கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“ம்ம்ம்.. இப்பத்தான் அவன் மீசையை எடுத்துட்டானே… இப்ப எப்படீ இருக்கான் அவன்?” உஷா சிரித்தாள்.

“ஹிந்திப் படத்துல வர்ற ஹீரோ மாதிரியிருக்கார்…” மீனா வெட்கத்துடன் முறுவலித்தாள்.

“செல்வாவும் தானே மீசை வெச்சிருக்கான்…” பத்மா விருட்டென ஒரு கேள்வியை எழுப்பினாள்.

“செல்வாப் பத்தி சுகன்யாதான் கவலைப்படணும்.. அவ தானே அவனைக் கட்டிக்கப் போறவ.. அத்தே” மீனாவிடமிருந்து சட்டென வந்தது பதில்.

“நல்லாச் சொன்னேடீ… சீனு உன் கிட்ட வந்தான்னா மூஞ்சியில முள்ளு குத்தாது..” சொல்லிவிட்டு சிரித்தாள் உஷா..”

பெண்கள் மூவரும் ஒசையாக சிரிக்கும் சப்தத்தை கேட்டு, தன் முகத்தில் கிளம்பிய ஆச்சரியத்துடன் தன் மகனை உற்றுப் பார்த்தார், ராகவன்.

“வந்தவகிட்ட ஒரு வார்த்தை பேசவிடாம ரூமுக்குள்ள இழுத்துக்கிட்டு போயிட்டாளுங்க… குசுகுசுன்னு பேசி சிரிச்சி யாரை கிண்டல் பண்றாளுங்க?”

“பத்மா… என்னடீ… நடக்குது இங்க? சொல்ற ஜோக்கை எங்க கிட்ட சொன்னா, நாங்களும் சிரிப்போம்ல்லா..” உஷாவின் அறைக்குள் நுழைந்தார் ராகவன். கட்டிலில் உட்க்கார்ந்திருந்த மீனா அவரைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றாள்.

“நாங்க பொம்பளைங்க எங்களுக்குள்ள பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு.. இப்ப யாரு உங்களை இங்கக் கூப்பிட்டது… நீங்க உங்க வேலையை கவனியுங்க சித்த நேரம்….” பத்மா தன் கணவரை அர்த்தத்துடன் உற்று நோக்கினாள்.

“வீட்டுக்கு வந்த கொழந்தை கிட்ட ரெண்டு வார்த்தை பேசணும்ன்னு எனக்கும் ஆசையா இருக்குடீ…”

“ரெண்டு நிமிஷம் ஹால்லே உக்காருங்க… எல்லோருமா உக்காந்து சாப்பிடலாம்… என்ன பேசணுமோ அப்ப பேசிக்குங்க…” உஷாவும் தன் அண்ணனைப் பார்த்து சிரித்தாள்.

“மீனா… நீங்க லவ் பண்ற விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமாடீ கண்ணு..” பத்மா, தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகளிடம் குழைந்தாள்.

“ம்ம்ம்… எங்க விஷயம் செல்வாவுக்கு மட்டும் தெரியும்… இப்ப நான் இங்க வந்திருக்கறதும் அண்ணனுக்குத் தெரியும் அத்தே…”

“அத்தே…”

“சொல்லும்மா…”

“கோவில்ல நீங்க என் அம்மாவை பாத்தாலும் இந்த விஷயத்தைப் பத்தி நீங்க அவங்க கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்லாதீங்க..” கெஞ்சலாக வந்தது அவள் குரல்.

“ஏண்டா கண்ணு..?”

“என் எக்ஸாமுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு… எந்த டென்ஷனுமில்லாம, நான் என் படிப்பை முடிச்சு மொதல்ல டிகிரியை வாங்கணும்ன்னு நினைக்கறேன்…”

“நீ சொல்றது சரிதாம்மா… எல்லாம் நல்லபடியா நடக்கும்.. இனிமே எதைப்பத்தியும் நீ கவலைப் படாம படிக்கற வேலையை பாரு… நடக்க வேண்டியதை நாங்கப் பாத்துக்கறோம்..” பத்மா மீனாவின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டு அவள் தலையை மென்மையாக வருடினாள்.

“தேங்க் யூ அத்தே…”

“ஏன்டீ மீனா, நீங்க ரெண்டு பேரும் பீச்சுக்கு போயிட்டு வர்றீங்களா?” உஷாவின் கண்களில் விஷமம் கூத்தாடிக்கொண்டிருந்தது. மீனா ஒரு நொடி திகைத்துப் போனாள்.

நாங்க பீச்சுலேருந்து வர்றோம்ன்னு இவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது..? உஷா அத்தே ரொம்பவே ஷூருடா இருக்காங்க… இவங்க கிட்ட கொஞ்சம் பக்குவமா, நிதானமாத்தான் பேசணும், பழகணும் போலருக்கே… அவள் மனம் அவளை எச்சரித்தது.

நான் யாருகிட்டவும் எதுக்காகப் பயப்படணும்..? நான் வேணாம்ன்னாலும் கேக்காம, இவங்க ஆசைப் பிள்ளைதானே என்னை கடற்கரைக்கு இழுத்துக்கிட்டுப் போனான்… எனக்கென்ன பயம்… நான் உண்மையைச் சொல்லத்தான் போறேன்… மீனா தன் மனதுக்குள் வாதம் செய்தாள்.

“ஆமாம் அத்தே… இன்னைக்கு வெயிலே இல்ல… காத்து சுகமா அடிக்குதுடீ… ஒரு அஞ்சு நிமிஷம், தண்ணில நிக்கலாம்ன்னாரு.. முதல் தடவையா வெளியில ஒண்ணா வந்திருக்கோம்… அவரு ஆசையா கூப்பிடறாரேன்னு சரின்னுட்டேன்..”

“ம்ம்ம்.. பரவால்லேடீ… உன்னைக் கொறையா சொல்லலேம்மா” உஷா பத்மாவின் முகத்தைப் பார்த்தாள்.

“அத்தே உங்களுக்கு எப்படீ தெரிஞ்சுது நாங்க பீச்சுலேருந்து வர்றோம்ன்னு?”

“வெளியில வரண்டாவுல நீங்க கழட்டிப் போட்ட ரெண்டு பேர் செருப்புலேயும்… வெள்ளையா, பொடி பொடியா கடல் மண்ணு ஒட்டிக்கிட்டு இருந்துடீ… சும்மா ஒரு கஸ் அடிச்சேன்.. அது சரியாப் போயிடிச்சி..” கலகலவென சிரித்தாள் உஷா.

என் சீனுவோட காதலி, மனசுல இருக்கறது எதையும் ஓளிச்சு வெச்சுக்காம, பட்டுன்னு உண்மையை பேசறா… இவளோட இந்த குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… இந்த வீட்டுக்குள்ள நுழையறதுக்கு உண்டான தகுதிகள் இவகிட்ட நெறயவே இருக்கு… உஷா தன் மனதுக்குள் திருப்தியடைந்தாள்.
“மீனா… நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாங்கற ஐடியாவுல இருக்கேம்மா?” ராகவன் அவளை கூர்ந்து பார்த்தார்.

“நான் எம்.இ. படிக்கணும்ன்னு அப்பா சொல்லிக்கிட்டு இருக்காரு… ஆனா இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை..”

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.