கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

சுந்தரியும் தான் செய்த இட்லியையும், குருமாவையும், தனித்தனி ஹாட்பேக்கில் வைத்து மூடிவிட்டு, காஃபிக்கு பாலை காய்ச்சி ஃப்ளாஸ்கில் ஊற்றிக்கொண்டிருந்தாள். சுகன்யா குட்டி போட்ட பூனையைப் போல் குறுக்கும் நெடுக்குமாக தன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். தன் கையை திருப்பி திருப்பி வாட்ச்சில் மணியைப் பார்த்தாள். ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்னவனை இன்னும் காணோமே? என்னப் பண்றான் அவன்? நம்ம வீட்டுக்கு அவனுக்குத் வழி தெரியும்? அப்புறம் என்ன பிரச்சனை? இன்னும் ஏன் அவனை காணவில்லை. அவன் வீட்டுல ஏதாவது உளறி அவங்க அம்மா ஏதாவது டென்ஷன் குடுக்கிறாங்களா? பால்கனியில் சென்று தெரு மூலையைப் நொடிக்கொரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள். அன்று காலை எழுந்ததிலிருந்தே தன் மனம் அவசியமில்லாமல் பரபரத்துக் கொண்டிருப்பதாக சுகன்யாவுக்கு பட்டது. இதுக்கு என்ன காரணம், நான் என்ன எதிர்பார்க்கிறேன். இந்த செல்வா இன்னும் ஏன் வரலே? எப்பவும் பங்க்சுவுல வர்றவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? சுகன்யாவால் அமைதியுடன் இருக்க முடியாமல் மாடி பால்கனியில் நடை போட்டுக்கொண்டிருந்தாள்.
“சுகன்யா, வந்து உக்காரும்மா அவர் வந்துடுவாரு, இல்லன்னா ஒரு தரம் போன் பண்ணி பாரேன்.” பெண்ணின் தவிப்பை உணர்ந்த தாய் மெதுவாக பேசினாள்.
“அஞ்சு தரத்துக்கு மேலப் பண்ணிப்பாத்துட்டேன்ம்மா, நாட் ரீச்சபிள்ன்னு வருதுமா… என்னமோ தெரியலமா … என் வலது கண்ணு துடிச்சிக்கிட்டே இருக்கு … அப்படி துடிக்கக் கூடாதுன்னு நீ சொல்லுவியேம்மா; அவள் தன் மனம் கலங்கப் பேசினாள்.” *** செல்வா வேகமாக வெளியே வந்தவன் ரெண்டு நிமிடத்தில் அடையாறு டிப்போவை தொட்டான். அடுத்த மூன்று நிமிடங்களில் காலியான சாலையில் விர்ர் என சர்தார் பட்டேல் ரோடில் என்பது கிலோமீட்டரில் பறந்து அண்ணா சாலையில் தன் மனதுக்குள் தன்னை சூர்யாவாக கற்பனை செய்து கொண்டு

“என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய், வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய், என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்” என பாடியவாறு சர்ர்ரென நுழைந்தான். நுழைந்தவன் வலது பக்கத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த டிரக்கை, கடைசி வினாடியில் ஒரக்கண்ணால் பார்த்தவன், கம்மினாட்டி குடிச்சுட்டு ஓட்டறானா … ஆடி ஆடி வர்றான்… தாழி …. என்னால முன்ன போற பஸ்ஸை ஒவர்டேக் பண்ணிட முடியுமா, முடியாது போல இருக்கே, நேரா போனா முன்ன போற பஸ்ஸை இடிக்க வேண்டியதுதான். வேகத்தை குறைச்சா, ட்ரக் கீழேயே நமக்கு சமாதி கட்டவேண்டியதுதான் … நாம இன்னைக்கு செத்தமா? மனதில் அலாரம் அடிக்க … லெஃப்ட்ல போலாமா … போனா தப்பிக்கலாமா … முருகா ஒரே ஒரு சான்ஸ் குடுப்பா … நான் என் சுகன்யாவை பாக்கணும் … இவ்வளவையும் அவன் மூளை நொடியில் சிந்தித்தது … போடா லெஃப்ட்ல அவன் இன்ஸ்டிங்க்ட் சொல்ல, செல்வா இடப்புறம் தன் பைக்கை திருப்பும் முன், பக்கத்தில் வேகமாக வந்த ட்ரக்கின் இடது புற முன் சக்கரம் அவன் வண்டியின் பின் சக்கரத்தை முத்தமிட்டுவிட்டது. ட்ரக் வந்த வேகத்தில், அந்த மெல்லிய உரசலிலேயே அவன் வண்டி தட்டு தடுமாறியது, அவனால் தன் பைக்கை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், ஏற்கனேவே அங்கு நின்று கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசையரின் பின்னால் தன் பைக்கை செல்வா முட்டினான். முட்டிய வேகத்தில் தன் பைக்கிலிருந்து மூன்றடி உயரம் பறந்து, கார் டிக்கியின் மேல் விழுந்து உருண்டு, முடிவாக தரையில் ட்ஃப் என்ற சத்தத்துடன் தன் பைக்கின் மீதே விழந்தான். அவன் தளர்வாக போட்டிருந்த ஹெல்மெட் அவன் தலையிலிருந்து கழன்று அவன் பக்கத்திலேயே விழுந்தது. விழுந்தவன் இடது காதுக்குப்பின்னால் இரத்தம் மெல்லிய கோடாக வழிய ஆரம்பித்தது. அசைவில்லாமல் கிடந்தான் …. அதே நேரத்தில் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல் போன் ஒலிக்கத் தொடங்கியது. நின்றது. மீண்டும் மீண்டும் ஒலித்து அடங்கியது … ரகு, எழுந்திருப்பா, மணி ஒன்பதாச்சு; நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க; அந்த தம்பி வரும் போது, சுகன்யா சொன்ன மாதிரி சூடா தோசையோ, ஊத்தப்பமோ நான் ஊத்தி கொடுத்துடறேன். ரகு நிமிர்ந்து சுகன்யாவைப் பார்த்தார்.
“சுகு வாம்மா சாப்பிடலாம்” ரகு அவளை அழைத்தார்.
“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க மாமா; எனக்கு பசிக்கலை. இன்னும் கொஞ்ச நேரம் நான் வெயிட் பண்றேன். நான் அவரை இங்க சாப்பிடச் சொல்லிட்டு, நானே சாப்பிட்டா நல்லாருக்குமா? இப்ப நான் ஒரு கப் காபி குடிக்கப்போறேன்.” ரகுவும் சுந்தரியும் மவுனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா தனக்கு ஒரு கப் காஃபியை கலந்து கொண்டு, மீனாவுக்கு போன் பண்ணலாமா என பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவள் செல் ஒலித்தது.
“கால்” நம்பர் அவளுக்கு பரிச்சயமில்லாததாக இருந்தது.
“ஹல்லோ…”
“ஹல்லோ” சுகன்யா குழப்பத்துடன் பேசினாள்.
“நீங்க சுகன்யாவா…

“ஆமாம் நீங்க யாரு”
“அரை மணிக்கு முன்னாடி நீங்க இந்த ………. செல் நெம்பர்ல நாலு அஞ்சு தடவை
“கால்” பண்ணியிருக்கீங்க; இது யாரோட நெம்பர்; நெம்பருக்கு சொந்தகாரர் பேர் சொல்லமுடியுமா?
“ம்ம்ம்ம் … நீங்க யாரு பேசறீங்க”
“சொல்றேம்மா … இப்ப நீங்க எங்க இருக்கீங்க … இந்த செல் நம்பர் யாருது? இவருக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்?” குரல் மிடுக்குடனும் அதிகாரத்துடனும் ஒலிக்க சுகன்யா தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள்.
“இது செல்வாவோட நெம்பர் … அவரை எனக்கு நல்லாத் தெரியும் … முதல்ல நீங்க யாருன்னு சொன்னா நல்லாயிருக்கும்” அவள் குரலில் எரிச்சல் ஒலித்தது.
“நான் கிண்டி போலீஸ் ஸ்டேஷன்லேருந்து ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் கணேசன் பேசறேன் … யோவ் … அந்த பையன் டிரைவிங்க் லைசென்ஸ்ல என்ன பேர் இருக்குன்னு பாருய்யா? பாவம் … சின்னப்பொண்ணு யாரோ லைன்ல வருது … அவன் அம்மாவா இருக்க முடியாது” …. பக்கத்தில் யாருடனோ பேசும் அந்த கணேசன் குரல் இந்த பக்கம் சுகன்யாவுக்கு தெளிவாகக் கேட்டது. சுகன்யாவின் மனதில் இப்போது பட்டென உறைத்தது. செல்வாவுக்கு என்னவோ ஏதோ தப்பாக நடந்திருக்கிறது; அதனால் தான் அவன் என்னுடைய
“கால்ஸை” அட்டெண்ட் பண்ணலயா? இப்ப வேற யார்கிட்டயோ அவன் செல் போன் இருக்கு; அவங்க என்னை கூப்பிடறாங்க; அவள் உடல் இலேசாக நடுங்கியது.
“ஹலோ… ஹலோ … அவள் பரபரப்புடன் கூவினாள்
“சொல்லுங்கம்மா … ஒ.கே … ஓ.கே … அந்த பையன் பேர் செல்வாதான் … கன்ஃபார்ம் ஆயிடுச்சு … யோவ் கந்தசாமி நீ அப்படியே ராமச்சந்திரனுக்கு
“கால்” பண்ணி செல்வான்னு எண்ட்ரி போட்டு கேஸ் ஷீட் எழுத சொல்லிடுயா…”
“மிஸ் சுகன்யா … செல்வாவுக்கு நீங்க என்ன உறவும்மா, உங்க வீட்டுல வேற யாரும் பெரியவங்க … ஆம்பளைங்க இப்ப இல்லையா? இருந்தா அவங்க கிட்ட போனை குடும்மா?”
“சார் … எங்கிட்ட நீங்க தாராளமா பேசலாம் … ஸார் … அவர் என் கூட வொர்க் பண்றார் … எனக்கு நல்ல ஃப்ரெண்ட், நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கிறோம் … அவர் எங்க வீட்டுக்கு காலையில வர்றதா இருந்தார் … மோஸ்ட்லி அவர் பைக்லதான் எங்கேயும் போவார் … அவரோடது கருப்பு பல்ஸர் பைக். என் வீடு சைதாப்பேட்டையில இருக்கு, இப்ப நான் வீட்டுலத்தான் இருக்கேன். இப்ப எங்க மாமா ரகுராமன் என் பக்கத்துலதான் இருக்கார். சொன்ன டயம்ல செல்வா வராததாலே நான் அவருக்கு தொடர்ந்து போன் பண்ணேன். என்னாச்சு ஸார் அவருக்கு …” அவள் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தாள். அவள் குரல் உடைந்து, தேய்ந்து தழுதழுக்க ஆரம்பித்தது.
“ஓ.கே. இப்ப புரியுது … சாரி மிஸ் சுகன்யா … அரை மணி நேரத்துக்கு முன்னாடி செல்வா கிண்டியிலேருந்து சைதாப்பேட்டை பக்கமா வரும் போது ஒரு ட்ரக் அவரோட பைக்கை இடிச்சிருக்குன்னு தெரிய வருது … நின்னுகிட்டிருந்த ஒரு கார் மேல அவர் பைக் மோதி, தலையில அடிபட்டு, மயக்கமா கிடந்தவரை நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்கு … இந்த இன்ஃப்ர்மேஃஷனை முதல்ல உங்களுக்குத்தான் நான் குடுக்கறேன் …