கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

நல்லசிவத்தின் மனசு குளிர்ந்தது. சுகன்யாவோட நல்ல மனசுக்கு ஆண்டவன் இவளுக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை குடுக்கணும். அவர் சுகன்யாவை தன் மனசார வாழ்த்தினார். ம்ம்ம்… எனக்கு குடுப்பினையில்லே… இவளை என் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போறதுக்கு..

என் பையன் சம்பத் கூட சேர்ந்துக்கிட்டு சுகன்யாவை சரியா புரிஞ்சிக்காம, நானும் அவ திமிர்பிடிச்சவ, அகங்காரம் பிடிச்சவன்னு ஒரு நிமிஷம் தப்பான முடிவுக்கு வந்து, என் புருஷன் கிட்ட நேத்து அனாவசியமா சண்டைப் பிடிச்சேனே… சே.. நான் ஒரு படிச்ச பொம்பளையா? ராணியும் தன்னை மனதுக்குள் அந்த நொடியில் வெறுத்துக்கொண்டாள்.

“சம்பத்… இவர் செல்வா… என் வுட்பீ… என் கூட சென்னையில வொர்க் பண்றார்…” பளிச்சென தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்த சுகன்யாவின் முகத்திலிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல், அவள் கண் இமைகள் வேக வேகமாக துடித்ததை தன் மனதுக்குள் ஒரு பயத்துடன் ரசித்தவனாக சம்பத் செல்வாவின் கையை அழுத்தமாக பற்றிக் குலுக்கினான்.

இவ்வளவு மரியாதை தெரிஞ்ச சுகன்யாவை, என் வீட்டுக்குள்ள என் மருமகளா வரவேண்டிய இந்த தங்கத்தை நான் இழக்கிறேனே என்ற ஆதங்கத்துடன் ராணி தன் மனதுக்குள் அரற்றினாள். அதே சமயத்தில் சுகன்யாவின் வெள்ளை மனது புரியவந்த மகிழ்ச்சியில், தன் மனசு பூரிக்க, ராணி, சுகன்யாவின் இடுப்பில் தன் கையை தவழவிட்டு அவளைத் தன் புறம் இழுத்தாள்.

சுகன்யா நீ நல்லாயிருக்கணும்ம்மா…!! காட் ப்ளெஸ் யூ… தன் மனசார அவளை வாழ்த்தியவள், கையிலிருந்த பூவை மொத்தமாக அவள் தலையில் சூட்டினாள். அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.
“மச்சான்…நான் சொன்னது சரியாப் போச்சாடா? சுகன்யாவை நீ அனாவசியமா சந்தேகப்பட்டியே?”

சீனு தன் கையிலிருந்த சிகரெட்டை தன் உதடுகளில் பொருத்தி, ஒரு முறை நீளமாக இழுத்து புகையை நிதானமாக நெஞ்சிலிருந்து வெளியேற்றினான். தெருமுனையிலிருந்த பெட்டிக்கடைக்கருகில் நின்று அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“தப்புதாண்டா.. சாயந்தரத்துலேருந்து நானும் பாக்கறேன்… இதையே சொல்லி சொல்லி, என்னை ஏன்டா, திரும்ப திரும்ப வெறுப்பேத்தற நீ?” செல்வா புலம்பினான்.

“மச்சான்… அந்த சம்பத்தை நல்லா கவனிச்சியா… அவன் ஆளு கொஞ்சம் கருப்புத்தான்… ஆனா, ராஜா மாதிரி லட்சணமா இருக்கான்டா… எந்த பொண்ணையும் அவன் நெனச்சா, தன் கிட்ட விழ வெக்கிற ஒரு பர்சானலிட்டி… ஒரு அட்ராக்ஷன்… அவன் கிட்ட இருக்குடா..” சீனு வஞ்சனையில்லாமல் அவனைப் புகழ்ந்தான்.

“ஆமாண்டா… இதுக்கு நீ என்னை செருப்பால அடிக்கலாம்டா… சுகன்யாவை கட்டிக்கற அளவுக்கு எனக்கு பர்சனாலிட்டி இல்லேங்கறியா? கொஞ்சம் வுட்டா… நீயே சுகன்யாவை அவன் கையில தாரை வாத்துக் குடுப்பே போல இருக்கே…”

செல்வாவுக்கு சீனுவின் பேச்சில் இருக்கும் கசப்பான உண்மைகள் பலசமயங்களில் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. இன்றோ சீனுவின் பேச்சு அவனுக்கு தாங்கமுடியாத அளவிற்கு மகா எரிச்சலைக் கொடுத்தது.

“உள்ளதை சொன்னா.. நீங்கள்ல்லாம் காண்டாயிடுவீங்களே” சீனு மீண்டும் நீளமாக சிரித்தான்.

“சரிடா… மாப்ளே… உன்னை நான் கையெடுத்து கும்பிடறேன்… இப்ப என்னை நீ என்னதான் பண்ண சொல்றேடா?”

“முடிஞ்சா இன்னைக்கு ராத்திரியே நீ உன் ஆளு கழுத்துல திருட்டுத் தாலியைக் கட்டிடு… இல்லேன்னா… அவன் உன் ஆளை தூக்கிட்டுப்போய் தாலி கட்டிடுவான்…. அவ்வளதான் நான் சொல்றதெல்லாம்..”

“ஏண்டா என்னை இப்படி உசுப்பேத்தற நீ?”

“நம்ம பெங்களூரான்… அதான்டா உனக்கு ஆப்பு வெச்சானே அவனைத்தான் சொல்றேன்…. உன் ஆளு அவன் கிட்ட ஸாரீன்னு சொன்னவுடனே… சுகன்யா மொகத்தைப் பாத்து அவன் ஒரு லுக் வுட்டான் பாரு… சுகன்யாவைத் தவிர வேற எவளாயிருந்தாலும் உன்னை அம்போன்னு வுட்டுட்டு, இன்னேரம் அவன் பின்னாடியே போயிட்டு இருப்பா…”

“என்னடா சொல்றே நீ”

“அவன் சுத்தமா உன் ஆள்கிட்ட விழுந்துட்டாங்கறேன்.. அவன் உன் ஆளை பாத்தப் பார்வையிருக்கே… எனக்கு என்னாத் தோணுதுன்னா… அந்த செகண்ட்லேருந்து அந்த சம்பத் உன் ஆளை காதலிக்க ஆரம்பிச்சிட்டான்னு சொல்றேன்…”

“சே.. வாயைக் கழுவுடா… என் சுகன்யா அந்த மாதிரிப் பொண்ணு இல்லே… என்னைத் தவிர வேற யாரையும் இந்த ஜென்மத்துல அவ திரும்பிப் பாக்க மாட்டா…”

“டேய்.. நீ ஒரு மக்குப் புண்ணாக்குடா… எப்பவும் சொல்றதை புரிஞ்சிக்கமாட்டீயே? உன் ஆளு அவனை பாக்க வேணாம்டா… ஆனா சுகன்யாவை யாரும் நிமிர்ந்து பாக்கக்கூடாதுன்னு ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம்… நீ என்னா சட்டமா போட முடியும்ன்னு கேக்கறேன்?

“சரி…சரி…நீ சொல்றது எனக்கு புரியுதுடா மாப்ளே… வந்திருக்கறது புது எடம்… நம்பளை தேடிக்கிட்டு பொண்ணு வீட்டுக்காரங்க வந்துடப் போறாங்க…” செல்வா அவனை இழுத்துக்கொண்டு ரகுவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

***

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.