கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

“சுகன்யா, நேத்து நான் என்ன நிலமையில இருந்தேன்னு உனக்கு என்ன தெரியும்? எங்கம்மா கிட்ட நான் வாங்கின பேச்சு உனக்கு எப்படி தெரியும்? உனக்காக எப்படியெல்லாம் நான் எங்கம்மா கிட்ட பேசியிருக்கேன்னு உனக்குத் தெரியாது? நேத்து ஏதோ கடுப்புல உன் மாமா கிட்ட அப்படி பேசிட்டேன். அதுக்காக அவருகிட்ட நான் அவரைப்பாக்கும் போது நான் சாரி சொல்லிக்குவேன்.”
“நான் உன்னை எவ்வளவு தூரத்துக்கு காதலிக்கறேன் தெரியுமா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது சுகு. என்னை வெக்கமில்லாதவன்னு வேணா நீ நினைச்சுக்க; அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை; நேத்து நடந்த நெறைய விஷயம் உங்கிட்ட பேசணும். நாம நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம்” அவன் கெஞ்சலாக சிரித்தான்.
“எங்கிட்ட இன்னும் சண்டை போடணுங்கற ஆசை வேற உனக்கு இருக்கா? உன் கிட்ட சண்டை போட எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லைப்பா … என் உடம்புல தெம்பும் இல்லை; என் மனசை நான் ஒண்ணும் மொத்தமா மாத்திக்கவுமில்லை. ஏதோ பழகின தோஷத்துக்கு உங்கிட்ட இப்ப நான் பேசிகிட்டு இருக்கேன்; ஜானகி இல்லன்னா அவ தங்கச்சி ஜெயந்தி பின்னால நீ தாராளமா போகலாம். இப்ப நீ எதுக்கு போன் பண்ணே? உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சீக்கிரமா சொல்லு?” அவள் ஒன்றும் தெரியாதவள் மாதிரி அவனிடம் நடித்து, அவனை தெரிந்தே வம்புக்கிழுத்தாலும், அவன் தன் தாயிடம் தனக்காக வாதாடியிருக்கிறான், தன் மாமாவை பார்க்க அவன் தயாராகிவிட்டான், இன்னைக்கு அவன் இங்கே வரப்போகிறான், என தெரிந்ததும் அவள் மனதில் மகிழ்ச்சி கங்கை வெள்ளமாக பொங்கியது; உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சி அவள் உதடுகளில் புன்னகையாக தவழத் தொடங்கியது.
“சரி … மிஸ் சுகன்யா … மீதியை நான் உங்க மாமாவை பார்த்து பேசிக்கிறேன்; அவர் எங்க தங்கியிருக்காருன்னு மட்டும் நீங்க சொல்லமுடியுமா?”
“நீங்க, வாங்க, போங்க, மிஸ், மேடம் இந்த டிராமால்லாம் எங்கிட்ட வேணாம்; அதெல்லாம் அந்த சாவித்திரிகிட்டவும் அவ பொண்ணுகிட்டவும் வெச்சுக்க; என் மாமா என் ரூம்லதான் இருக்கார்” அவள் தன் அம்மாவைப் பார்த்து உதட்டில் சிரிப்புடன் கண்ணடித்தாள்.

“சரிடி செல்லம், நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வரேன் … போன வாரம் நீ புதுசா ஒரு சுரிதார் செட் வாங்கினேன்னு போன்லே சொன்னியே அந்த ட்ரஸ்ஸை போட்டுக்கோ … வரும் போது மல்லிப்பூ வாங்கிட்டு வந்து குடுத்தா வெச்சிக்குவே இல்லியா? போன வாரம் நான் வந்தப்ப, என்னன்னவோ காமிச்சி, நெறைய வாரி வாரி குடுத்த; இன்னைக்கு அது மாதிரி எதாவது ஸ்பெஷலா குடுப்பியா?… அவன் குரலில் உல்லாசம் வழிந்தது. சனியன் புடிச்சவன் அம்மா பக்கத்துல இருக்கான்னு தெரியாம என் உயிரை எடுக்கிறான். போனவாரம் அவன் ரூமுக்கு வந்த போது நடந்தவைகள் மனதில் வேகமாக ஓட அவள் மனம் கிளுகிளுத்து உடல் இலேசாக சிலிர்த்து அவள் உதட்டில் விஷமப்புன்னகை நடனமாடியது. அவனாவது ஒரு முத்தம் போன்ல குடுக்கிறானா அதுவும் இல்லை. அவன் முத்தத்திற்கு மனம் வெக்கமில்லாமல் அலைந்தது.
“….”
“என்ன சுகன்யா பேசமாட்டேங்கிற; ஆசையா கேக்கிறேண்டா, புரியுதுடி; இன்னைக்கு உன் மாமா, உன் கூட இருப்பார்; என்னை நீ பட்டினியாத்தான் திருப்பி அனுப்ப போறே! ஒரு கிஸ், போன்ல கூட குடுக்க மாட்டியா, நேத்து தான் பாதியிலேயே நிறுத்திட்டுப் போயிட்டியே? அவன் குரலில் தாபம் அலைபுரண்டது.
“ம்ம்ம் … எங்கம்மா தோசையும், உனக்கு புடிச்ச பக்கோடா குருமாவும் பண்ணிகிட்டு இருக்காங்க, வெறும் வயித்தோட வா, வந்து ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டுப்போ …” அவள் தன் உதட்டைச் சுழித்து அவள் பற்கள் மின்ன சிரித்தாள்.
“என்னாது … உங்கம்மாவும் வந்து இருக்காங்களா? உங்க மாமாதான் வந்திருக்காருன்னு பாத்தேன் … என்ன பிளான்ல இருக்கீங்கடி நீங்க மூணு பேரும்? சின்னப் பையனை தனியா கூப்பிட்டு, மடக்கி ரூம்ல கட்டிப்போட்டு தாலி கட்ட சொல்லபோறீங்களா? நான் யாரையாவது என் சேஃப்டிக்குன்னு கூட கூப்பிட்டுக்கிட்டு வரட்டுமா? அவன் சிரித்தான்
“செல்வா நல்லா கேட்டுக்க; இப்பவும் நான் தெளிவா சொல்றேன்; எனக்கு திருட்டு தாலி கட்டிக்க இஷ்டமில்லை; நாலு பேருக்கு முன்னாடி, எத்தனை நாள் ஆனாலும் சரி, உனக்காக காத்துகிட்டு இருந்து, அதுவும் உங்க அம்மா ஆசிர்வாதத்தோட, அவங்க தொட்டு குடுக்கற தாலியைத்தான், உன் கையால கட்டிக்குவேன்; உன்னை வற்புறுத்தி இப்ப யாரும் தாலி கட்ட வர சொல்லலை; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உனக்கு பயமாயிருக்குன்னா வராதே என் ரூமுக்கு; … எங்க மாமா உங்கிட்ட சொன்ன மாதிரி நானும், எங்கம்மாவும் அவரோட உங்க வீட்டுக்கு வர்றோம். என்ன சொல்றே?”அவள் அவனை மிரட்டினாள்.
“எம்மா தாயே, அப்படி எதுவும் பண்ணிடாதீங்க; உங்களைப் பாக்கறதுக்கு நானே வர்றேன்” அவன் முனகினான்.

“நேத்து உன்னைப் பாத்தப்ப தாடி மீசையோட கன்றாவியா இருந்த; எதாவது அழுக்கு ஜீன்ஸை எடுத்து போட்டுகிட்டு வந்திடாதே; ஒழுங்கா ஷேவ் கீவ் பண்ணிட்டு, சுத்தமா டிரெஸ் பண்ணிகிட்டு வா, இல்லன்னா கீழ் வீட்டுல மாணிக்கம் மாமா கதவை தொறக்க மாட்டாரு; இப்பவே சொல்லிட்டேன்” அவன் பதிலுக்கு காத்திராமல் சுகன்யா தன் செல்லை அணைத்தாள். அவள் முகம் பரவசத்தில் பொலிவாக மின்னியது.
“யாரு கிட்ட பேசிகிட்டு இருந்தே?” ரகு கேட்டவாறு உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்ததும், சுகன்யா ஒரு டவலை எடுத்து தன் நைட்டியின் மேல் தன் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். பக்கத்தில் நின்ற தன் தாயின் தோளில் தன் கையை வீசி அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டாள்.
“மாமா, அவர்தான் செல்வா பேசினாரு; ஒரு மணி நேரத்துல உங்களை வந்து பாக்கிறேன்னாரு, அதுக்குள்ள நீங்களும் குளிச்சுட்டு ரெடியாகிடுங்க; அவரை இங்கேயே சாப்பிடச் சொல்லியிருக்கேன்” இப்போது அவள் குரலிலும் முகத்திலும் வெட்கம் மெலிதாக இழையோடியது.