யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 168

குமார் ” என்னடா. .. எதுக்கு கூப்ட.. எதாவது வாஙகிட்டு வரனுமா..”

ரவி ” டேய்… நாம செமயா… மாட்டுனோம் டா… ”

செல்வம் ” என்னாச்சி டா… எதுக்கு இந்த மாதிரி சொல்ற”

ரவி ” அங்க பாரு டா… வாசலுக்கு பின்னாடி.. நம்ம ஸ்கூல் ..பீட்டி மாஸ்டர் இருக்காரு டா” என நடுங்கி கொண்டே கூறினான். அதிர்ச்சியில் மற்ற இருவரும் புலம்பி கொண்டிருந்தனர்.

ரவி ” டேய் பொலம்பாம.. நானு… பஸ்ல இருந்து இறங்க எதாவது ஐடியா சொல்லுடா.. ”

குமார் ” டேய் ரவி. .. நி இப்ப கிழ இறங்கி … மாட்டிகிட்டா… மொத்த ப்ளானும் குலோஸ் … அதனால நான் சொல்லர மாதிரி கேலு..”

ரவி ” ம். .. சீக்கிரம் சொல்லுடா… எனக்கு பக்கு பக்குனு இருக்கு”

குமார் ” ரவி. .. நீ இந்த பஸ்ஸுலியே பாண்டிச்சேரிக்கு போய் பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பன்னு.. நாங்க பின்னாடியே அடுத்த பஸ்ல வரோம் எதுவாக இருந்தாலும் அங்க போயி எனக்கு கால் பன்னு” என கூறி ரவியிடம் அவன் மொபைல் எண்னை எழுதி ரவியிடம் கொடுத்தான்.

ரவி ” நீ…. எப்படா ஃபோன் எடுத்துட்டு வந்த..”

குமார் ” ஆமான்டா. . ஸ்கூல் டூருனு சொன்னதும்.. வீட்ல கொடுத்தாங்க… நீ கால் பன்னு.. நாங்க பின்னாடியே வரோம்…. பீட்டி மாஸ்டர் கண்ல மட்டும் பட்டுடாத ” என எச்சரித்தான்.

ரவி ” சரி டா.. நான் பாத்துக்குறேன்.. ” என்றான்…

மாலை 6:20 மணி

பேருந்து புறப்பட்டது. பேருந்து காலியா இருந்ததால் ரவி தன்னை மறைத்து கொள்ள முன்று பேர் அமரும் இருக்கையில் படுத்துக்கொண்டான். அப்படியே தூங்கியும் போனான். இரவு 10 மணிக்கு பேருந்து பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது. ரவி அனைவரும் இறங்கியதும் கடைசியாக சுற்றுமுற்றும் பார்த்து ஜாக்கிரதை யாக இறங்கினான். . அந்த பீட்டி மாஸ்டரை தேடினான்..* ரவி கண்ணில் படவில்லை.. நல்ல வேலை என நினைத்து கொண்டான்.. அருகில் இருந்த ஒருவரிடம் கைபேசி கேட்டு குமாரின் எண்ணிற்க்கு முயற்சித்தான். அவன் எடுக்கவில்லை. . மீண்டும் மீண்டும் முயற்சித்தான் நான்காவது அழைப்பில் குமார் எடுத்தான்.

ரவி ” டேய். .. குமாரு. . ஃபோன் எடுக்க ஏன்டா இவ்வளவு நேரம். . நான்.. இங்க வந்துட்டேன். . நீங்க எங்கடா வரீங்க ..” என்றான்

குமார் ” ரவி. .. இங்க பெரிய விஷயம் நடந்துருச்சிடா. .”

ரவி ” என்னடா சொல்ற. .. என்னஆச்சி…அங்க..”

குமார் ” நீ பஸ்ல போனதும் .. செல்வம்.. வீட்ல.. கூட்டுகுடும்பமா… இருக்குற அவங்க பெரியப்பா இறந்துட்டார்னு* கால் வந்துது…”

ரவி ” ஹய்யோ.. அப்புறம் என்னாச்சி..டா..”

குமார் ” அதான் நாங்க கிளம்பி இங்க வந்துட்டோம்… சரி.. நான் சொல்ற நம்பர நோட் பன்னிக்கோ 989*****99 ”

ரவி ” சரி டா. .. நம்பர நோட்.. பன்னிகிட்டேன்.. நீ.. எப்ப இங்க வர”

குமார் ” சாரி..டா… என்னால வரமுடியாது. .அந்த நம்பருக்கு கால் பன்னு அவங்க எல்லாமே பாத்துப்பாங்க.. நீயாவது என்ஜாய் பன்னுடா.. நான் வைக்கிறேன்டா..” அழைப்பை துண்டித்தான்.

ரவி ” டேய் டேய் டேய். .. குமாரு ” என கத்தினான்.. பாவம் அவனால் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. . இதற்கு முன்பு தனியாக இவ்வளவு தூரம் பயணித்தது இல்லை. . இப்போது குமார் வேறு தனியாக கடற்கரை விடுதியில் தங்க சொல்கிறான் அதுவும் ஒரு பெண்ணுடன். . ரவிக்கு இங்கயே இருக்கலாமா அல்லது காஞ்சிபுரம் த்திற்கும் சென்றுவிடலாமா..

3 Comments

  1. Next epo

Comments are closed.