கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 18

இது என்ன உலகம்? இப்படி ஒரு மனுஷனா? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தட்டிக்கேக்க வேண்டியதை கூட இவர் ஒரு வார்த்தை கேக்க மாட்டேங்கறாறே? இவரை மாதிரி ஆஃபீசர்கள் நாலு பேரு இருந்தாலும் எந்த ஆஃபீசும் உருப்படாமத்தான் போவும்.. சுகன்யா தன் மனதில் எரிச்சலும், ஏமாற்றமும், அலுப்புமாக திரும்பி வந்தாள்.

‘அடியே சுகன்யா, இந்த நாய்ங்க கிட்ட கொலைச்சு, சண்டைப் போட்டு, நீ ஏன் உன் மூடைக் கெடுத்துக்கறேடீ… நீ சின்னப்பொண்ணு… உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே… பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாம ஜாலியா இருக்கே… உடம்பு தெம்புல, இந்த ஆஃபிஸ் திருந்தணும்.. இந்த உலகம் திருந்தணும்ன்னு கூச்சல் போடறே… ஆன உன் தனி ஒருத்தி கூச்சலால எந்த பலனும் இல்லே…’

‘என்னைப் பார்… நானும் ஆரம்பத்தில, இந்த ஆஃபீசுல சேர்ந்த புதுசுல, உன்னை மாதிரித்தான், ஒரு தண்ணி குடிக்கற கிளாஸுக்கு, எழுதறதுக்கு ஒரு பேனா, பென்சிலுன்னு சண்டை போட்டிருக்கேன்..’

‘இப்ப எனக்கு எல்லாம் சலிச்சிப் போச்சு.. இது ஒரு டிபிகல் கவர்மெண்ட் ஆஃபீஸ்டீ… இங்கே யாரும் உன் சின்சியாரிட்டிக்கு எந்த மெடலும் குடுக்கப் போறது இல்லே… இன்னும் சொல்லப்போனா, உன் கிட்ட இருக்கறதை பிடுங்கிக்காம் இருந்தா சரின்னு சந்தோஷப்படு…’

‘இங்க நடக்கிற இந்த அராஜகத்தையெல்லாம் நானும் எட்டு வருஷமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்டீ.. வந்தமா.. வேலையைப் பாத்தமா… சம்பளத்தை எண்ணி வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருடீ…’

வித்யா அவளுக்கு தாமரை இலையின் மேல் எப்படி புத்திசாலித்தனமான தண்ணீர் முத்துகளாக இருக்க வேண்டும் என்ற வித்தையை உபதேசித்தாள். அதற்கு பின், தனக்கு கிடைக்க வேண்டிய புது கம்ப்யூட்டரைப் பற்றி சுகன்யா சுத்தமாக மறந்தே போய்விட்டிருந்தாள்.

சுகன்யாவின் நினைப்புக்கு மாறாக, கோப்புகள் கன்னா பின்னாவென அவளுடைய சீட்டில் குவிந்து கிடக்காமல், டேபிள் வெகு சுத்தமாக இருந்தது. கால் உடைந்து ஒரு பக்கம் கோணிக்கொண்டு, திறக்கும் போது எந்த நேரத்திலும் தலையில் விழும் என்ற நிலையில், அவள் சீட்டுக்கு எதிரில் ஆடிக்கொண்டிருந்த, ஆதாம் ஏவாள் காலத்து இரும்பு அலமாரிகளுக்கு பதிலாக, அழகான கண்ணாடீ டாப் பொருத்தப்பட்ட, ஸ்லீக்கான பைல் கன்டெய்னர்களில், பைல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, அழகாக நின்றுகொண்டிருந்தன.

என்னாச்சு இந்த செக்ஷனுக்கு…? நான் லீவுலே இருந்த பதினைஞ்சு நாள்லே இங்கே இத்தனை மாற்றங்களா? என் பாஸ், சோம்பேறி சாவித்திரிக்கு டிரான்ஸ்ஃபர் கிரான்ஸ்ஃபர் வந்து எங்கேயாவது போய் தொலைஞ்சிட்டாளா?

புதிசா இங்க வந்திருக்கிற ஆஃபிசர் யாராவது முயற்சி எடுத்து இந்த மாத்தங்களை கொண்டாந்து இருக்காங்களா? ஆனா இந்த ஆஃபீஸுல, ஆஃபிசர்ஸ் எல்லாம் கெழங்கதானே? ஒரே குட்டையில ஊறின பொடி மட்டைகள்தானே? இல்லே.. நான்தான் தப்பா… தவறுதலா… வேற எந்த செக்ஷனுக்குள்ள நுழைஞ்சிருக்கேனா? அவள் ஆச்சரியத்துடன் தன் சீட்டில் அமர்ந்தாள்.

வித்யாவின் சீட்டிலும், சாவித்திரியின் சீட்டிலும் கூட புதிதான கம்ப்யுட்டர்கள், சிரித்துக்கொண்டிருந்தன. அந்த பிரிவு முழுவதுமே வயதுக்கு வந்த ஒரு இளம் பெண்ணின் முகம் போல் சுத்தமான கண்ணாடியாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

தன் உள்ளத்தில் எழுந்த
“இளம் பெண்’ என்ற இந்த உவமை சரிதானா? ஏன் ஒரு வாட்டம் சாட்டமான ஒரு அழகான யுவனாக இந்த செக்ஷனை நான் வர்ணிக்கக்கூடாதா? சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கமுடியாமல், வாய்விட்டு சிரித்தாள்.

“குட் மார்னிங் மேடம்..”

தன் முதுகின் பின்னாலிருந்த வந்த கனமானக் குரல் கேட்டு சுகன்யா விருட்டெனத் திரும்பினாள். திரும்பியவள் மீண்டும் ஒருமுறை தன் மனதுக்குள் அரை வினாடி அதிர்ந்தாள். எப்பவும் அழுது வடியற இந்த செக்ஷ்ன்ல்ல, காலங்காத்தால என்னைத் தேடிவந்து ஒருத்தன் வணக்கம் சொல்றான்? யார் இவன்?

அந்த நிமிடம்வரை சுகன்யா அந்த இளைஞனை தன் அலுவலகத்தில் பார்த்ததேயில்லை. முதல் முறையாக பார்ப்பவர்களையும், ஒரே பார்வையில் வசீகரிக்கும் இதமான புன்முறுவலுடன், களையான, கவர்ச்சிகரமான முகத்துடன், மிகவும் நேர்த்தியான உடைகளில் உற்சாகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

சுனில் குமார் பரத்வாஜ் என்கிற பரத், அணிந்திருந்த விலையுயர்ந்த கருப்பு நிற ஷூவில், ஒருவர் தன் முகத்தை தெளிவாகப் பார்த்துக்கொள்ளலாம் என்பது போல், பளபளப்பாக அவன் காலில் மின்னிக்கொண்டிருந்தன. அவன் மணிக்கட்டில் விலை உயர்ந்த
“ஃபாஸ்ட்ரேக்’ மின்னிக்கொண்டிருந்தது.

உயரமாக, வாட்டசாட்டமாக, முகத்தில் முடியே இல்லாமல், மழமழவென மழிக்கப்பட்ட முகத்துடன், சுகன்யாவின் எதிரில் நின்றிருந்தான். சற்றே நீளமான முடி. தலைமுடியை வகிடெடுக்காமல், பின்புறம் தள்ளி தூக்கி வாரியிருந்தான். சுருக்கங்கள் இல்லாத அகலமான நெற்றி. கூர்மையான மூக்கு, கவர்ச்சியான கண்கள். பெண்களுக்கு இருப்பதைப் போல அடர்த்தியான கருகருவென புருவங்கள். ரோஜா நிற உதடுகள், யாரோ அளவெடுத்து செதுக்கி ஒட்ட வைத்த மாதிரி இருந்தன.