யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 167

தேன் ” . .. சேன்ஸே இல்ல. . எப்டி சூப்பரா எங்கள எமாத்திட்ட”

ரவி மெதுவாக ” அக்கா. . நான் பன்னது தப்புதான்..கா…. எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் வாங்க ” முன்னே நடந்தான்.

அம்மா ” ரவி. .. ” என அவனை அழைத்தாள்

ரவி ” சாரி…ம்மா என்ன மன்னிசிடுங்க..” என முகத்தை பார்க்காமல் கூறினான்

அம்மா அவனருகில் சென்று கையை பிடித்து ” ம்… அப்பரம்… ரவி… டூரு.. மூனு நாளுதானே…* பத்திரமா போய்ட்டு வரனும்.. னெ… ” என கையில் மூனாயிரம் ரூபாய்வை தினித்தாள்

ரவிக்கு நம்ப முடியவில்லை இது கனவா இல்லை நினைவா என்று..

தேன்மொழி மற்ற இருவரை பார்த்து ” பயப்படாதிங்க டா… நீங்க பாண்டிச்சேரிக்கு போலாம்.. அந்த கடையில போய் தண்ணி பாட்டிலும் நைட்டுக்கு உங்க மூனு பேருக்கும் சாப்பிட வாங்கிங்கோங்க… இந்தா..” இரண்டு நூரு ரூபாய் நோட்டை நீட்டினாள்..

செல்வம் ” இருக்கட்டும். ..கா… என்கிட்ட காசு இருக்க நான் வாங்கிட்டு வரேன்”

தேன் ” டேய். .. காச வாங்குடா.. ” என மிரட்டினாள்

செல்வம் ” சரி…கா… சரி…கா..” என பயந்து பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்கு குமாரை கூட்டிக்கொண்டு சென்றான் .. பின்பு தேன்மொழியும் ரவி அருகில் வந்தாள்.

தேன் ” டேய் அம்மாக்கு… மொதல்லையே நீ பொய் சொல்றனு..தெரிஞ்சும் உனக்கு டூருக்கு பர்மிஷன் கொடுத்திருக்காங்க.. அதனால பாத்து பத்திரமா இருக்கனும் புரிதா..”

ரவி அமைதியாக ” ம்… ” என கூறினான்.. இருந்தாலும் அவன் மனது பொய்கூயிவிட்டோமே என வருத்தப்பட்டு திடீரென அம்மாவை ” சாரி மா. ..இனிமே சத்தியமா பொய் சொல்ல மாட்டேன்..மா” கட்டி பிடித்து கொண்டான்

அங்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பற்றி கவலைப்படாமல் ரவி.. இருக்கமாக அம்மாவை கட்டிபிடித்து கொண்டிருந்தான்.

தேன் ” டேய். ..ரவி. . இது வீடு இல்ல டா.. பஸ் ஸ்டாண்ட்.. அம்மா வ விடுடா.. எல்லாரும் பாக்குறாங்க.. ” அவர்கள் இருவரையும் பிரிக்கும் முயற்சியில் அக்கா ஈடுபட்டாள்

3 Comments

  1. Next epo

Comments are closed.