28 வயது அழகுப் புயல் – பாகம் 35 140

அவரை எதுவும் செய்யாதேண்ணா…. நிஷா பதறிக்கொண்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

இது அநியாயம். டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒரு வருஷம் முடியறதுக்குள்ள நீங்க இப்படிப் பண்ணது அநியாயம்

அவன் கண்ணனைப் பார்த்துக் கத்த, அவர் அமைதியாகச் சொன்னார். நிஷா வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும் நான் மன்னிச்சு ஏத்துக்கிட்டிருப்பேன் ராஜ். வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும்!

இதுக்கு காரணம் நீங்க. நீங்க அவளை கவனிக்காம விட்டுட்டு அவளை குத்தம் சொல்றீங்களா. உங்கள….. – அவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவரை சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

அண்ணா ப்ளீஸ். வா போகலாம்.

நிஷா அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டே திரும்பி நடந்தாள். அவருடைய தப்பு… திருத்தக்கூடியது. தன்னுடைய தப்பு… திருத்த முடியாதது.

என்ன நிஷா இப்படி ஆகிடுச்சு? என்றான் ராஜ். அவர் மேல கேஸ் போடப்போறேன் என்றான்.

அந்தப் பொண்ணு காவ்யா பாவம்ணா. அவ வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல.

நிஷா நீ ரொம்ப நல்லவ. உனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது. நீ எப்படிம்மா தப்பு பண்ணுன?

என் நிலைமைக்கு சீனு மட்டும் காரணம் இல்லைண்ணா. நானும்தான் காரணம். என் ஆசைகளை புருஷன்கிட்ட தனிச்சிக்கணும்னு நினைக்காம, அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்காம சுலபமா ஒரு வழி கிடைச்சதேன்னு படுகுழில போய் விழுந்துட்டேன். என்ன மன்னிச்சிடுண்ணா உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

இப்போ.. நான் கர்ப்பமா இருக்கவேண்டியது!!! – அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவள் அழுகை அவன் நெஞ்சைப் பிளந்தது.

அவனுக்கு என்னென்னவோ தோன்றியது. சீனு… நிஷாவை பற்றி தப்பாக யாரிடமும் சொல்லவில்லை. அவளை வீடியோ எடுக்கவில்லை. பின்னாடி அவளை மிரட்டலாம் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால்… அவன் நிஷாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. நிஷாவை மட்டுமே நினைத்துக்கொண்டும் இல்லை. கையில் வந்து விழுந்தால் லாபம் என்று இருந்திருக்கிறான். நிஷாவை நல்லா யூஸ் பண்ணியிருக்கிறான். என் தங்கையின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறான். இதையெல்லாம் கவனிக்காமல் நான்… ச்சே… இனிமேலும் இப்படி இருந்துவிடக்கூடாது.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.