என் சீனுக்குட்டிதானே.. தொலைஞ்சுப் போறான்… கிட்டப் போய்த்தான் பாப்போமே… என்னப் பண்றான்னு… மிஞ்சி மிஞ்சிப் போனா கட்டிப்புடிச்சி அவனே என்னை கிஸ் அடிப்பான்.. அவ்வளவுதானே… அதுக்குமேல எதாவது ஆரம்பிச்சான்ன… பட்டுன்னு கட் பண்ணிடணும்… சீராக சிந்தித்த மீனாவின் மனதிலும் சீனுவை கட்டிபிடிக்கும் ஆசை ஆவேசமாக எழுந்தது.
மீனா சீனுவை நோக்கி நகர்ந்தாள். அவனருகில் நின்று அவன் தலையைக் கலைத்தாள். சீனு அவள் தோளில் தன் கையைப் போட யத்தனித்தபோது அவன் மொபைல் அலறியது.
“கம்மினாட்டிங்க… பூஜை வேளையில கரடி மாதிரி வந்துடறானுங்க…” எரிச்சலுடன் முனகிக்கொண்டே, சீனு செல்லை ஆன் செய்தான். சீனுவின் முகத்தில் தோன்றிய எரிச்சலைக் கண்ட மீனா குஷியாகச் சிரித்தாள். சிரித்தவள் மெல்ல கதவை நோக்கி நகர ஆரம்பித்தாள்.
“எங்கடீப் போறே?”
“நீ பேசி முடி..” விஷமத்துடன் கண்ணடித்தாள், மீனா.
சீனு அவளை கண்ணாலேயே தன் அருகில் அழைத்தான். மீனாவும் தயங்கி தயங்கி அவன் அருகில் வந்து நின்றாள்.
மாப்ளே… எங்கடாப் போயிட்டே… இந்த ஊர்லத்தான் இருக்கியா? உன்னை ஆளைப்பாத்து பத்து நாளாச்சுடா…” மறுமுனையில் வேலாயுதம் உற்சாகமாக கூவினான்.
வெல்லாயுதத்தின் உற்சாகத்துக்கு காரணம், காலையிலேயே அவனுக்கு அவன் சிஷ்யன் ஒருவன் ஒரு குவார்டரோட வந்து கதவை தட்டி, ரெண்டு மூடி சோடாவில் கலந்து ஊத்திவிட்டு போயிருந்தான். அவன் கூவியது சீனுவின் பக்கத்தில் வெகு நெருக்கமாக நின்ற மீனாவுக்கு மிக மிக தெளிவாகக் கேட்டது.
மீனா, சீனுவின் நெற்றியில் வந்து விழும் அவன் தலை முடியை கலைத்து விளையாட ஆரம்பித்தாள். சீனு அதுதான் சாக்கு என அவளை சட்டென இழுத்து தன் மடியில் உட்காரவைத்துக் கொண்டான். அவன் வலது கரம் அவள் இடுப்பில் தவழ்ந்தது.
“சரி.. சரி.. வெல்லாயுதம்… அடங்குடா… மச்சான்.. உன் குரலே ஒரு மாதிரி இருக்குது… உடம்பு கிடம்பு சரியில்லையா… எதாவது மருந்து கிருந்து சாப்பிட்டியா? என்னா விஷயம்.. நான் இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன்டா.. ஐ வில் கேச் யூ லேட்டர்…”
சீனுவுக்கு புரிந்து விட்டது. எவனோ ஒரு தறுதலை இவனுக்கு மூடி நிறைய ஊத்திக்குடுத்து இருப்பான். இந்த கேனப் பயலுக்கு நேரம் காலமே கிடையாது என மனதுக்குள் சலித்துக்கொண்ட சீனு, சற்றே மிரட்சியுடன் அவனுக்குப் பதில் கொடுத்தவன், மீனாவின் கன்னத்தில் தன் கன்னத்தை உரசினான்.
“என்னாத் தலை.. உன் ஜிகிரி தோஸ்தை ச்சட்டுன்னு கட் பண்றியே… ஞாயமா இது.. மாப்ளே எங்கடா இருக்கே இப்ப நீ.. வீட்டுக்கு வரட்டா…”
“டேய்.. சும்மா இருடா நீ.. என் கோவத்தை கிளறாதே… சாயந்திரம் நானே வந்து பாக்கறேன் உன்னை…”
“என்னாத் தலை.. ஆஃபீஸ்ல இருக்கியா என்னா…? இல்லே… பக்கத்துல பிகர் எதாவது நிக்குதா… மச்ச்சீ…” வேலாயுதம் சீனு சொல்வதை புரிந்து கொள்ளாமல் அசட்டுதனமாக சிரிக்கிறேன் என்ற பெயரில் கழுதையைப் போல் கனைத்தான்.
மீனா சற்று முன் பீச்சில், அவன் கையில் சிகரெட்டைப் பார்த்துவிட்டு, அவனை உப்புத் தண்ணீ ஊத்தி கஞ்சி காய்ச்சியது, சீனுவின் மனதில் சட்டென வந்தது. எனக்கு நேரமே சரியில்லை. என்னடா இது என்னைப் புடிச்ச சனியனை பீச்சுல வுட்டுட்டு வந்தோமே… இன்னும் அவன் வரக் காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.
இப்ப அந்த சனியன் வேலாயுதம் ரூபத்துல செல்லு வழியா வந்துட்டான். மீனா இவன் பேச்சைக் கேட்டுட்டு இப்ப என்னக் கூத்தடிக்கப் போறாளோ.. சீனுவின் மனதுக்குள் ஒரு சிறிய கலக்கம் உடனடியாக எழுந்தது.
சீனு தயக்கத்துடன் தலையை திருப்பி தன் மடியில் உட்கார்ந்திருந்த மீனாவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் மாலை நேரத்து கீழ் வானமாக சிவக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அவள் பார்வையில் அவள் மனதில் கிளம்பும் எரிச்சல் தெளிவாகத் தெரிந்தது. சீனுவின் மடியிலிருந்து விருட்டென எழுந்திருக்க முயன்றவளை.. சீனு இறுக்கமாக கட்டி அவள் பின் கழுத்தில் தன் உதடுகளை உரசினான்.
“டேய்.. வெல்லாயுதம்.. காலைக் கட் பண்றா.. நான் உன்னை கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடறேன்…” சீனு இறைந்தான் தன் தோழனிடம்.
“சரி மாப்ளே.. ஒரே ஒரு செகண்ட்.. நான் சொல்ல வந்ததை மட்டும் ஜல்தியா.. சுகுரா சொல்லிடறேன்.. மத்தியானம் மூணு மணி வாக்குல என் ரூமுக்கு பக்காவா வந்துடு மாப்ளே… வயித்தை காலியா வெச்சுக்கோ…”
“சீக்கிரமா சொல்லித் தொலைடா…. மேட்டர் என்னடா… உன் கூட பெரியத் தொல்லையாப் போச்சு..” சனியன் புடிச்சவனுக்கு நான் இருக்கற நிலைமை புரிஞ்சாத்தானே.. மேல மேல பேசிக்கிட்டேப் போறான். மீனா அவன் பிடியில் திமிறிக்கொண்டிருந்தாள். அவன் அவளை எழவிடாமல், அவள் இடுப்பை அழுத்தமாக வளைத்துக்கொண்டிருந்தான்.
Manichudunga ram sooper story pls next part