கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“போடீ.. இவ ஒருத்தி… நீ சொன்னதைத்தான் நான் ஒத்துக்கிட்டேன்ல்லா.. இப்ப எதுக்கு நீ திருப்பியும் திருப்பியும் இந்த சிகரெட் டாபிக்கை எடுக்கறே…? சீனு சலிப்புடன் முணகினான்.

“தேங்க் யூ டா சீனு..”

“மீனு.. உன் தேங்க் யூல்லாம் எனக்கு வேணாம்..”

“வேற என்ன வேணும்?”

“நீ என் பக்கத்துல வாடீ..”

“ஹூகூம்.. சான்சே இல்ல..”

“ப்ளீஸ் கிட்ட வாடீன்னா.. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே?”

“எதுக்க்க்கு…” கண்களில் திருட்டுத்தனத்துடன் மீனா தன் குரலை கிசுகிசுப்பாக்கி, நீளமாக இழுத்தாள்.

“வான்னா வரணும் நீ…”

“நீ எதுக்குன்னு சொல்லு..” மீனாவும் கொஞ்சினாள். அவள் இதயம் தடக் தடக்கென அடிக்க ஆரம்பித்தது.

“செல்லம்.. ஒரே ஒரு கிஸ் குடுடீ..” சீனு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

மீனா திறந்திருந்த அறைக்கதவை தயக்கத்துடன் பார்த்தாள். திரும்பி சீனுவின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்திலிருந்த தவிப்பை, கண்களில் முளைவிட்டிருந்த ஆசையின் வேட்க்கையைப் பார்த்தாள். அவனைப் பார்ப்பதற்கு அவள் மனதுக்குள் என்னவோ போலிருந்தது.

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.