கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

அவள் உதடுகள் இறுகியிருந்த விதத்திலும், அவள் பார்வையில் இருந்த சலிப்பிலும், அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டாள் என செல்வாவுக்குத் தோன்றியது. என் ஒரு கேள்வியினால், அவள் தன்னை உதறும் அளவுக்கு போய்விட்டாளே? அப்படித் தப்பா நான் என்ன கேட்டுட்டேன்? அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? செல்வா விரக்தியுடன் தன் மனதுக்குள் யோசித்தான்.
“சுகன்யா, என் அம்மாவோட முழு விருப்பத்தோட என் கல்யாணம் நடக்கணும்ன்னு நான் சொல்றதாலே, நான் ஒரு குற்றவாளின்னு நீ முடிவு பண்ணிட்டே. உன் தீர்ப்பையும் நீ எனக்கு சொல்லிட்டே” நான் என் தாயை விட்டுக் கொடுத்துத்தான் இவளை கைப்பிடிக்க வேண்டுமா? அவன் மனதிலும், கண்களிலும் இலேசான ஒரு இனம் தெரியாத குழப்பமும், வன்மமும், இப்போது தோன்றியிருந்தது.
“செல்வா நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுகிறீங்க. உங்களை நான் குற்றவாளின்னு சொல்லலே. என் முடிவை நான் திட்டவட்டமா சொல்லும்போது உங்களால உங்க முடிவை ஏன் சொல்ல முடியலேன்னுதான் கேக்கிறேன்?”