கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“மேடம்… நீங்க யாருன்னு சொல்லவே மாட்டீங்களா? உங்க வாய்ஸ்ல ரொம்பவே தீ பொறி பறக்குது மேடம்…”

“மிஸ்டர் வெல்லாயுதம்.. நான் யாருன்னா கேக்கறே? நான்தான் உன்
“தலை’ கையால சீக்கிரமே தாலி கட்டிக்கப் போறவ… நான் சொல்றதை கொஞ்சம் நல்லாக் கவனமா… காதைத் தொறந்து கேளு…”

“வணக்கம் மேடம்…” வேலாயுதம் மிகுந்த பணிவுடன் பேசினான்.

“நக்கலா… ஹூம்… வேலாயுதம்.. இன்னொரு தரம், நீ சீனுவுக்கு போன் பண்ணி… கட்டிங் வுடலாம்.. ஆம்லெட் போடலாம்.. கூடவே கோழி அமுக்கலாம்… வயித்தைக் காயப் போட்டுக்கிட்டு வந்துடு… பார்ட்டீ… கீர்ட்டீன்னு.. எதுக்காவது கூப்ட்டேன்னு எனக்குத் தெரிஞ்சுது… உனக்கு இருக்கற மரியாதை சுத்தமா கெட்டுப் போயிடும் சொல்லிட்டேன்..”

“மீனா.. நிறுத்துடீ ப்ளீஸ்…” அவளைக் கையெடுத்து கும்பிட்ட சீனு தன் கைகளை தன் தலையில் வைத்துக்கொண்டான்.

மீனா கோபத்தில் தான் என்னப் பேசுகிறோம் எனப் புரியாமல் வேக வேகமாகப் வேலாயுதத்தின் முதுகில்
“டின்’ கட்டிக்கொண்டிருந்தாள். மறு முனையில் அவள் பேசியதைக் கேட்டு வேலாயுதம் திடுக்கிட்டுப் போனான். தலையைக் கட்டிக்கப் போறவளாமே…

நடுவுல மீனா நிறுத்துடீன்னு சொன்ன மாதிரி கொரல் கேட்டுதே.. அந்தக் கொரலு தலையோட கொரல் மாதிரிதானே இருந்திச்சி…. என்னப்படம் இது.. யாரு டைரக்ஷன்… திரைக்கதை வசனம் யாருது.. ஒண்ணுமே புரியலியே…

மீனாங்கறது நம்ம மாப்ளை செல்வாவோட தங்கச்சி பேராச்சே.. ஓஹோ.. ஹோ… ஹோ… ஓஹோ… கதை அப்டீ போவுதா… அதானேப் பாத்தேன்.. நம்ம
“தலையா கொக்கா..?’ கட்ச்சீல மீனாவை கரெக்ட் பண்ணிட்டாரா நம்ம தலை சீனு..? வேலாயுதத்துக்கு குஷி பிய்த்துக்கொண்டு கிளம்பியது.

மீனாவுக்கு ரோடு போட்டு.. அவளுக்கு ரூட்டு காமிக்கற இந்த மேட்டரைப் பத்தி தலை எப்பவும் நம்மக்கிட்ட சொன்னதே இல்லயே… கட்சீல நம்ம
“தலைக்கும்’ ஒரு ஷோக்கு பிகர் செட் ஆயிடிச்சா..? இன்னைய டேட்ல சிட்டியில இதான் ஹாட் நீயூஸ் மாமே… பசங்களா கேட்டுக்கினீங்களாடா மேட்டரை…

தலை காதும் காதும் வெச்ச மாதிரி செல்வா தங்கச்சியை கணக்கு பண்ணி கரெக்ட் பண்ணி இருக்காரு… சும்மா வுட்டுடக்கூடாது தலையை… என்னம்மா உரிமை கொண்டாடறா மீனா…? என் சீனுங்கறா… இந்த ஒரு வார்த்தைக்கே மட்டுமே தலை நமக்கு ஒரு செமை ட்ரீட் குடுக்கணுமே…
]

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.