நண்பனின் காதலி – 3 93

பின் அவள் ஹாஸ்டல் போயி நிப்பாட்டினான் .நீ வெளியேவ இரு நான் எல்லா திங்க்ஸ்ம் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனாள் .விக்கி சே என்று தலையை ஸ்டீரிங்கில் சாய்ந்து அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான் .பின் அவன் கார் சன்னல் தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து கதவை திறந்தான் .
ஹலோ நீதான் மக்கியா என்று அஞ்சலி கேட்டாள் .அவன் என்னது மக்கியா என்று புரியமால் முழித்து கொண்டு இருக்க அவள் பின்னாடியே சுவாதி வந்து மக்கி இல்லாக்கா விக்கி என்றாள் .ஏதோ ஒன்னு என்று சொல்லி விட்டு கார் டிக்கியை திற திங்க்ஸ் வைக்கணும் என்றார்கள் .பின் அஞ்சலியும் சுவாதியும் ஹாஸ்டலில் இருந்து மாற்றி மாற்றி திங்க்ஸ் கொண்டு வந்து வைத்து காரில் வைத்தனர்
எல்லா பொருள்களையும் வைத்த பின் சுவாதி அஞ்சலியிடம் ஓகேக்கா நான் போறேன்க்கா என்றாள் அழுது கொண்டே .போறேன் சொல்லாதேடி போயிட்டு வரேன்னு சொல்லு என்றாள் அஞ்சலி ,அவள் அழுது கொண்டே மெல்ல சிரித்து விட்டு சொன்னாள் .இனி எங்கிட்டு இங்க வர போறேன் .குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்படியே கனடா போ போறேன் என்று சொல்லிவிட்டு ரொம்ப அழுதாள்.

சரி சரி அழுகாத அக்கா இங்கதான் இருக்கேன் எப்பனாலும் எனக்கு போன் போடு உடனே நான் வந்துடுறேன் என்றார்கள் .சரிக்கா என்று சொல்லி விட்டு இருவரும் கட்டி பிடித்தனர் .பின் அஞ்சலி அவள் கண்ணீரை துடைத்து விட்டு விக்கியை முறைத்து பார்த்து கொண்டே சொன்னாள் அந்த ராஸ்கல் எப்ப என்ன பிரச்சின பண்ணாலும் சொல்லு உடனே நான் போலிச கூப்பிட்டு அங்க வந்துறேன் என்றார் .சுவாதியும் சிரித்து கொண்டே சரிக்கா என்றாள் .

அவர்கள் இருவரும் விக்கிக்கு கொஞ்சம் தொலைவில் நின்று பேசியாதல் விக்கிக்கு அவர்கள் பேசியது கேக்கவில்லை .ஆனால் சுவாதி அழுவதும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து ஆறுதல் சொல்வதும் மட்டும் அவனுக்கு புரிந்தது .

என்னடா இது என்னமோ இவ கட்டி கொடுத்து புருஷன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி அழுகுறா அவ என்னமோ சொந்த தங்கச்சிய அனுப்புற மாதிரி ஆறுதல் சொல்றா இதல்லாம் ரொம்ப ஓவர்டி ரெண்டு பேருக்கும் என்று மனதிற்குள்ளே கிண்டல் அடித்தான் .ஆனால் அந்த அஞ்சலி வந்ததிலிருந்து அவனை கோபமாக முறைப்பது அவனுக்கு தெரிந்தது .

நான் வேணும்னா வந்து அந்த பொறுக்கிய கொஞ்சம் மிரட்டவா என்றாள் அஞ்சலி .வேணாம்க்கா பாவம் நான் மிரட்டனதுக்கே ஸ்கூல் பையன் மாதிரி பயந்து போயி கிடக்கான் .இனி நீங்க வேற மிரட்டுன்னிங்க பயத்துல பெண்ட்லே உச்சா போயிடுவான் என்று சொல்லி சிரித்தாள் .இரண்டு பேரும் விக்கியை ஒரு நிமிடம் உத்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,அதை பார்த்த விக்கி என்ன இவளுக நம்மள ஏதும் ஒட்டுராலுகள என்று நினைத்தான் .

நீ வேணும்னா பாரு உனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் கண்டிப்பா மாறி உன்னையே பிடிச்சுருக்குன்னு சொல்வான் என்றாள் அஞ்சலி .வேணாம் அக்கா அவன் அப்படியே இருக்கட்டும் நான் இப்படியே இருக்கேன் அத ரெண்டு பேருக்கும் நல்லது என்றாள் சுவாதி

ஏண்டி உனக்கு அவன் மாறுனா பிடிக்காதா .என்றார் அஞ்சலி .பாவம் அக்கா அவன் தப்பு எல்லாம் என் மேலதான் என்னையே காப்பாத்த போயி நானா அவன் கிட்ட தப்பா நடந்து அதனால அவன் பெஸ்ட் பிரண்ட பிரிஞ்சு ரொம்ப கஷ்டபட்டுடான்