கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

பாத்ரூமிலிருந்து வந்த குமார், அசையாமல் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த மகளை, மனதில் பெருமிதத்துடன் பார்த்தார். ஓசையெழுப்பாமல், தேனீரை தயார் செய்து, இரு கப்புகளில் ஊற்றினார்.

சுகன்யா தன் கண்களை மெல்லத் திறந்தாள். சுகன்யாவின் மனம் முழுசாக பதினைந்து நிமிடங்கள் கூட தியானத்தில் நிலைக்கவில்லை. கையில் தேனீர் கோப்பையும், முகத்தில் புன்னகையுமாக, தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் தந்தையைப் பார்த்தவள், முகம் சட்டென சுருங்கிப் போனது.

“அப்பா… உங்களுக்கு
“டீ’ நான் போட்டுக் கொடுக்க மாட்டேனா..? நீங்க எதுக்காக இந்த வேலையெல்லாம் செய்யறீங்க..? அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை திட்டுவாங்கா.. நீங்க எழுந்தப்பவே என்னையும் எழுப்பியிருக்க வேண்டியதுதானே?” சுகன்யா சிணுங்கினாள்.

“நீ அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேம்மா… அலாரம் அடிக்கறது கூட உனக்கு கேக்கலே..? குமாரசுவாமி மகளின் தலையை ஆசையாக வருடிக் கொண்டிருந்தார்.

“அப்ப்பா… சீக்கிரமா ஒரு வீடு பாருங்கப்பா.. தாத்தா என் கூட இருக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்…”

“செல்வாவோட ஃப்ரெண்டு இருக்காரே… சீனுதானே அந்தப் பையன் பேரு… அவங்க ஏரியாவுல ஒரு வீடு காலியா இருக்கு அப்டீன்னு… ராத்திரி போன் பண்ணியிருந்தார்.. அப்ப நீ தூங்கிட்டே.. இன்னைக்கு ஈவினிங் பாக்கலாம்ன்னு சொல்லியிருக்கேன்..”

“சீனு ரொம்ப நல்ல டைப்புப்பா.. அவுட் ஆஃப் த வே… அவரே போய் எல்லாருக்கும் ஹெல்ஃப் பண்ணுவார்… செல்வாவோட ஃபேமலி ஃப்ரெண்ட்.. அவரு..”

“ம்ம்ம்… சாயந்திரம் அந்த வீட்டைப் பாக்கறதுக்கு நீயும் வர்றியா…?”

“டூ வீக்ஸ் கழிச்சி இன்னைக்குத்தான் நான் வேலையில ஜாய்ன் பண்றேன்… சீக்கிரம் சீட்டை விட்டு சட்டுன்னு எழுந்து வரமுடியாதுப்பா.. உங்களுக்கு வீடு பிடிச்சிருந்தா.. ஓ.கே. பண்ணிடுங்க…”

“ம்ம்ம்…”

“அப்பா… இட்லியும் தொட்டுக்க சட்னியும் பண்றேன்.. லஞ்சுக்கு எடுத்துட்டுப் போறீங்களா?”

“வீட்டுல ஃப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடறேம்மா… எனக்குன்னு லஞ்ச் எதுவும் தயார் பண்ணாதே… எனக்கு ருட்டீன் வேலை, மீட்டிங்… ஃபீல்டுல குடவுன் இன்ஸ்பெக்ஷன், அது இதுன்னு ஒரு நாள்லே பத்து எடத்துக்கு போகவேண்டி இருக்கும்… உன்னை மாதிரி சீட்டுலேயே உக்காந்து பாக்கற வேலை இல்லை என்னுது… லஞ்ச் நேரத்துல… எங்கே எது கிடைக்குதோ, அதைதான் சாப்பிடறது என் பழக்கம்.. ராத்திரி டின்னர் வீட்டுல வந்து சாப்பிடுவேன்…”

“அம்மா என்னைத் திட்டுவாங்கப்பா… உங்களுக்கு தினமும் லஞ்ச் பேக் பண்ணி குடுக்கணும்ன்னு என் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்கப்பா”

“பத்து நாள்லே உன் அம்மா இங்க வந்துடுவா… லஞ்ச்செல்லாம் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்.. உன்னை நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே… இப்ப நான் வாக்கிங் போய்ட்டு வந்திடறேன்… சரியா..” சுகன்யாவின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு எழுந்தார், குமாரசுவாமி.
“சுகா… இன்னிக்கி ஈவினிங் உன் சவுகரியப்படி நீ வீட்டுக்கு போயிடுமா… நான் வர்றதுக்கு லேட் ஆகும்…” தன் அருகில் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த சுகன்யாவை, அவளுடைய அலுவலகத்தின் அருகில் டிராப் செய்தார், குமாரசுவாமி.

“சரிப்பா… வீட்டுல வந்து சாப்பிடுங்கப்பா..” சுகன்யா புன்னகைத்தவாறே, காரை விட்டு இறங்கினாள்.

***

சுகன்யா வருகையை பதிவு செய்துவிட்டு, தன்னுடைய பிரிவில் நுழைந்தவள் ஒரு கணம் அசந்து போய் நின்றாள். அவளுடைய தேவையான புத்தம் புதிய கணினியும், அவள் கேட்டிருந்ததற்கு மேலாகவே, கம்யூட்டருடன், ஃபேக்ஸ், ஸ்கேனர், போட்டோ காப்பியர், பிரிண்டர் என எல்லா வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆல்-இன்-ஒன் சாதனம் ஒன்றும் அவள் டேபிளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. விருட்டென தன் சீட்டுக்கு ஓடி, அவைகளை ஒரு சிறு குழந்தையைப் போல் தொட்டு தொட்டுப் பார்த்தாள். மனதுக்குள் உற்சாகம் பொங்கியது.

வேலைக்கு சேர்ந்த மறு நாளே அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆதாம் ஏவாள் காலத்து கம்யூட்டரை உடனடியாக மாற்றித் தரவேண்டும் என அவள் விண்ணப்பம் கொடுத்திருந்தாள். மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிதாக கணிணிகள், தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருப்பது தெரிந்ததும், சுகன்யா ஒரு வார காலம் தினமும் ஸ்டோருக்கு நடையாக நடந்தாள். ஸ்டோர்ஸ் இன்சார்ச் மாதவனின், வெற்றிலை காவியேறிய ஓட்டைப் பற்களையும், அவன் உதட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் அசட்டு சிரிப்பையும் அவள் பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.