கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

முகத்தில் இலேசாக பெண்மையின் சாயல் இருந்த போதிலும், பேசிய குரலில் அமிதாப்பச்சனின் கம்பீரம் இருந்தது. வளப்பமான சதைப்பிடிப்பான கன்னங்கள். முதல் பார்வைக்கு சென்னையில், பூர்வீகமாக வட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும், ஒரு சேட்டு வீட்டுப் பையனைப் போல் செழிப்பாக இருந்தான். மொத்தத்தில்
“பாபி’ திரைப்படத்தில் நடித்த இளமைக்கால ரிஷிகபூரை ஞாபகப்படுத்தினான் அவன்.

“குட் மார்னிங்…” சுகன்யாவும் புன்னகையுடன் பதிலளித்தாள். மனதில் இருந்த உற்சாகம், அவள் குரலில் வெள்ளமாக வந்தது.

“அயாம் எஸ்.கே. பரத்வாஜ்… யூ மஸ்ட் பி மிஸ் சுகன்யா..” கணீரென, அதிகாரத்தோரணையில் வந்தது அவன் குரல்.

“யெஸ்… அயாம்… சுகன்யா… பட் அயாம் சாரி… யுர்செல்ஃப்..” இவனை யாருன்னு எனக்குத் தெரியலயே… ஹெட் ஆஃபிசுலேருந்து டெம்பரவரி டீயுட்டில வர்ற ஆஃபிசர்களா ஒருத்தனா இருப்பானா இவன்? மனதுக்குள் குழம்பினாள் அவள்.

“மேடம்… வெரி க்ளாட் டு மீட் யூ… நான் இந்த ஆஃபீசுல புதுசா… அஸிஸ்டன்டா ஜாய்ன் பண்ணியிருக்கேன்… லாஸ்ட் ஃப்ரைடே, ரெண்டு நாள் முன்னாடித்தான், எனக்கு இந்த செக்ஷ்ன்ல்ல போஸ்டிங் குடுத்து இருக்காங்க… வீக் எண்டுக்கு அப்புறம் இன்னைக்கு நான் ரிபோர்ட் பண்ண வந்திருக்கேன்…”

“வெல்கம்.. வெல்கம்… அதுக்குள்ள என் பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டு இருக்கீங்க..” அப்படாவென இருந்தது அவளுக்கு… என்ன அதிகாரமா பேசறான்…? ஒரு செகண்ட் பயந்தே போயிட்டேன்…!! கடைசீல இவனும் என்னை மாதிரி இங்க குப்பை கொட்ட வந்திருக்கறவன்தானா? தன் கன்னங்கள் குழைய, முல்லைநிறப் பற்கள் தெரிய சிரித்தாள், சுகன்யா.

“தேங்க்யூ..மேம்.. வெள்ளிக்கிழமை ஈவினிங் அஞ்சு மணி வாக்குல இங்கே வந்தேன்.. அப்ப வித்யா மேடம் மட்டும்தான் இருந்தாங்க.. நீங்க தான் என் ஜாய்னிங் ரிப்போர்ட்ல்லாம் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு அனுப்புவீங்கன்னு அவங்கதான் உங்களை ரெஃபர் பண்ணாங்க..” அவன் முகத்தில் சிரிப்புக்கு குறைவேயில்லை.

“டோன்ட் வொர்ரீ.. ரெண்டு வாரமா நான் லீவுலே இருந்தேன்… இன்னைக்குத்தான் நானும் வேலையில ஜாய்ன் பண்றேன்… ஜாய்னிங் ரிப்போர்ட் அனுப்பறதெல்லாம் ரூட்டின்னா நடக்கும்.. மொதல்லே உட்க்காருங்க… உங்க பேர் வெறும் பரத்வாஜ் மட்டும்தானா இல்லே..” சுகன்யா இழுத்தாள்.

“என் முழு பேரு சுனில் குமார் பரத்வாஜ்… நான் பிறந்தது லக்னோவுல.. வளர்ந்தது.. ஸ்கூலிங்ல்லாம் டில்லியிலே… மத்தபடி கடந்த அஞ்சு வருஷமா டிகிரி… பி.ஜி பர்சுயூ பண்ணதெல்லாம் தமிழ்நாட்டிலேதான்… அப்பா அம்மா, தங்கை எல்லாரும் இங்கே செங்கல்பட்டுலத்தான் இருக்காங்க…”

“யூ.பி.எஸ்.ஸி. பரிட்சை எழுதிட்டு… ஆஃப்ஷன் தமிழ்நாட்டுக்கு கொடுத்திருந்தேன்.. பார்ட்ச்சுனேட்லி தமிழ்நாட்டுலேயே அலாட்மெண்ட் கிடைச்சிடிச்சி…” பதட்டமில்லாமல், கோர்வையாக, நிதானமாக பேசினான்.

“இன்ட்ரஸ்டிங்… தமிழ் ரொம்ப நல்லா பேசறீங்க…”

“பின்னே.. என் அம்மா தமிழ் பெண்.. அப்பா நார்த் இண்டியன் பரத்வாஜ் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.. நான் ரெண்டும் கெட்டான்… தமிழனும் இல்லே… யூ.பி. வாலாவும் இல்லே… முதலியாரும் இல்லே.. அய்யரும் இல்லே… யாதும் ஊரே யாவரும் கேளீர்… அம்மா மட்டும் என்னை பரத்ன்னு ஆசையா கூப்பிடுவாங்க..” கலகலவென அவன் சிரித்தான்.

“வாவ்… பகுத் படியா… மிஸ்டர் சுனீல்… உங்க சுயசரிதத்தையே சொல்லிட்டீங்க.. ஆப் கி பாத் சுன்கர் மஜா ஆ கயா..!” சுகன்யாவும் கல கலவென சிரித்தாள்.

“உங்களுக்கு இந்தி பேசத் தெரியுமா மேடம்…!!? பர்ஃபெக்ட்டா… சுத்தமான ஹிந்தி பேசறீங்க… நல்லதா போச்சு.. எனக்கு பொழுது போயிடும் இந்த செக்ஷ்ன்ல்ல!!” அவன் முகத்தில் வண்டிவண்டியாக திகைப்பு.