கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

“தோடீ தோடீ ஹிந்தி ஆத்தி ஹை முஜே… நானும் யூ.பி.எஸ்.சி. அலாட்மென்ட்ல வந்தவதான்.. நான் உங்க சீனியர்தான்.. அதுக்காக சும்மா மேடம்… மேடம்ன்னு எனக்கு கொழை அடீக்காதீங்க… வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்.. சுகன்யான்னு கூப்பிடுங்க… அது போதும்… ஓ.கே.. சுகன்யா தன் கையை அவனிடம் நீட்டினாள்.

“தேங்க் யூ… மிஸ் சுகன்யா…”

சுகன்யாவின் நீட்டிய வலதுகையை இறுக்கமாக பற்றி வலுவாக குலுக்கினான், சுனில் குமார் பரத்வாஜ். அவளுக்கு கை வலித்தது. தைரியமான பொண்ணு.. முகத்துல தேவையே இல்லாத போலி, பாசாங்கு எதுவுமில்லே.. பத்தினி வேஷம் போட்டுக்காம, இயல்பா என் மூஞ்சைப் பாத்து சிரிச்சுப் பேசறாளே.. பரத்வாஜுக்கு உடல் சிலிர்த்தது.

“போதும்பா சுனில்… என் கையை விடுங்க.. எப்பாடா… இப்படியா வலிக்கற மாதிரி ஒரு பொம்பளைக் கையை பிடிச்சு குலுக்குவீங்க.. உக்காருங்க உங்க சீட்லே.. ஒரு மேடம் இப்ப வருவாங்க… அவங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜால்ரா அடீங்க.. அப்பத்தான் நீங்க இங்கே பொழைக்க முடியும்…” சுகன்யாவின் முகத்தில் குழந்தைத்தனமும், விஷமத்தனமும் ஒருங்கே குடியேறியிருந்தது.

நான் ஏன் இன்னைக்கு முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட இந்த அளவுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். என்னுடைய தனிச்சு இருக்கற சுபாவம் கொஞ்சம் கொஞ்சமா என்னைவிட்டு விலகிப் போற மாதிரி நான் ஃபீல் பண்றேனே.. இதுக்கு என்ன காரணம்? என்னுடைய இந்த பிஹேவியர் சரிதானா?

‘சுகன்யா எப்பவும் கலகலப்பா இருடீ… வாழ்க்கையில யாருக்குத்தான் கஷ்டமில்லே… உனக்கு இருக்கற முகஅழகுக்கு நீ சிரிச்சிக்கிட்டே இருந்தீன்னா… இன்னும் அழகா இருப்பே… நீயும் சந்தோஷமா இருக்கலாம்… உன்னை சுத்தி இருக்கறவங்களும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவாங்க…’ சட்டென இதை அடிக்கடி அவளிடம் சொல்லும், வேணியின் முகம் அவள் கண்ணில் வந்து நின்றது.

“சாவித்திரி மேடத்தைத் தானே சொல்றீங்க… முஜே தோ.. வே கதர்னாக் லக்தி ஹைங்!! (எனக்கென்னவோ அவங்க ஒரு டேஞ்சரஸான லேடியா தெரியறாங்க!!!) சுனில் தன் குரலைத் தாழ்த்தி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே பேசினான்.

“புரிஞ்சிக்கிட்டா சரி… பொழக்கற புள்ளைக்கு நான் குடுக்கற இத்தனை ஹிண்ட் போதும்…”

“தேங்க் யூ மிஸ் சுகன்யா… நீங்க சொன்னதை யார்கிட்டவும் நான் சொல்லமாட்டேன்.. கவலைப்படாதீங்க…” அவனும் சகஜமாக பேசினான். பின்னர் கலகலவென சிரித்தான். பற்கள் வெண்முத்துக்களாக பளீரிட்டன.

“க்யீங்க்.. க்யீங்க்…” சுகன்யாவின் எக்ஸ்டன்ஷன் அலறியது.

“சார்… குட்மார்னிங் சார்.. சுகன்யா பேசறேன்..”

“குட்மார்னிங்… சுகன்யா! எப்ப வந்தே நீ சென்னைக்கு… சாவித்திரி ஆஃபிசுக்கு வந்தாச்சா…? அவங்க இன்னும் வந்திருக்கலேன்னா… நீ என் ரூமுக்கு கொஞ்சம் வர்றியாம்மா… சுனில்ன்னு ஒரு பையனை உன் செக்ஷ்னல்லே போஸ்ட் பண்ணியிருக்காங்க.. அந்த பையன் வந்தாச்சா..?”

“யெஸ் சார்… மிஸ்டர் சுனில் வந்திருக்கார்…”

“நீ வரும்போது, அந்தப் பையனையும் உன்னோடவே அழைச்சிக்கிட்டு வாம்மா.. பிளீஸ்..” அவளுடைய பிரிவின் உயர் அதிகாரி கோபாலன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

“ஓ.கே. சார்… இதோ வர்றேன் சார்…”

“யார் கூப்பிடறது?” கண்களாலேயே பேசினான் சுனில்.

“பேசாம என் பின்னாலே வந்து சேரு…” சுகன்யவும் தன் அழகான கண்களால் பதிலளித்தாள்.

சுனில் குமார் பரத்வாஜ் நீளமாக ஒரு முறை தன் மூச்சை இழுந்து வெளியேற்றினான். வலது கையில் ஒரு குறிப்பெடுக்கும் நோட்டும், மறுகையில் ஒரு பென்சிலுமாக, தனக்கு முன்னால் தோள்களை நிமிர்த்தி, கம்பீரமாக நேரான பார்வையுடன், விடுவிடுவென எதிரில் வருபவர்களை கவனிக்காமல், கோபலனின் அறையை நோக்கி நடந்து செல்லும் சுகன்யாவின் அழகாக அசையும் அவள் பின்னெழில்களை வைத்த கண் வாங்காமல் ரசித்தவாறு, அவள் பின்னால் மெல்ல நடந்த, எஸ்.கே. பரத்வாஜின் மனம் களிப்புடன் முணகத் துவங்கியது…..