28 வயது அழகுப் புயல் – பாகம் 35 140

மச்சி…. நான் சாந்தியை பார்த்துக்க வேண்டியிருக்கு. நீதான் அகல்யாவை பாண்டிச்சேரி கூட்டிட்டுப் போகணும்.

டேய்.. அதுக்கெதுக்கு அகல்யா. நான் மட்டும் போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன். அவனை எப்படியாவது கூட்டிட்டு வரேன்

இல்லங்க. அவன் ஏதோ இக்கட்டான சூழ்நிலைல இருக்கிறான். அவங்க அவனுக்கு போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண ஏற்பாடு பன்றாங்க. நான் போய் நின்னாத்தான் அவங்க வீட்டுல எங்க காதலை புரிஞ்சுப்பாங்க. என்னைப் பார்த்ததும் அவனும் ஸ்ட்ராங்கா ஒரு முடிவு எடுப்பான்.

வேணாங்க.. நீங்க ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். அதோட… உங்க வீட்டுல உங்களை தேடுவாங்க.

நான் நவீனை பார்க்கணும்….. ப்ளீஸ் – அவள் அழுதாள்.

ச்சே.. இந்தப் பொண்ணு அவன்மேல உயிரையே வச்சிருக்கா.

பாண்டிச்சேரில எந்த இடம்?.. என்றான் பரத்திடம்.

தெரியாது. அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டேன்.

நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். தனியாவே போறதா முடிவு பண்ணிட்டா. வீட்டுல லெட்டர் எழுதி வச்சிட்டு வந்துட்டாளாம்..

சீனுவுக்கு, அவளுடைய காதலையும், மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

எந்த வழியிலும் அவனை ரீச் பண்ண முடியல சீனு… என்றான் பரத்.

சரி மச்சி… நான் போய் என்னன்னு பார்க்குறேன். நான் அங்கதான் போயிருக்கேன்னு யாருக்கும் சொல்லாதீங்க

சரிடா என்றான் பரத்.

அகல்யா.. கண்ணீரை துடைத்துக்கொண்டு, வேகம் வேகமாக ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

கண்ணன் வீட்டில் –

போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திடலாம் என்றார் கண்ணன். அகல்யா லெட்டர் எழுதிவிட்டு ஓடிப்போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. காவ்யா அவளை எல்லா இடங்களிலும் தேடி நொந்துபோயிருந்தாள்.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.