கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

என் அப்பனைப் பத்தி நான் தெரிஞ்சுக்க எப்பவும் முயற்சி பண்ணதே இல்லை.”
“என் அப்பன் மேல எனக்கு இருந்த இந்த பயம், நடுக்கம், கோபம் அப்படிங்கற உணர்ச்சிகளை தினமும் என் ஏழு வயசு வரைக்கும் அனுபவிச்சதால, ஆம்பிளைங்களை நான் வெறுக்க ஆரம்பிச்சேன். இந்த வெறுப்புணர்சியினால என்னை நான் மத்தவங்க கிட்ட இருந்து தனிமைப் படுத்திக்கிட்டேன். ஸ்கூல்லேயும் சரி, காலேஜ்லேயும் சரி நான் ஆம்பிளை பசங்க கூட அதிகமாக பேசமாட்டேன்.

“என் மனசுல உன் மேல ஒரு விருப்பம், ஈர்ப்பு, எப்படி வந்ததுன்னு எனக்கு இன்னைக்கும் புரியல. இந்த ஈர்ப்பு உன் மேல காதலா மாறினப்பகூட, உங்கிட்ட சொல்லமா இருந்ததுக்கு நீயும் ஒரு ஆம்பிளைங்கறதுதான் காரணம். என் ஃப்ரெண்டு வேணிதான் எல்லா ஆம்பளையும் கெட்டவன் இல்லடின்னு கொஞ்சம் கொஞ்சமா என் மனசை மாத்தினா. உன் அம்மா வாழ்க்கையில நடந்தது, உன் வாழ்க்கையிலேயும் திரும்பவும் நடக்கணும்ன்னு அவசியம் இல்லடின்னு, என்னை வாழ்கையை ரசிச்சு வாழ உற்சாகப்படுத்தினா” அவள் தன் கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்.
“கொஞ்ச நாளா, உன் அன்பு என் மனசுக்கு ரொம்ப ஆதரவா இருந்தது. நான் வானத்துல திக்குத் தெரியாம பறக்கற பட்டத்தைப் போல மகிழ்ச்சியா பறந்துகிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது, பட்டம் விடறவன் கயித்தை இழுத்து பிடிச்சா, கீழ வந்துதான் ஆகணும்ன்னு. சாவித்திரி தன் பட்டத்தால என் கயிறை அறுக்கப் பாக்கிறா, நீ இந்தப் பட்டத்தை அறுபடாம காப்பத்துவியான்னு எனக்குத் தெரியல.”
“செல்வா, என் அப்பனை நான் என்னைக்கோ மறந்துட்டேன். எனக்கு எல்லாமே என் மாமா ரகுதான். எங்க வாழ்க்கையில எங்களுக்கு இதுவரைக்கும் ஆதரவா இருந்தவர், கடைசி வரைக்கும் எந்த பிரச்சனையிலும் எனக்கு உதவியா இருக்கப் போறவர் அவர்தான். என் கல்யாணத்திலும் அவரும், என் அம்மாவும் தான் என் பக்கத்துல நிப்பாங்க.”
“என் குடும்ப அந்தஸ்து இவ்வளவு தான். என் கிட்ட சொத்து இல்லை. நிலம் இல்லே; வீடு இல்லே. வசதிகள் எனக்கு இல்ல. உறவினர்கள் இல்லை. என் அன்பைத்தவிர வேற எதையும் என்னால உனக்கு குடுக்க முடியாது. உங்கம்மா எதிர்பாக்கற மாதிரி, இந்த சமூகத்துக்காக, என் அப்பனை நான் தேடி கூப்பிட்டுக்கிட்டு வந்தாத்தான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்னைக்குமே இல்லை. அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டவும் வேண்டாம்.”
“உன் இஷ்டப்படி, உங்க அம்மா சொல்றதை கேக்கிற பையனாவே நீ இருக்கலாம். அவங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னைப்பத்தி நீ கவலைப்படவேண்டாம்” அவள் பார்வை வெகு தூரத்தில் கடலை வானம் முத்தமிடும் இடத்தில் நின்றிருந்தது.”
“இப்ப சொல்லு உன் முடிவு என்ன? உனக்கு நான் வேணுமா? இல்லை அந்தஸ்துல என்னைவிட உயரத்துல இருக்கிற, அப்பா, அம்மாவோட, பெசண்ட் நகர்ல மாடி வீட்டில குடி இருக்கற ஜானகி வேணுமா?”
“ …

“சொல்லு செல்வா. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். என் முடிவையும் நான் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டேன். சம்பந்தப்பட்ட நாம நேருக்கு நேரா உக்காந்து இருக்கோம். உன் பதிலை இப்ப நீ சொல்லியாகணும்.” அவள் குரல் உணர்ச்சிகளின்றி வறண்டிருந்தது.
“சுகன்யா அவசரப்படாதே, நீ உன் குடும்பத்தைப் பத்தி சொன்னதை என் வீட்டுல போய் சொல்றதுக்குகூட நீ எனக்கு டயம் குடுக்கமாட்டியா? என் வாழ்க்கையை என் பெத்தவங்க ஆசிர்வாதத்தோடு நான் ஆரம்பிக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்” அவன் அவள் முகத்தை தன் கையால் தொட்டு தன் புறம் திருப்பினான்.
“செல்வா, நீ சொல்றது ரொம்ப சரி. பெத்தவங்க ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும், இப்ப என்னை விட என் அப்பா யார், என் குடும்ப அந்தஸ்து என்னங்கறது உனக்கு முக்கியமா படுது. போனவாரம் வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தே? இப்ப உன் மனசு ஊசலாடுதுன்னு எனக்குத் தோணுது. இப்ப நான் கேக்கிற ஒரே கேள்வி, உன் வாழ்க்கையை நீ யார் கூட ஆரம்பிக்க முடிவு பண்ணி இருக்கே? அதுக்கு நீ பதில் சொல்லலை.” செல்வா பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, சுகன்யா தன் முகத்தை பற்றியிருந்த அவன் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள். சடாரென எழுந்து தன் புடவையில் ஒட்டியிருந்த மணலை வேகமாக உதறினாள். உதிர்ந்த மணல் செல்வாவின் முகத்தில் பறந்து விழுந்தன. சுகன்யா கைப்பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டாள்.
“மிஸ்டர் செல்வா, நாம இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம, பேசிக்காம இருக்கறது, எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். லெட் அஸ் பார்ட் ஆஸ் குட் ஃப்ரெண்ட்ஸ். நீங்களும் உங்க மனசுல இருக்கறதை
“ஆனது ஆச்சு; போனது போச்சுன்னு” சொல்லிட்டீங்க, எனக்குத்தான் அப்ப டக்குன்னு அதுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியல.” சுகன்யா பேசியதை கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன், அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.