கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 24

நாளைக்கு அவங்க வீட்டுக்கு நீ போனா சட்டுன்னு இதே பழக்கம்தான் வரும் … அவங்க என்னை காறி முழியக்கூடாது … இப்படி ஒரு மரியாதை தெரியாத பொண்ணா உன்னை வளத்து வெச்சி இருக்கேன்னு?”
“சரி சரி … எனக்கு அவன் இன்னும் தாலியே கட்டலை; இப்பவே அவனை நீ உன் மாப்பிள்ளையா பார்க்க ஆரம்பிச்சிட்டியா? எனக்கு முதல்ல காப்பியை குடும்மா … நான் காபி குடிச்சுட்டுத்தான் குளிக்கப் போவேன் …” அவள் செல்லமாக அம்மாவிடம் கொஞ்சினாள். அவள் காபியை ரசித்து உறிஞ்சிய போது, செல் சிணுங்கியது. பாய்ந்து எடுத்தாள் சுகன்யா. செல்வாவின் நெம்பர் பளிச்சிட்டது. அவள் மனதுக்குள் சட்டென மகிழ்ச்சி குமிழியிட்டது
“எம்ம்மா …. அவன்தான் … செல்வாதான் லைன்ல இருக்கான் … நீ பேசறியா அவன் கிட்ட” மாமா சொன்ன மாதிரி போன் பண்ணிட்டானே? சுகன்யாவின் முகம் பூவாய் மலர்ந்தது.
“நீயே பேசுடி … செல்லம் … எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசு” அவளும் தன் காபியை மெதுவாக உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள்.
“ம்ம்ம் … ஹலோ”
“செல்வா பேசறேன் … சுகன்யா, உங்க மாமா என்னை நேர்ல பாத்து பேசணும்ன்னு போன் பண்ணார்; … இது உனக்கு தெரிஞ்சு இருக்கலாம்”
“தெரியும் … இதுவும் தெரியும் … நீ என்னை தெரியாதுன்னு அவருகிட்ட ராத்திரி டயலாக் வுட்டியாமே? அதுவும் நல்லாத் தெரியும் … உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா அப்படி சொல்லியிருப்பே; இப்ப உனக்கு என்ன வேணும் அதைச் சொல்லு” அவள் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள்.
“சுகன்யா ரொம்ப தேங்க்ஸ்”
“காலங்காத்தால என்னை போன் பண்ணி எழுப்பி இப்ப எதுக்கு தேங்க்ஸ் சொல்றே நீ?…

“இல்ல… என் நம்பரை பாத்துட்டு நீ எங்கிட்ட பேசுவியா மாட்டியான்னு சந்தேகமா இருந்தது எனக்கு; உன் கோபம் தீர்ந்து போச்சுன்னு நினைக்கிறேன்; பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போன நீ, என் கிட்ட பேசிட்டே, உன் குரலை கேட்டதும் மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்மா; அதுக்குத்தான் தேங்க்ஸ்.” அவன் இழுத்தான்.
“ஆமாம், நேத்து ராத்திரி நான் யாருன்னு உனக்குத் தெரியாது; காலையில எழுந்தவுடனே என் செல் நம்பரு, என் பேரு, என் ஊரு, என் குரல் எல்லாம் உனக்கு ஞாபகம் வந்திடுச்சா?”
“சாரிடி … சுகு … சும்ம்மா வெறுப்பேத்தாதடி … நீ நேத்து எங்கிட்ட கொஞ்சமாவா பேசிட்டு போனே?

“தெரியாதுன்னு சொன்னது” நீ பேசின டயலாக்தானே? நீ தானே மீனா கிட்ட முதல்ல சொன்னே? நீ பேசினப் பேச்சுக்கு வேற எவனா இருந்தாலும் உங்கிட்ட இந்த ஜென்மத்துக்கும் திரும்பவும் பேச மாட்டான். நானா இருக்கவே காலங்காத்தால உங்கிட்ட பேசறேன்.”
“சாரி செல்வா … நேத்து நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமாத்தான் பேசிட்டேன், குரலில் குழைவுடன் பேசியவள்; அது சரி … என் கிட்ட பேச உனக்கு இஷ்டமில்லன்னா, இப்ப வேண்டா வெறுப்பா எதுக்கு நீ எங்கிட்ட பேசணும் … உனக்கு போன் பண்ணது என் மாமாதானே … அவருகிட்ட நீ பேசிக்கோ; எனக்கு எதுக்கு நீ போன் பண்ணே? நீயாச்சு; அவராச்சு; அவர் நம்பர் உன் செல்லுல இருக்குல்ல; இப்ப காலை நீ கட் பண்ணிட்டு அவருகிட்ட பேசிக்கோ” சுகன்யா பொய்யாக அவனிடம் சீறினாள். இந்த பொண்ணை புரிஞ்சுக்கவே முடியலையே! என்ன பேசறா இவ; ஒரு நிமிசம் கொஞ்சறா அவனை; அடுத்த செகண்ட் ஏறி மிதிக்கிறா; என்ற புரியாத பாவனையுடன், புத்தி கெட்ட பொண்னை பெத்து வெச்சிருக்கேன் நான்; என்ற அலுப்பு கண்களில் தெரிய சுந்தரி தன் மகளின் தோளை அழுத்தினாள்.