கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

“ஏம்மா, வெறும் இட்லி மட்டும் தான் செய்யறியா? அவருக்கு வெங்காய ஊத்தப்பம் ரொம்ப பிடிக்கும், அவர் வந்ததும், பொடியா ஒரு மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை அரிஞ்சி போட்டு சூடா ஊத்திடேன், சொல்லியவாறு அவள் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக பதித்தவள் குளியலறையை நோக்கி ஓடினாள்.
“நல்லாயிருக்குதே இவ ஞாயம்; சித்த முன்னாடி, அவனுக்கு காப்பி மட்டும் குடு போதும்; ரொம்ப அவனுக்காக உருகாதேன்னு என்னை அதட்டினா; இப்ப என்னடான்னா ஊத்தப்பம் ஊத்துங்கறா” அவள் தன் தம்பியை வியப்புடன் பார்த்தாள்.
“அதானே நேத்து ராத்திரியெல்லாம், அந்த பையனை
“அவன்”
“இவன்னு” வறுத்து கொட்டினா, இப்ப என்னமோ அவன் போன் வந்ததும்,
“அவரு”
“இவருன்னு” அவனை தலை மேல தூக்கி வெச்சிகினு ஆடறா; என்னை சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகுன்னு ஆர்டர் போடறா? அக்கா, இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாமே சித்தம் போக்கு, சிவம் போக்குன்னு இருக்காளுங்க, எவளையும் ஒண்ணும் புரிஞ்சுக்கவே முடியலை” ரகுவும் சிரித்தார். *** சுகன்யாவிடம் பேசிவிட்டு, நிமிடங்களில் ஷேவ் செய்துகொண்டு செல்வா குளிக்க ஓடினான். குளியலறையில் குதூகலத்துடன் தன் கள்ளக்குரலில் பாடத் தொடங்கினான்.
“ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஏ மச்சத் தாமரையே… என் உச்சத் தாரகையே… கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே”
“வெளியில வந்து பாடேண்டா … காலங்காத்தால பாத்ரூமுல உன் கச்சரியை ஆரம்பிச்சிட்டே … அப்பா பாத்ரூம் யூஸ் பண்ணணுமாம்” மீனா வெளியிலிருந்து கத்தினாள்.
“ஒரு நிமிஷம்; இதோ வந்துட்டேண்டி … வெளியில் வந்தவன் தன் தங்கையின் முதுகில் செல்லமாக குத்தியவன் சொன்னான், இது உன் வருங்கால அண்ணிக்கு பிடிச்சப் பாட்டுடி… அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும்” மனநிறைவுடன் சிரித்தான் செல்வா. *** குளித்துவிட்டு வந்த சுகன்யா, போன வாரம் புதிதாக வாங்கியிருந்த ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற குர்தாவை அணிந்து, ரோஸ் நிற சுரிதார் அலங்காரத்தில் தங்கமாக மின்னிக் கொண்டிருந்தாள். தலையை கோதி முடியை இறுக்கமாக ரப்பர் பேண்டில் அழுத்தியிருந்தாள். சிறிய கருப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டியிருந்தாள். ரோஜா நறுமணம் வீசும் டியோடரண்டை அக்குளில் அடித்துக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னுமாக தன் உடலை திருப்பி திருப்பி பார்த்து தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். நான் ஏன் இன்னைக்கு என் உடைகளிலும், தலையை சீவிக்கொள்வதிலும் இவ்வளவு நேரம் செலவு பண்றேன். என் அலங்காரத்துக்கு ஏன் அதிக கவனம் செலுத்துகிறேன். செல்வா என்ன என்னை புதுசாவா பார்க்கப்போறான். இல்லையே? அவள் தன் மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.
“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே…. என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் எங்கே…. என் ஜீவன் எங்கே” சுகன்யா அவளையும் அறியாமல் செல்வாவுக்கும் தனக்கும் பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுக்கத் தொடங்கினாள். ரகு, தன் தமக்கையை கண்களால் அர்த்தமுடன் பார்த்து சிரித்தார். அவளும் நமட்டு சிரிப்புடன், சுகன்யாவை பார்த்துவிட்டு தன் தலையை குனிந்து கொண்டாள். மல்லிகாவும் நடராஜனும், அவர்களுக்குள் இரவில் நடந்த இன்ப விளையாட்டுக்குப்பின் களைத்து தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாகவே எழுந்து, மீனா போட்டுக் கொடுத்த காஃபியை குடித்தவாறு வெரண்டாவில் அமைதியாக உட்க்கார்ந்திருந்தனர். மீனா அவர்கள் அருகில் அமர்ந்து அன்றையை செய்தி தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். செல்வா, வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெளிர் க்ரே நிற பேண்ட்டும் அணிந்துகொண்டு, ஒல்ட் ஸ்ஃபைஸ் வாசத்துடன், கண்ணில் மெட்டல் ஃப்ரேமில் கருப்புநிற கண்ணாடியும், வுட்லேண்ட் ஷூவுமாக வந்தவன் முகம் முழு மலர்ச்சியுடன் இருந்தது.
“காலங்காத்தால எங்கேடா போறே காஃபி கூட குடிக்காமா? மீனா வினவினாள்.
“கேட்டுட்டில்லே கிளம்பும் போதே நான் எங்கே போறேன்னு? … இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்?” அவன் எரிந்து விழுந்தான்.
“பெரிய வி.ஐ.பி. இவரு, மன்மோகன்சிங், ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்க்கு இவரை கூப்பிட்டிருக்காரு; நான் எங்கே போறேன்னு கேட்டதாலே அது இப்ப கேன்சல் ஆயிடப் போவுதா? நீ தான் ஞாயித்து கிழமைன்னா வாரம் தவறாம அந்த சீனு தடியன் பின்னால அலைஞ்சுட்டு ஏதாவது கையேந்தி பவன்ல ரோடுல நின்னு வயித்தை ரொப்பிக்குவே; அதுக்காகத்தான் நான் கேட்டேன்; உனக்கு இங்க வீட்டுல டிஃபன் பண்ணணுமா வேணாமான்னு” அவள் பதிலுக்கு பொரிந்து தள்ளினாள்.
“மை டியர் சிஸ்டர், எனக்கு ஸ்பெஷல் டிஃபன் – தோசை, பக்கோடா குருமா – வேற ஒரு இடத்துல ரெடியாகிட்டு இருக்கு, நீங்க எனக்காக ஒரு சின்ன உதவி பண்ணுங்க; நான் கிளம்பின உடனே, இந்த காம்பவுண்ட் கேட்டை மட்டும் மூடிடுங்க ப்ளீஸ்” … பை … பை என கையாட்டிவிட்டு தன் பல்சரை உதைத்து வேகமாக கிளம்பினான். *** மணி எட்டரையாகியிருந்தது. செல்வா இன்னும் வந்து சேரவில்லையே என அந்த வீட்டிலிருந்த மூவரும் மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தனர். ரகுவும் குளித்துவிட்டு தயாராகி செய்தித்தாளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.