28 வயது அழகுப் புயல் – பாகம் 35 139

நிஷாவின் குணத்துக்கும் அழகுக்கும் ஊரில் ஒரு நல்ல கணவன் கண்டிப்பாகக் கிடைப்பான்.

நீ கவலைப்படாதே நிஷா. தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்குறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்க அமைச்சுத் தருவோம்…. என்றான்.

சீனு –

அன்று, வீட்டிலிருந்து வெளியேறி, பெங்களூர் போய்விடலாம் என்று ஓடியவனுக்கு, நண்பன் பரத்திடம் இருந்து போன் வந்தது.

மச்சி எங்க இருக்க

பஸ் ஸ்டாண்டு போயிட்டிருக்கேண்டா. பெங்களூர் போகப்போறேன்

டேய்… போயிடாத. நீ உடனே என் வீட்டுக்கு வா

எதுக்கு?

முக்கியமான விஷயம். வீட்டுக்கு வா சொல்றேன்.

பரத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே அவனது மனைவி சாந்தியின் பக்கத்தில், ஒரு அழகான பெண்… அழுதுகொண்டிருந்தாள். இவ நவீனோட லவ்வராச்சே! அவன் காட்டுன போட்டோல…நல்லா க்யூட்டா சிரிச்சிக்கிட்டு இருந்தா. இப்போ அழுறாளே

என்னாச்சுடா?.. என்றான்.

நவீன் அவனோட தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பாண்டிச்சேரி போனான். என்ன நடந்ததோ தெரியல. என்கேஜ்மென்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.

மை காட்!

அவங்களை மீறி அவனுக்கு எதுவும் பண்ண முடியல போல. அகல்யாவுக்கு போன் பண்ணி ஸாரி சொல்லியிருக்கான்.

அகல்யா குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள்.

பாவம் அகல்யா, அவனை சின்சியரா லவ் பண்ணியிருக்கா… என்றாள் சாந்தி

சீனு வேகம் வேகமாக தன் போனை எடுத்தான். நவீன் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.

எப்போ போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆப்னுதான் வருது. அகல்யா அவனை பார்த்தே ஆகணும்னு சொல்றா. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா – சாந்தி வருத்தமுடன் சொன்னாள்.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.