கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 18

“என்ன விலை அழகே…!!!
என்ன விலை அழகே…! சொன்ன விலைக்கு வாங்க வருவேன்..!
விலை உயிரென்றாலும் தருவேன்…!
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ.. ஓ..
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…!!!”

“மே ஐ கம் இன் சார்…?”
“ப்ளீஸ் கம் இன்… உக்காரும்ம்மா… ஊர்லே எல்லாரும் செளக்கியம்தானே? மிஸ்டர் சுனில் டேக் யுர் சீட்..” கோபலன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறிப் பேசினார்.
“தேங்க் யூ சார்… மிஸ்டர் சுனிலுக்கு தமிழ் நல்லாத் தெரியுது… நீங்க தமிழ்லேயே பேசலாம்.” சுகன்யா மெலிதாக புன்னகைத்தாள். அவளையும் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை பூக்கள் தாராளமாக பூத்துக்கொண்டிருந்தன.
“ஐ..ஸீ…ரொம்ப சவுகரியமாப் போச்சு…” கோபலன் தன் வழுக்கை மண்டையை தடவிக்கொண்டார்.
“சுகன்யா, உன்னோட டெஸ்க்ல, சப்ஜெக்ட்வைஸ் நீ டீல் பண்ற பைல் லிஸ்ட்ஸ் பிரிப்பேர் பண்ண வேண்டியிருந்தது இல்லையா… அந்த வேலையை சுனில் கிட்ட கொடுங்க… இவர் ஸ்ட்ரெய்ட்டா கம்ப்யூட்டர்ல எக்செல் ஃபார்மேட்ல பைல் டீடெயில்ஸை என்ட்ரி பண்ணிடட்டும்…”
“ஓ.கே. சார்..”
“நம்ம தேவை என்ன…? எந்த ஃபார்மேட்ல பண்ணா… எப்படி பண்ணா ஆன் கோயிங் கம்ப்யூட்டரைசேஷனுக்கு… நம்ம ட்ரெய்னிங்க் செக்ஷ்ன் வொர்க்கை சுலபமா மாத்தமுடியுங்கறதை பத்தி ஏற்கனவே ஐ.டி. பியூப்பிளோட டிஸ்கஷன் பண்ணியிருக்கோம்..”
“ஓ.கே. சார்..”
ம்ம்ம்… இந்த ஆள் சிரிக்கவே மாட்டான் போல இருக்கே… சுனில், கோபாலன் முகத்தையும், அவருடைய டேபிளின் மேலிருந்த பேப்பர் வெயிட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். நிஜமாவே சுகன்யா சொன்ன மாதிரி இங்க இருக்கற ஆஃபீசர்ஸ், பொம்பளைங்க… ஆம்பிளைங்க எல்லாருமே… ஏன் மூஞ்சை ரொம்பவே சீரியஸா வெச்சிக்கிட்டு இருக்காங்க? சிரிச்சா இவங்க சேலரியில எதாவது டிடக்ஷ்ன் ஆயிடுமா?
“டெய்லி ஈவினிங்லே, நீங்க ரெண்டு பேருமா உக்காந்து, இவர் தினம் எண்ட்ரி பண்ண டேட்டாவை, கீளீனா ஒண்ணுக்கு ரெண்டு தரமா வெரிபை பண்ணி ஐ.டி. டிவிஷனுக்கு ஒரு சாஃப்ட் காப்பியும், கூடவே ஒரு ஹார்ட் காப்பியும் அனுப்பிச்சிடுங்க… வேணும்னா வித்யா தன் சீட்டோட வேலையை எப்படி முடிச்சிருக்காங்கன்னு ஒரு தரம் அவங்க கிட்டவும் பேசிக்குங்க… ஷீ வுட் ஹெல்ப் போத் ஆஃப் யூ.
“யெஸ் சார்…”
இந்த வாரம் இந்த வேலை முடிஞ்சதும்.. நெக்ஸ்ட் வீக் உங்க சீட் வேலையை சுனிலுக்கு ஃபீரீப் பண்ணிடுங்க…” முதல் முறையாக கோபாலன், சுனிலின் முகத்தைப் பார்த்தார். அதுவரை சேரில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்திருந்த அவன், சட்டென நிமிர்ந்து உட்க்கார்ந்தான்.
“யெஸ் சார்…” சுனில் தன் தலையை மிகவும் பவ்யமாக ஆட்டினான்.
“மிஸ்டர் சுனில்.. நீங்க மிஸ் சுகன்யாவோட ஒரு ரெண்டு வாரம் வொர்க் பண்ணுங்க… அவங்க சீட் வேலையை குயிக்கா நீங்க பிக் அப் பண்ணிக்கணும்.. ஷீ ஈஸ் வெரி இன்டெலிஜண்ட்… யூ வுட் ரியலி லைக் டு வொர்க் வித் ஹர்…”
“சார்.. என்ன சார் நீங்க.. என்னைப் போய் ரொம்ப புகழறீங்க…” சுகன்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“செர்டன்லி சார்..” கடனேயென முனகினான் சுனில்.
தலே… இப்படி ஒரு சான்ஸை எந்த மடையனாவது விடுவானா? நீ நல்லாயிருக்கணும் தலை… உன் பொன்னான வாயால சுகன்யா கூட என்னை அட்டாச் பண்ணியிருக்கேன்னு சொல்லிட்டியே.. உனக்கு எப்படி நான் நன்றி சொல்லப் போறேன்…