கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

சிம்பிளா சொன்னேன் எனக்குத் தெரியாதுன்னு. நான் காதலிக்கறது செல்வாவை, எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு – செல்வாவைத்தான், நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்ன்னு தெளிவா சொன்னேன். செல்வா குடும்பத்தைப் பத்தி எனக்கு கவலை இல்லேன்னு சொன்னேன். இதுல எனக்கு இந்த நொடி வரை எந்த குழப்பமும் இல்லை.”
“உன்னோட நிலை என்ன? உன்னால உன் மனசுல இருக்கறதை இப்படி நான் சொல்ற மாதிரி தெளிவா சொல்லமுடியுமா” அவள் நீளமாக பேசி நிறுத்தினாள்.
“….”
“செல்வா நான் சுத்தி பேச விரும்பலை. உனக்கு நான் வேணுமா? இல்லை ஜானகி வேணுமா?”
“இப்ப ஜானகி இதுல எங்க வர்றா, அவளை எதுக்கு இப்ப இழுக்கற நீ?”
“ஜானகியை உங்கம்மாவுக்குத் தெரியும். உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சாவித்திரி, தன் புருஷனோடு முறைப்படி வந்து உனக்கு அவளை தரேன்னு சொல்லி இருக்கா. நீ ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்காதே?”அவள் தான் பேசுவதை சற்றே நிறுத்தினாள்.
“சுகன்யா நான் உங்க அப்பாவைப்பத்தி கேட்டேன்? அவன் அவள் கண்களைப் பார்க்காமல் பேசினான்.
“செல்வா, அன்னைக்கு நீ போன்ல கேட்டே, எங்கம்மா, என் அப்பா கூட இல்லையான்னு; ஆமாம், எங்கம்மா என் அப்பா கூட வாழல. எங்கம்மா வாழா வெட்டியா இருக்கா. இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா, இது நம்ம கல்யாணத்துக்கு குறுக்க வரலாம்ன்னு உங்க அம்மா கிட்ட சாவித்திரி வேல மெனக் கெட்டு சொல்லியிருக்கா. நம்ம கல்யாணம் நடக்கலாம்; நடக்காம போகலாம். அது வேற விஷயம். ஆனா நம்ம கல்யாணம் இந்த விஷயத்தால நிக்கக்கூடாது.”
“சுகன்யா … ப்ளீஸ்…”
“செல்வா என்னைப் பேசவிடு … பேசற நேரம் வந்தாச்சு … என் அப்பாவும் என் அம்மாவும் நம்பளை மாதிரித்தான் காதலிச்சு இருக்காங்க. அப்புறம் ரெண்டு வீட்டுல இருந்த பெரியவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஜாதி வேறுபாட்டால் பெரிய பிரச்சனை எழுந்திருக்கு. என் அம்மா ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டு வீட்டை விட்டு அவன் கூட வெளியில வந்துட்டாங்க. நான் பொறந்ததுக்கு அப்புறமும் அவங்களுக்கு ரெண்டு வீட்டுலேருந்தும் சப்போர்ட் கிடைக்கல.”
“கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, என் அப்பா குடி போதைக்கு அடிமை ஆயிட்டார். அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்குள்ள சண்டையும், சச்சரவும் ஆரம்பிச்சிடுச்சு. என் அப்பா தன் மாச சம்பளத்தை குடிச்சுத் தீர்த்ததும், அம்மாகிட்ட குடிக்க பணம் குடுன்னு தினமும் நச்சரிச்சிருக்கான். அம்மாவோட ஒரே தப்பு, ஏன் குடிக்கறேன்னு தன் புருஷன கேக்கறதுதான்.”
“ஏன் குடிச்சேன்னு கேட்டா, அன்னைக்கு எங்கம்மாவுக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும். பகல் நேரத்துல அவ்வளவு சாந்தமா அமைதியா இருக்கிற ஆள், சாயந்திரம் ஆனா மூர்க்கனாயிடுவானாம். என் அப்பா குடிச்சுட்டு வந்து அம்மாவை அடி அடின்னு அடிச்சு நொறுக்குவான். ஒண்ணும் புரியாத சின்ன வயசுல என் அம்மா அடி வாங்கறதைப் பாக்கும் போது எனக்கு ஏன் இந்த இராத்திரி வருதுன்னு இருக்கும்?
“அம்மா ஏன் அப்பாவை திருப்பி அடிக்கமாட்டேங்கறா? அம்மாதான் அவனை திருப்பி அடிக்கல; என் அப்பாவை திருப்பி அடிக்கணுங்கற வெறி எனக்கு வரும். நம்ம அப்பா குண்டா, உயரமா இருக்கானே, நாம இத்தணூண்டு குட்டிப் பொண்ணா இருக்கேனே, என்னால அவனை அடிக்க முடியுமா, அப்படிங்கற பயம் உடனே வந்துடும். என் அப்பனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது” பேச முடியாமல் சுகன்யாவின் கண் கலங்கி கண்ணீர் தத்தளித்தது.
“அந்த ஆறு வயசுல நான் அப்படியே பனிப் பாறையா மனசுல உறைஞ்சு போய், மாடிப்படிக்கு கீழே இருட்டுல உக்காந்துக்குவேன். யார் கிட்டவும் சீக்கிரத்துல பேசவே மாட்டேன். எத்தனையோ தடவை, என் அம்மா அடி வாங்கறளே பாவி, அப்படிங்கற பயத்துல, நடுக்கத்துல என் உள்ளாடை மூத்திரத்தால நனைஞ்சு போயிருக்கு.”
“அடி வாங்கினவளை, குண்டுகட்டா கட்டில்ல தூக்கிப் போட்டு, மேல ஏறி படுத்து அவன் உடம்பு பசியையும் தீத்துக்குவான். அது என்னன்னு அப்ப எனக்கு தெரியாது. இப்ப புரியுது. இப்பவும் இலேசா ஞாபகமிருக்கு. அன்னைக்கு நடந்ததை நினைச்சா என் உடம்பு இன்னைக்கும் நடுங்குது, ஒரு நாள் என் அம்மா மேல கிடந்தவனை, முதுகுல குத்தி, இழுக்க முயற்சி பண்ணேன். அவன் என்னை அறைஞ்சு தள்ளினான். குடி வெறியில என்ன பண்றோம்ன்னு தெரியாம என்னை கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்து … கடிக்க ஆரம்பிச்சிட்டான். எங்கம்மாவுக்கு வந்த வெறியை அன்னைக்குப் பாத்து நான் உறைஞ்சு போயிட்டேன்.
“என்னை என்ன வேணா பண்ணு, நான் பொறுத்துக்குவேன். என் பொண்ணைத் தொட்டே, உன்னைக் கொண்ணுடுவேன்னு கத்தினாங்க; தொடப்பக்கட்டையை எடுத்து சாத்து சாத்துன்னு அவனை சாத்தினாங்க என் அம்மா. அதிகமான குடி வெறியில, அவனுக்கு தொடர்ச்சியா கிடைச்ச அடியால, எங்கம்மாவை அவனால திருப்பி அடிக்க முடியல போல இருக்கு.”

“ஒரே ரகளை அன்னைக்கு. தெருவே ஒண்ணு கூடிப் போச்சு. என் மாமா, கையில அரிவாளை தூக்கிட்டு வந்தார். ரெண்டு அறை விட்டு என் அப்பனை கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளியத் தள்ளினார். இந்த வீட்டுக்குள்ள நீ வந்தா உன் காலை மட்டும் இல்ல, உன் கழுத்தையும் வெட்டுவேன்னார். அன்னைக்கு போனவன் தான் இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது.