28 வயது அழகுப் புயல் – பாகம் 35 139

ஆனந்த் தன் கொழுந்தியாளை நன்றாகப் பார்த்துக்கொண்டார். நீ எத்தனை நாள் வேணுமானாலும் இங்கே இருக்கலாம். உனக்கு என்ன வேணும்னாலும் ஒரு வார்த்தை மட்டும் சொல்லு. உடனே வாங்கிட்டு வந்திடுறேன்.

தேங்க்ஸ் மச்சான்.. என்றாள். வீணாவும் அவரும் சண்டை போடாமல் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசித்தாள். ராஜ் ஏன் ஆனந்த் போல் நடந்துகொள்ள மாட்டேங்குறான் என்று வருத்தப்பட்டாள்.

ஒருவாரம் ஆகியும் வீணாவால் மலரை சமாதானப்படுத்த முடியவில்லை.

அவன் வந்து நான்தான் முக்கியம்னு சொல்லி கூப்பிட்டாத்தான் போவேன். இனிமேல் என்னை அவங்க முன்னாடி திட்டமாட்டேன்னு அவன் சொன்னாத்தான் போவேன்

மோகனும் பத்மாவும், நிஷாவும், ராஜ்ஜிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள்.

என் மேல தப்பிருந்தாத்தானே நான் இறங்கிப் போகணும்? பொட்டச்சிக்கு இவ்ளோ திமிரா? என்றான்.

நிஷாவுக்கு, தன்னிடம் எப்போதும் தன்மையாக நடந்துகொள்ளும் கண்ணனின் ஞாபகம் வந்தது. தனிமையில் அழுதாள். அவரிடம் இவள்தான் அடிக்கடி கோபப்பட்டிருக்கிறாள். எரிந்து விழுந்திருக்கிறாள். அவரோ, ராஜ் மாதிரி…. எப்பொழுதும் எடுத்தெறிந்து பேசியது கிடையாது.

அன்று –

வீணா வருத்தத்தோடு(?) போய் ராஜ்ஜை சந்தித்தாள்.

நிஷா, கார்டனை ஒட்டிய ஷெட்டில், பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். இங்கே – வீட்டுக்குள் – வீணா, பத்மாவிடம் நலம் விசாரித்துவிட்டு, ராஜ்ஜை பார்க்கணும்.. என்றாள்.

ராஜ், தன் பெட் ரூமில், ஆபிஸ் விஷயங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, காமெடி க்ளிப்ஸ் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஹேய் வீணா…. வா வா

வீணா தன் தங்கைக்காக தயங்கித் தயங்கிப் பேசினாள்.

ஸாரி ராஜ்.. அவ பிடிவாதமா இருக்கா. நீங்கதான்…. கொஞ்சம் இறங்கிப் போகணும்

அம்மாவிடமும் தங்கையிடமும் எரிந்து விழுந்த ராஜ், வீணா வந்து சொல்லும்போது, அமைதியாகக் கேட்டான். அவளை நிமிர்ந்து பார்த்தான்.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.