகத்தை சுளித்துக் கொண்டான்.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.