யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 168

அம்மா ” ரவி நம்ம கிட்ட முதல் முறையா பொய் சொல்ல ஆரமிச்சிருக்கான்” என தேனின் தலையை வருடினாள்

தேன் ” என்னம்..மா.. சொல்ர.. புரியிர மாதிரி சொல்லேன்” என எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அம்மா ” இல்லடி. .. ரவி டூருனு.. சொன்னானே..”

தேன் ” ஆமா… ஸ்கூல்ல கூட்டிட்டு போறாங்க..”

அம்மா ” இல்ல தேனு. . அவன் பொய் சொல்லிருக்கான்”

தேன் ” மா… நீ எப்டி சொல்ற ”

அம்மா ” ரவிய ஸ்கூல்ல சேக்கும் போதே .. அங்கெல்லாம் ஸ்கூல் நிர்வாகம் சார்பா எந்த டூரும், வெளியூர் ப்ரோகிராமும் இருக்காதுன்னு சொன்னாங்க ”

தேன் ” அப்படியா. .. சார். . நம்ம கிட்டியே பொய் சொல்ற அளவுக்கு போய்ட்டானா… நீ தெரிஞ்சும்.. எதுக்குமா பர்மிஷன் கொடுத்த”

அம்மா ” பர்ஸ்ட் டைம் என்கிட்ட கேட்டுருக்கான். .. அதான்…”

தேன் ” அப்பரம் ஏன்மா சோகமா இருக்க ”

அம்மா ” இருந்தாலும் மனசு ஒரு மாதிரி இருக்குடி”

தேன் ” அப்படியா. . சரி என்கூட கிளம்பு”

அம்மா ” எங்கடி”

தேன் ” எதுவும் பேசகூடாது. . வா என்கூட”

இருவரும் வீட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு நடந்தனர்.. 7 நிமிடம் பயணம்தான். .

மாலை 6:15 மணி:

குமார் ” என்னடா ஒரு பாண்டிச்சேரி பஸ்ஸ கூட கானும். . மத்த டைம்ல இங்க எவ்வளவு பஸ் இருக்கும் …சே ” என சலித்துகொண்டான்.

ரவி ” டேய் குமாரு டென்சன் ஆகாத டா”

செல்வம் ” ஆமா குமாரு… கூல்டா… சூப்பரா ப்ளான் போட்டு .. சக்ஸஸ் பன்னிருக்கோம் .. இன்னும் கொஞ்ச நேரத்துல செம என்ஜாய் தான்” என குதுகளித்தான்

15 நிமிடம் கழிந்தது.. மூவரும் புதுச்சேரி பேருந்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். . அப்போது ரவி பின்னால் இருந்து ” இன்னும் பஸ்ஸு வரலையாடா..” இது தேன்மொழி தான்..

ரவியும் மற்ற இருவரும் திரும்பி பார்த்ததும் அதிர்ந்தனர். அங்கே தேன்மொழியும் அம்மாவும் இருந்தனர்.. ரவிக்கு பொய் கூறி மாட்டி கொண்டோம் என தலைகுந்து அமைதியாக இருந்தான்.. மற்ற இருவரும்.. போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததில் வேறுப்பில் இருந்தனர்.

3 Comments

  1. Next epo

Comments are closed.