கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 18

அப்பா சரியா டாண்ணு அஞ்சு மணிக்கு எழுந்துடுவார். அஞ்சரைக்கு நடக்கப் போயிடுவார். ஒரு பத்து நாளைக்கு நீ விடியகாலையில எழுந்து, ஒரு கப் அப்பாவுக்கு டீ போட்டு குடுடீ கண்ணு… அப்புறம் நான் வந்து அவர் தேவைகளை கவனிச்சிக்கறேன்.. கும்பகோணத்திலிருந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன், சுந்தரி தன் பெண்ணிடம் நாலு தரம் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பியிருந்தாள்.

“ஏம்மா.. அப்பாவை நான் பாத்துக்க மாட்டேனா? இதெல்லாம் எனக்கு நீ சொல்லணுமா?” சுகன்யாவின் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது.

“பாவம்டீ உன் அப்பா.. இத்தனை நாள்தான் தனியா கஷ்டப்பட்டார்.. தனியா தன் கையாலேயே டீ போட்டு குடிச்சாரு.. பொங்கித் திண்ணுகிட்டு இருந்தாரு… இனிமேலாவது.. பொம்பளை கையால திருப்தியா சாப்பிடட்டுமேன்னு சொல்றேன்டீ..”

“பாட்டீயும், தாத்தாவும் அப்பாக்கூடத்தானே இருந்தாங்க…” வேணுமென்றே கிண்டினாள், சுகன்யா.

“எனக்குத் தெரியாதா அந்தக் கதையெல்லாம்..? அப்பனுக்கு செய்யறதுக்கு அழுவறே… உன்னால முடிஞ்சா செய்… முடியலைனா விடுடீ… சும்மா என் கிட்ட விவாதம் பண்ணாதே..” சுந்தரி தன் முகத்தைத் தூக்கிக்கொண்டாள்.

“அம்மா… தமாஷுக்குச் சொன்னேன்ம்மா… அவர் என் அப்பா மட்டுமில்லே… உன் புருஷனை, நீ வர்ற வரைக்கும் நான் பத்திரமா பாத்துக்கறேன்.. கவலையேப் படாதே…” அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், சுகன்யா.

“தேங்க்ஸ்டீ.. சுகா…” சுந்தரியின் முகம் தாமரையாக மலர்ந்தது.

***

கண்ணு… சுகா இராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி ஒரு தரம், காலையில எழுந்ததும் ஒரு தரம், நூத்தியெட்டு முறை நம்ம குலதெய்வம் சிவனை
“ஓம் சிவாய நம” அப்படீன்னு நெனைச்சுக்க; கொஞ்ச நாள்லே வாழ்க்கையில எல்லாமே போதுங்கற மனசு உனக்கு வந்துடும்.

மனசு கண்டபடி இங்கயும் அங்கயுமா அலையறது கொறையும். திருப்தியோட எப்படி இருக்கறதுங்கற வித்தை கைகூடும்… ஒரு வீட்டுல மனசுல திருப்தியோட இருக்கற பொம்பளை இருந்தா, அந்த குடும்பத்துல மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது… தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

சப்பணமிட்டு உட்கார்ந்த சுகன்யா, தன் உள்ளங்கைகளை நான்கைந்து முறை பதட்டமில்லாமல் தேய்த்து தன் மூடிய கண்களின் மேல் ஒற்றிக்கொண்டாள். உள்ளங்கையில் எழுந்த சூட்டை இமைகளில் உணர்ந்தாள். அலையும் தன் மனதை புருவ மத்தியில் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தாள்.

ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: என மனசுக்குள் நிதானமாக ஜபிக்க ஆரம்பித்தாள். ஊருக்குப் போயிருந்த போது, ஒரு வாரம் தாத்தா சிவதாணுவுடன் இருந்ததின் விளைவு இது.

செல்வாவின் நட்பு கிடைப்பதற்கு முன் தினமும் காலையிலும், இரவிலும் தியானம் செய்வது அவள் வழக்கம். அவனை சுகன்யாவின் மனது விரும்ப ஆரம்பித்ததிலிருந்து அவளையறியாமல் தியானம் செய்யும் பழக்கம் அவளை விட்டுப் போய்விட்டது. தாத்தாவின் அறிவுரைப்படி, கடந்த பத்து நாட்களாக மீண்டும் தியானத்தில் உட்க்காருவதை தன் வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.