கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

எங்களுக்கு பின்னாடி அவளுங்களுக்குத்தான். மனமொத்து உனக்கு மேல, எனக்கு கீழன்னு ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கட்டும். ஜானகியும் சம்பாதிக்கறா. பால், காய் கறி, மளிகை சாமான்னு அவ சம்பாத்தியத்துல மாசத்தை ஓட்டிடலாம். செல்வா நான் பாத்து வளர்ந்த புள்ளை. அவனுக்கு தேவையானதை செய்து கல்யாணத்தை நாங்க ஒரு குறையும் இல்லாம பண்ணி வெச்சிடறோம், அப்படின்னு சாவித்திரி சொன்னாளாம்.”

“இது என்ன அநியாயமா இருக்குடி, பொதுவா பிள்ளை வீட்டுலேருந்து போய் பொண்ணு கேப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இவளுக்கு தெரிஞ்சும், அடிச்சு புடிச்சிகிட்டு நடுவுல புகுந்து குட்டையை குழப்பறாளே; நல்லா இருப்பாளா இவ? எனக்கு வயிறு எரிஞ்சு போச்சு. உனக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லைன்னு எனக்கு தோணுச்சு.” அவள் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள்.
“தேங்க் யூ வித்யா, எனக்கு இதைப் பத்தித் தெரியாது, செல்வா எங்கிட்ட இன்னும் சொல்லலை, அவனும் சனிக்கிழமை தான் இங்கேருந்து போனான்.” சுகன்யாவின் முகம் இலேசாக கருத்தது.
“இன்னைக்கு வியாழக்கிழமை; அஞ்சு நாளாச்சு, நிலைமை கையை விட்டு போறதுக்கு முன்னே இன்னைக்கே அவனை கூப்பிட்டு விசாரிடி மேட்டர் என்னன்னு; என் வீட்டுகாரன், என் மேல உயிராத்தான் இருக்கான், ராத்திரியில மடியில போட்டு கொஞ்சுவான். வேற நினைப்பே அவனுக்கு வராது. அவங்க அம்மான்னு வந்துட்டா, கல்யாணமாயி ஆறு வருசம் ஆச்சு, பகல் நேரத்துல நான் இன்னும் ரெண்டாம் பட்சம்தான்; செல்வா நல்ல பையன்தான். ஆனா எறும்பூர கல்லும் தேயுண்டி.” அவள் எழுந்து கொண்டாள். சுகன்யா தன் மனதுக்குள் யோசித்தாள். சாவித்திரி அவன் வீட்டுக்கு வந்து போன விஷயம் செல்வாவுக்கு தெரியாமலா இருக்கும்? சனிக்கிழமை அவன் என்னோட ரூம்ல என் மடியில மயங்கி கிடந்தான். நான் செல்வாவை என் ரூமுக்கு கூப்பிட்டு என் காயை நகத்தினேன். அந்த நேரத்தில சாவித்திரி, அவன் வீட்டுக்கே முறையா போய் பொண்ணு குடுக்கறேன்னு சாதுரியமா தன் காயை எனக்கெதிரா நகர்த்தியிருக்காளா? குட் மூவ் சாவித்திரி! செல்வா வீட்டுக்குப் போனபின் அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கலாமே? அவன் ஏன் எங்கிட்ட சொல்லலை? இதனால்தான் அவன் எங்கிட்ட பேசறதை இப்ப தவிர்க்கிறானா? இப்ப நான் என்னப் பண்றது? கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவன் வாயால எல்லாத்தையும் சொல்ல வெக்கணும். சுகன்யா மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தாள். எத்தனை சாவித்திரி வேணா வரட்டும். அவன் என் ஆள், அவனை நானா மனம் வந்து விட்டுக் குடுத்தாலும் விட்டுக்குடுப்பேனே தவிர, வேற யாரும் அவனை எங்கிட்டேருந்து பிரிக்க விடமாட்டேன். சுகன்யாவின் மனதில் இலேசாக வன்மம் தலையெடுத்தது. வீட்டுக்கு வந்து குளித்தாள். பேருக்கு வேண்டா வெறுப்பாக ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டாள். செல்வாவின் நம்பரை செல்லில் தட்டினாள். செல்வாவும் லைனில் வந்தான்.
“வணக்கம், நான் சுகன்யா பேசறேன் சார், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு, சார் ஆபீஸ்லே ஒண்ணும் பிஸியா இல்லையே? அய்யா இப்ப எங்க இருக்கீங்க? பிளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு டயம் ஒதுக்குங்களேன்” சந்தானம் ஸ்டைலில் அவள் வினயத்துடன் பேசினாள்.
“என்ன சுகன்யா நீயுமா இப்படி பேசறே; இங்க நானே ரொம்ப நொந்து நூலா போய் இருக்கேன்?” அவன் குரல் தடுமாறி வந்தது.
“பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்னு சொன்னே? அதுக்கப்புறம் அஞ்சு நாளாச்சு, இங்க நான் ஒரு பைத்தியகாரி உன்னை நினைச்சு, சோறு தண்ணி இறங்காம தவிச்சுகிட்டு இருக்கேன். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும், உனக்குத்தான் ஆளையே மறந்து போச்சே? நீயா கூப்பிடற வரைக்கும் உனக்கு போன் பண்றதில்லைன்னு நானும் வீம்பாதான் இருந்தேன், என்னால முடியலடா பாவி? உனக்கு இருக்கற கல் நெஞ்சு எனக்கில்லை; அவள் குரல் தழுதழுத்தது.
“வெரி வெரி சாரி சுகன்யா, உனக்கு நான் கால் பண்ணாதது என் தப்புதான். ஒத்துக்கறேன்.” இங்க நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன்.
“சாவித்திரி பெசண்ட் நகர்ல ரெண்டு மாடி இருக்கற காம்பவுண்டுல நல்ல திக்கா கிரில் போட்ட வீடு வெச்சிருக்கா, அவளுக்கு ரெண்டு பொண்ணு, ஆளுக்கு ஒண்ணா வீட்டுக்கு வர மாப்பிளைங்களுக்கு சீதனமா கிடைக்கும். அந்த விட்டுல கிரவுண்ட் ஃப்ளோர் கேக்கலாமா, இல்ல ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் கேக்கலாமான்னு குழம்பறியா? செல்வா, இந்தப் பிரச்சனையை நீ ஜானகி கிட்ட விடு, அதெல்லாம் அவ கரெக்ட்டா பாத்துக்குவா. அவ சாவித்திரி பொண்ணுதானே – தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாய்வா” சுகன்யாவின் குரலில் மெல்லிய கேலியும், கிண்டலும் எதிரொலித்தது.
“சுகன்யா நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறியா?” அவன் கடுகடுத்தான்.
“எனக்குத்தான் புரியலியே? நீ கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லேன்” சுகன்யாவும் தன் பங்குக்கு அவள் குரலை உயர்த்தினாள்.
“சுகன்யா உங்கிட்ட நான் சண்டை போடற மூடுல இல்லடி” நான் இங்க சந்தோஷமா சாப்பிட்டுகிட்டு, தூங்கிகிட்டு இருக்கேன்னு நினைக்காதே?
“சரி, செல்வா, நான் சண்டை போடறவதான். உங்கிட்டதானே நான் சண்டை போடறேன். உன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இல்லயா? சாவித்திரி சனிக்கிழமை உன் வீட்டுக்கு வந்து என்ன சொன்னா? உங்க வீட்டுல அவளுக்கு என்ன பதில் சொன்னீங்க? அப்புறம் உன் முடிவு என்னா? இதை மட்டும் எனக்கு நீ புரியற மாதிரி சொல்லு.”