கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

நீ சொல்லவே வேணாம்… நாளைக்கு செவ்வாக்கிழமை… ராத்திரி என்னேரம் ஆனாலும் சரி… செங்கல்பட்டு பஜரங்கபலி ஹனுமான் சன்னிதியிலே நாலு தேங்காய் உடைக்கறதுன்னு… ஏற்கனவே நான் முடிவெடுத்துட்டேன்…
வொர்க் பண்ணா இந்த மாதிரி அழகு தேவதை ஒருத்திப் பக்கத்துல உக்காந்துதான் வேலை செய்யணும்… முகத்தை சீரியஸாக வைத்திருந்த போதிலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக்கொண்டிருந்தான், சுனில்.
“சுகன்யா.. ஐ நோ.. வாட் அயாம் ஸ்பீகிங்..”
“மிஸ்டர் சுனில்.. நீங்க ரெண்டு வாரத்துக்கு அப்புறம் மிஸிஸ் வித்யா கூடவும்.. நாகராஜன் கூடவும், தலா ஒரு ஒரு வாரம் அவங்க கூட உக்காந்து, அவங்க டெஸ்க்குல என்ன நடக்குதுண்ணும் தெரிஞ்சுக்கங்க…”
“சார்…”
“சுகன்யாவோட சீட் கொஞ்சம் ஹெவியானதா இருந்தாலும், ஐ ஹோப் யூ வுட் லைக் இட்… அதுக்கு மேல அது ஒரு கான்ஃபிடன்ஷியல் சீட்டும் கூட… டேரக்ட் அஸிஸ்டெண்டுக்குதான் அந்த சீட்டை நான் குடுக்க விரும்பறேன்…”
“யெஸ் சார்…அயாம் ஹானர்ட் சார்…”
“சார்.. உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?” சுகன்யா முகத்தில் சிறிய ஆச்சரியத்துடன் பேசத் தொடங்கினாள்.
“யெஸ்…சொல்லும்ம்மா…”
கோபலன் முகத்திலும் இப்போது இலேசாக புன்னகை அரும்பியிருந்தது. அவருடைய ஆஃபீஸர் தோரணை சிறிது குறைந்திருந்தது. அப்பா, சிரிச்சிட்டாண்டா மனுசன்… சிரிச்சா இவன் மூஞ்சியும் நல்லாத்தான் இருக்கு… சுனில் மனதுக்குள் அவரை மெச்சிக்கொண்டான்.
“எனக்கு ட்ரான்ஸ்ஃபர் எதாவது வருதா சார்?”
“மிஸ்டர் சுனில்.. யூ மே கோ நவ்.. மிஸ் சுகன்யாவோட நான் கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு… அடுத்த தரம் என் ரூமுக்கு வரும் போது எப்பவும் ஒரு சின்ன நோட்புக்கும் பென்சிலுமா வாங்க… மேக் திஸ் யுர் ஹாபிட்..” கோபலன் முகத்தில் அதிகாரம் மீண்டும் குடியேறியது.
“யெஸ் சார்… தேங்க் யூ வெரி மச் சார்…” சுனிலின் முகம் மாறியது.
சை… தூத்தெறிக்கி… கிழவன் கடைசீல என்னை நல்லா வெறுப்பேத்தி வுட்டுட்டான். என் மூடையே கெடுத்திட்டானே பாவி.. சட்டுன்னு என்னை கட் பண்ணி வுட்டுடானே… சுகன்யாவை வேற எந்த செக்ஷ்னுக்காவது ட்ரான்ஸ்ஃபர் பண்ணப் போறானா? என் ஆசைக் கனவெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நீடிக்குமா?

‘ம்ம்ம்.. பஜரங்க்பலி.. தோடுதோ மேரே துஷ்மன் கி நலி…!!’ (அப்பனே.. ஹனுமந்தா… என் எதிரியின் நரம்பை வெட்டிவிடப்பா) மனதில் தன் பிரிய தெய்வம் ஹனுமானுக்கு அவசர அவசரமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினான்.

கோபாலன் தன் எதிரில் இருந்த டேபிள் மணியை அழுத்தினார். உள்ளே வந்த அட்டெண்டர் நாராயணனிடம் சூடாக ரெண்டு காஃபி வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்தார். மெதுவாக எழுந்து தன் நாற்காலிக்குப் பின்னால் சுவரின் ஓரமாக, இருந்த வாட்டர் ஜக்கில் இருந்து ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீரை நிரப்பி நிதானமாக குடித்தார்.

மீண்டும் தன் சீட்டில் உட்க்கார்ந்து, தன் முகத்திலிருந்த மூக்குக்கண்ணாடியை கழட்டி, கர்சீஃபால் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். தான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், கோபாலன் செய்து கொண்டிருந்த காரியங்களை கண்ட சுகன்யாவின் மனதில் உள்ளூர சிறிது எரிச்சல் கிளம்பியது.

இந்த மனுஷன் நல்லவன்தான். நேர்மையானவன்தான். வீணா யார்கிட்டவும் பேசமாட்டான். வீட்டுல கட்டிக்கிட்ட பொண்டாட்டி எதிர்லே வாயைத் தொறக்க மாட்டன்னு சாவித்திரி சொல்லி சொல்லி சிரிக்கறா.. ஆஃபிசுல தான் ஒரு ஆஃபிசர்.. நீ என் சஃபார்டினேட்… அப்படீன்னு ரொம்பவே கித்தாய்ப்பா சீன் போடற ஆளு.

பேசாமலே இருந்துக்கிட்டு எதிர்ல உக்காந்து இருக்கறவங்களை எப்படியெல்லாம் வெறுப்பேத்தலாம்ன்னு இவருகிட்டதான் ஒருத்தன் ட்ரெயினிங் எடுத்துக்கணும்.. தன் குறிப்பேட்டை திறந்து கடைசி பக்கத்தில் பென்சிலால், ஒரு வழுக்கைத்தலையன் படத்தை வரைந்து கொண்டிருந்தாள், சுகன்யா.

“கன்கிராட்ஸ்..சுகன்யா.. உன் நிச்சயதார்த்தமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?”

“ஆமாம் சார்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. இதைப்பத்தி உங்களுக்கு யார் சொன்னது சார்?” திடுக்கிட்ட குரலுடன் தன் தலையை நிமிர்த்தினாள் அவள்.

“செல்வாதான் சொன்னான்ம்மா.. அவன் ஹெட் மூர்த்தி லீவுலே இருக்கார்… தனக்கு லீவு எக்ஸ்டன்ஷன் வேணும்ன்னு உங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி எங்கிட்டதான் வந்தான்.. சரி சந்தோஷமா போய் வாடாப்பான்னேன்… ம்ம்ம்… உங்க கல்யாணம் எப்பம்மா?

“அவரோட அத்தை யுஎஸ்லேருந்து அடுத்த மாசம் வர்றதா இருக்காங்களாம்… அந்த சமயத்துல மேரேஜ் வெச்சுக்கலாம்ன்னு அவங்க வீட்டுல நினைக்கறாங்க… சார்”

“ம்ம்ம்.. வாஸ்தவம்தானே… உனக்கொண்ணும் அவசரம் இல்லையே?” சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர் தன் வழுக்கை தலையை சொறிந்து கொண்ட போது, நாராயணன் காஃபி கோப்பைகளை அவர்கள் இருவர் முன்னும் வைத்துவிட்டு விலகினார்.