கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

சம்பத்.. இது என்னடா வேடிக்கை.. மனசை கல்லாக்குடா… சுகன்யாவோட நெனைப்பு இந்த நேரத்துல உனக்கு ஏண்டா வருது? அவ இன்னொருத்தனுக்கு சொந்தம்… நீ அவங்க நடுவுல ஏன்டா போறே?

சுகன்யாவுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்..!! இந்த நேரத்துல அவ மேல உனக்கு என்னடா இப்படி ஒரு ஈர்ப்பு? இதுக்கு என்னடா பேரு வெக்கப்போறே?

காதலா…?

நீ இதுவரைக்கும் காதல்ங்கற வார்த்தையைக் கேட்டாலே… விழுந்து விழுந்து சிரிக்கறவனாச்சே? இப்ப உன் மனசுல எங்கேருந்து இந்த சொல் வந்தது? காதல்… ஹா ஹா ஹா… சுகன்யாவை நிம்மதியா இருக்க விடுடா…

போதும்ம்பா சம்பத்…. நீ ஒரு தரம் அசிங்கப்பட்டது போதும்… பண்ணத் தப்பை முதல் தரமா உணர்ந்து உரியவன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேல்ல்லா… போய்கிட்டே இரு… ரிலாக்ஸ்… பீ ஃப்ரீ…. அண்ட் ஃபீல் ரிலாக்ஸ்ட்…

அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்… சுகன்யாதான் சொன்னாளே?
“செல்வா நீ கொஞ்சம் முந்திக்கிட்டேன்னு” … அவன் உன்னை முந்திக்கிட்டான்டா … உன் மனசைக் குழப்பிக்காதேடா… அந்த பொண்ணு மனசு தங்கம்டா.. அதை பித்தளையாக்க முயற்சி பண்ணாதேடா… அவன் மனம் அவனுக்கு போதிக்க ஆரம்பித்தது.

சம்பத் மனதுடன் போராடிக்கொண்டு, அவர்களைத் திரும்பிப்பார்க்காமல் நடந்து தன் பைக்கை வேகமாக உதைத்து கிளப்பி இருட்டில் மறைந்தான்.

“ரியலி… ஹீ இஸ் எ ஜெண்டில்மேன்..
“ சீனு மெல்ல முனகினான்.
நிகழும் மங்களகரமான தை மாதம் இருபதாம் தேதி வெள்ளிக் கிழமை, சுபயோகம், சுபநக்ஷத்ரம், கூடிய சுபதினத்தில், சுவாமிமலை வீற்றிருக்கும் சுவாமிநாதன் அருளால், இங்கு கூடியிருக்கும் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன், வந்திருக்கும் பந்து மித்திரர்கள் முன்னிலையில், சென்னையைச் சேர்ந்த சீமான் நடராஜன் அவர்களின் புதல்வன் சிரஞ்சீவி தமிழ்செல்வனுக்கும், சுவாமிமலை நிலக்கிழார் சிவதாணுவின் பேத்தியும், குமாரசுவாமியின் மகளுமான செல்வி சுகன்யாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம், சுபலக்கினத்தில் இனிதே நடந்தேறியது என புரோகிதர் படித்த நிச்சயதார்த்தப் பத்திரிகையை சம்பந்திகள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் அளித்து மாற்றிக்கொண்டார்கள்.

பிள்ளை வீட்டார் தரப்பிலிருந்து ஆசீர்வாதத்துடன் தரப்பட்ட பட்டுப்புடவையில், அவர்கள் பரிசளித்த தங்கச்சங்கிலியை அணிந்துவந்து சபையோரை நமஸ்கரித்து அனைவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட சுகன்யா சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

தமிழ்செல்வனும், பெண் வீட்டாரின் தரப்பிலிருந்து அவனுக்கு ஆசிர்வதித்து அளிக்கப்பட்ட பட்டுவேட்டி சட்டையில், கழுத்தில் பெண்வீட்டார் அணிவித்த மைனர் செயினுடன் முகமெங்கும் பொங்கும் பெருமிதத்துடன், வேணியும், மீனாவும் சுகன்யாவின் இருபுறமும் நின்றிருக்க, அவன் தன் காதலியின் விரலில் தான் கொண்டுவந்திருந்த மோதிரத்தை அணிவித்தான். உடன் தன் விரலில் சுகன்யா அணிவித்த மோதிரத்தை தடவி தடவிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி இனிதே முடிந்ததும், வந்திருந்த அனைவரும், அறுசுவை விருந்துடன், தாம்பூல அன்பளிப்புடன் முறையாக கவுரவிக்கப்பட்டனர்.

“சுகு… இந்த மாம்பழக்கலர் பட்டுப் புடவையிலே நீ அமர்க்களமா இருக்கேடீ..” செல்வா மாடியில் அவள் பின்னால் மெல்ல மெல்ல ஓசையெழுப்பாமல் பூனையைப் போல் நுழைந்தான்.

“இங்கே ஏன் வந்தீங்க நீங்க?”

“வந்தா என்னா…? என் மாமானார் வீட்டுல நான் எங்க வேணா வருவேன்… எங்க வேணாப் போவேன்..? நீ யாருடீ என்னைக் கேக்கறதுக்கு?”

“உங்களை யாரு கூப்பிட்டது இங்கே..? மாமானார் வீடாம்.. மாமானார் வீடு!!”

சுகன்யாவின் கண்களில் தான் நினைத்ததை சாதித்த பெருமையும், குரலில் கேலியும், தன்னை நிச்சயம் செய்து கொண்டவனின் மேலிருந்த ஆசையும் சேர்ந்து ஒலித்தன. சட்டென தன் இடது கை மோதிர விரலைப் பார்த்துக் கொண்டாள். நிச்சயதார்த்த சமயத்தில், கூடத்தில் எல்லோர் முன்னிலையிலும், செல்வா தன்னுடைய கிஃப்டாக அவளுக்காக ஆசையுடன் அவள் விரலில் போட்டுவிட்ட தங்க மோதிரம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.