கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

கிழவியோ, குமரியோ, கல்யாணம் ஆனவளோ, விதவையோ, பிள்ளையை சுமப்பவளோ, மலடியோ, மாதவனுக்கு இதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப் படுவது இல்லை. யாராவது ஒருத்தியை தன் சீட்டுக்கு எதிரில் உட்க்கார வைத்து, கதை அளந்து, பற்களை காட்டிக்கொண்டிருப்பான். இப்படி பெண்களுடன் இளித்துக்கொண்டிருப்பதில்தான் தன் ஜென்மம் சாபல்யம் அடைவதாக அவன் நினைத்தான்.

மாதவனை கட்டிக்கொண்டவள், பத்து வருடம் முன், அவன் தொல்லைத் தாங்காமல், அவனை விட்டு விட்டு ஒரு சின்னப்பையனுடன் ஓடிப்போய்விட்டாளாம். அதிலிருந்து அவன் அலையும் அலைச்சலை, அந்த ஆஃபீஸ் ரின் சோப்பை போட்டு, அழுக்குத் துணியை அலசுவது போல் அலசிக்கொண்டிருந்தது. இதுவும் அவனுக்குத் தெரியும்.

மாதவனுக்கும் வெட்கம், மானம் என்ற எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரியாது. அர்த்தம் தெரிந்தாலும், அவன் தெரியாதவன் போல்தான் இருக்கிறான் என எல்லோரும் பேசி சிரித்தார்கள். வர்ஜா வர்ஜம் எதுவுமே இல்லாமல், அவன் கண்கள் எக்ஸ்ரே மெஷினாக மாறி எதிரில் நிற்கும் பெண் உடலை தலை முதல் கால் வரை துளைத்து எடுக்கும். அதைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் எந்த ஸ்டேஷனரியும் உடனடியாக கிடைத்துவிடும்.

அவன் அறைக்குப் போகும் அத்தனை பெண்களும் அவனுடைய திருட்டுப் பார்வையையை ஒரு ஐந்து நிமிடம் சகித்து கொண்டுதானாக வேண்டும். இதற்கு யாருமே விதிவிலக்கு அல்ல. அவன் அட்டூழியம் எல்லாம், தன் கண்களால், பெண்களை சுகிப்போதோடு சரி. அதற்கு மேல் அவன் என்றைக்குமே யாரிடமும் அத்து மீறியதில்லை.

அந்த ஆஃபீஸின் தலைவருக்கும் (செல்லமாக குருடன், திருதராஷ்டிரன், என அழைக்கப்படுபவரும், தன் பை நிரம்பினால் போதும், மற்றதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.. பலன் இருக்கிறது என்று தெரிகிற இடங்களில் அவர் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் இடுவதால், ஊழியர்களால் இந்த பட்டப் பெயர் அவருக்கு சூட்டபட்டிருந்தது.) மாதவனுக்கும் இடையில் ஏதோ ஒரு அந்தரங்கத் தொடர்பு இருப்பதாகவும், அரசல் புரசலான செவி வழி செய்தி ஒன்று நிலவிக் கொண்டிருந்ததால், அவனுக்கு எதிராக தலைமையதிகாரியிடம், யாரும் எழுத்து மூலம் கம்ப்பெள்ய்ண்ட் எழுதிக் கொடுக்கவும் தயங்கினார்கள்.

சுகன்யா, தனக்கு தன் வரிசைப்படி புதிய கம்யூட்டர் தரப்படவில்லை என தன் சீனியர் கோபாலனிடம் ஓரிரு முறை, முறையிட்டும் பார்த்தாள். அந்த சாது புண்ணியாத்மாவோ,
“கொழந்தே… சுகன்யா… என்னை நீ தப்பா நினைக்கதே… என் புது கம்ப்யூட்டரை வேணா நான் உனக்கு கொடுத்துடறேன்… நம்ம தலை குருடன் கிட்டவோ, இல்லே இந்த வெக்கம் கெட்ட தடியன் மாதவனோடவோ என்னால மல்லுக்கு நிக்க முடியாது… நான் சொல்றதை புரிஞ்சுக்கோ…”

“உன் சீட்டு வேலையை மட்டும் நீ பாரும்மா.. மத்ததையெல்லாம் கெடப்புல போடு.. சாவித்திரி எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுலே விட்டுட்டு.. எதுவாயிருந்தாலும் பைனலா, நான்தானே உன்னை கேக்கப்போறவன்..!?”

“வருஷ முடிவுல உன் கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட்டை நான் தானே எழுதணும்… எதைப்பத்தியும் நீ கவலைப் படாதே… ஆஃபீசுல நீ எடுக்கற முயற்சிகளைப் பத்தியும், தனிப்பட்ட முறையில உன்னைப் பத்தியும் எனக்கு நன்னாத் தெரியும்… இந்த ஆஃபீசைப் பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை… இது ஒரு சாக்கடை… இதுலே உன்னை அனாவசியமா நீ அழுக்காக்கிக்காதே..”

“எல்லாம் அந்த அந்த நேரத்தில் அததுவும் அதுவா நடக்கும் போது நடக்கும்…” இதைச் சொல்லிவிட்டு, தன் கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டு.. எதிரில் இருந்த கோப்பில் அவர் மூழ்கிப் போனார்.