கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“ஏன்டா சீனு நீதான் படிக்கற காலத்துல ஒழுங்காப் படிக்கலை… படிக்கறப் பொண்ணோட மனசையும் கெடுத்துட்டியேடா?” ராகவன் தன் ஹாஸ்யத்திற்கு தானே சிரித்துக்கொண்டார்.

“எனக்கு வேலைக்கு போகணும் அங்கிள்…”

“ம்ம்ம்… சீனு கை நிறைய சம்பாதிக்கறாம்மா…”

“அங்கிள்… என்னை தப்பா நெனைக்காதீங்க… கொஞ்சநாளாவது எனக்கு வேலை செய்யணும்ன்னு ஆசையா இருக்கு… நெக்ஸ்ட் வீக், எங்க காலேஜூக்கு ப்ளேஸ்மென்ட் கம்பெனிங்க வர்றதா இருக்காங்க… நான் அவங்க முன்னாடி அப்பியர் ஆகறதா முடிவு பண்ணி இருக்கேன்.. அப்பாவும் நான் என் சொந்தக் கால்லே நிக்கணும்ன்னு ஆசைப்படறார்…”

“ம்ம்ம்…”

“அண்ணா… வீட்டுலதான் நாங்க ரெண்டு பேரு பொழுது போகாம உக்காந்துகிட்டு இருக்கோம்… கொழந்தை ஆசைப்படறதுல என்னத் தப்பு…?” கொஞ்ச நாள் அவ இஷ்டப்படி வேலைக்கு போகட்டுமே…” மீனாவுக்கு பரிந்து கொண்டு வந்தாள்.

அங்கிள், இது என்னோட கடைசி செமஸ்டர். புல்லா கான்ஸ்ன்ட்ரேஷனோட படிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு வேலைக்குப் போகணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு அங்கிள். மீனா தன் மனதிலிருக்கும் ஆசையை ராகவனிடன் தெளிவாக சொன்னாள். வேலைக்கு போகவேண்டும் என்ற மீனாட்சியின் தவிப்பை, விருப்பத்தைக் கேட்ட ராகவன், சில வினாடிகள் மேற்கொண்டு எதுவும் பேசாமல், மவுனமாக இருந்தார்.

“என்ன அங்கிள்… பெண்கள் வேலைக்கு போறதுல உங்களுக்கு எதாவது ரிசர்வேஷன் இருக்கா?”

“மீனா… என் அப்பா வீட்டுக்குள்ளவே இருக்கற ஒரு சாமியார்… அவருக்கு ஒரு கப் சாதமும் ரசமும் இருந்தா… அதுவே போதும்ன்னு மகிழ்ச்சியா இருக்கறவர்… அவருக்கு வேற எதுவுமே வேணாம்…” சீனு சிரித்தான்.

“ம்ம்ம்.. ரிசர்வேஷன்… அப்படீன்னுல்லாம் எதுவும் இல்லம்மா… பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கணுங்கறதும் என் எண்ணமில்லே… நாம படிக்கறது நம்ம அறிவை வளத்துக்கத்தான்… படிச்சப் படிப்பு என்னைக்கும் வீண் போகாது… அன்பார்ட்சுனேட்லி, பொதுவா நாம படிக்கற படிப்புக்கும் செய்யற வேலைக்கும் என்னைக்குமே சம்பந்தம் இருக்கறது இல்லே…”

“இந்த வீட்டுல சீனு கை நெறைய சம்பாதிக்கறான்.. என்னைவிடவே அதிகமான சேலரி வருது அவனுக்கு.. உங்க ரெண்டுபேரோட அடிப்படையான தேவைகளுக்கும் மேலாகவே அவன் சம்பாதிக்கறான்.. நாம எவ்வளவு சம்பாத்திக்கறோமோ, அந்த அளவுக்கு நிச்சயமாக செலவும் உண்டு. கையில காசு இருந்தா, தேவையே இல்லாத பொருட்களையும் வாங்கனும்ன்னு மனசுக்குள்ள ஆசைகள் வரும்…”

“ஆமாம்.. உங்கத் தத்துவத்தையெல்லாம் நீங்களே வெச்சுக்குங்க… வாழ்க்கையை நம்பிக்கையோட, தொடங்கப் போற கொழந்தைகிட்ட சொல்லாதீங்க…” பத்மா அவர் பேச்சினிடையில் குறுக்கிட்டாள்.

“நான் தப்பா எதுவும் சொல்லலை… மீனா… நாம வாழறதுக்காகத்தான் வேலையை தேடணுமே தவிர, வேலை கிடைக்குதுங்கறதுக்காக, நம்ம அமைதியான வாழ்க்கையை இழக்கறதுல அர்த்தமில்லே. வீட்டு வேலைகளையும் செய்துட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் பொறக்கப் போற குழந்தைகளையும் வீட்டுல சரியா கவனிக்க முடியாம, தேவையில்லாம பெண்கள் வெளியிடத்திலும் போய் எதுக்காக கஷ்டப்படணம்ங்கறதுதான் என் கேள்வி..”

“அங்கிள் நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன், எங்க
“பேட்ச்’ல இப்ப நான்தான் முதல் ஸ்டூடன்டா இருக்கேன். கண்டிப்பா கேம்பஸ் இன்டர்வியூல, எனக்கு முதல் சிட்டிங்லேயே, எந்த சிபாரிசும் இல்லாம வேலை கிடைச்சுடும்ன்னு, என்னோட டீச்சர்ஸ் சொல்லிக்கிட்டு இருக்காங்க…”

“வெரிகுட்… நல்லாப் படிக்கிற கொழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்மா.. உண்மையிலேயே, பெண் சம்பாதித்தே ஆகணுங்கற நிர்பந்தம் உள்ள ஒரு குடும்பத்துல, பெண்கள் வேலைக்கு போகலாம்… அதுல தப்பேயில்லை..”

“தேவையே இல்லாம, நான் படிச்சுட்டேன்… என் படிச்சப் படிப்பு வீணா போகக்கூடாது, எனக்கு வீட்டுல பொழுது போகலேன்னு… பெத்த குழந்தைகளை கவனிக்கக்கூட நேரம் ஒதுக்க முடியாம, மூணு மாசம் கூட ஆகாத, பால் குடி மறக்காத குழந்தகளை
“கிரஷ்ச்சில’ கொண்டு போய் விட்டுட்டு, வேலைக்கு வந்ததும், ஆஃபீசுல உக்காந்துகிட்டு, அந்த பிஞ்சுக் கொழந்தைகளைப் பத்தி ஏன் கவலைபட்டுகிட்டு இருக்கணும்? இதையெல்லாம் பாக்கும் போது ஏன் இப்படி பெண்கள் தன்னை வருத்திக்கறாங்கன்னு ஒரு சின்ன நெருடல் என் மனசுல இருக்கும்மா… அவ்வளவுதான்.”

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.