கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“தலே.. முழுசா ஒரு ஸ்காட்ச் பாட்டிலோட நம்ம மச்சான் ஒருத்தன்… என் ரூம்ல உக்காந்துகினு கீறான்… கையோட நாட்டு கோழி ஒண்ணும் புட்சாந்து இருக்கான்.. சும்மா கொழுக்கு மொழுக்குன்னு இருக்குது மாப்ளே… நம்ம பசங்களுக்கு நீயூஸ் குடுத்துட்டேன்..”

“டேய்… டேய்.. என்னடா சொல்றே?”

“மாப்ளே சுத்தமான அரேஞ்ச்மென்ட்.. வரும் போது நீ ஒரு ரெண்டு லிட்டர் கோக் பாட்டில் ஒண்ணு புட்சாந்துடு.. நாம நாலே பேருதான்… மத்தபடிக்கு ஒரு டஜன் முட்டை.. ரெண்டு முழு ப்ளேட் பிரியாணி… ரூம்லேயே ஆம்லேட் போடறதுக்கு.. பச்சமொளகா.. வெங்காயம்.. மல்லித்தழைன்னு சப்ஜாடா எல்லா அரேஞ்ச்மென்ட்டும் ஒ.கே ஆயிடிச்சி.. நீ வந்தா ஒரே அமுக்கா அமிக்கிடலாம்.. இல்லேன்ன மெறிச்சிடலாம்… என்னா சொல்றே தலே… ரொம்ப லேட் பண்ணிடாதே.. ஆமாம்..”
சீனு எங்கிருக்கிறான்… அவன் பக்கத்தில் இருப்பது யார்.. அவனுடைய மனநிலைமை என்ன, எதையுமே அறியாத வேலாயுதம் கண்மூடித்தனமாக வாயில் வந்ததை உளறிக்கொண்டிருந்தான். பாட்டிலைப் பார்த்ததுமே அவனுக்கு போதை ஏறிவிடும்.. ஆனால் மூடியைத் திறந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவான். இது அவனது விசேஷம்.

வேலாயுதம் குஷியாக கொக்கரிப்பதை தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்த மீனாவுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. என் லைஃப்யே ஸ்டேக்ல வெச்சு, இவ்வளவு கஷ்டப்பட்டு, சீனுவை அவனோட குடிக்கற பழக்கத்தை விடச் சொல்லி சத்தியம் வாங்கியிருக்கேன்… இது தெரிஞ்சு இவன் வீட்டுல இருக்கறவங்கல்லாம், எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க.. என்னைத் தலையில தூக்கி வெச்சிக்காத குறையா கொண்டாடறாங்க…

நடுவுல எதுவோ தெருவுல போற நாய் ஒண்ணு.. என் சீனுவை குடிக்க கூப்பிடுது.. இதை மீனாவால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், சீனுவின் கையை உதறிவிட்டு அவன் மடியிலிருந்து எழந்தாள்… சட்டென சீனுவின் கையிலிருந்த செல்லைப் பிடுங்கினாள். தொண்டையைக் கணைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“மிஸ்டர்… ஊர்ல இருக்கறவனை கெடுக்கறதுக்குன்னே கங்கணம் கட்டிக்கிட்டு, ஓசியில எவன் தண்ணி வாங்கிக் குடுப்பான்.. குடுக்கறதை வாங்கிக் குடிச்சுட்டு, வாந்தி எடுக்கணும்ன்னு உடம்பை வளத்துக்கிட்டு அலையறீங்களே… உங்களுக்கெல்லாம் வெக்கமாயில்லே..”

“மீனா.. ப்ளீஸ்… வேணாம்மா.. போனைக்குடுத்துடு.. நான் போக மாட்டேண்டீ.. பிளீஸ் சொல்றதைக் கேளு..” பதறிப்போன சீனு, ஒரு முறை அவள் பேர் சொல்லி அலறியவன்.. அதன் பின் அவளிடம் கண்களாலும், சைகையாலும் கெஞ்ச ஆரம்பித்தான்.

“மேடம்.. மேடம்.. நீங்க யாரு பே..பேஸ்ஸ்றீங்க..” வேலாயுதத்துக்கு ஒன்றும் புரியவில்லை.. பதட்டத்தில் பேசியவனுக்கு வார்த்தைகள் முழுதுமாக வாயிலிருந்து வரமால் திணறினான்.

“ஹேங்… உன் பாட்டீ பேசறேன்டா… சித்த முன்னாடீ கேட்டீல்லா… பிகர் பக்கத்துல நிக்குதான்னு… உனக்கெல்லாம் மேனர்சே கிடையாதா.. ஹேங்.. க்க்க்ம்ம்ம்” மீனா சீறினாள்.

“சாரி மேடம்.. பிளீஸ்.. பிளீஸ்ஸ்.. நாங்க அண்ணன் தம்பியா ரொம்ப நாளா பழகறோம்.. ப்ரெண்ட்ஸ்ங்களுக்குள்ள ஜாலியா கலாய்ச்சுக்கிட்ட்டோம்.. நீங்க தப்பா நினைக்காதீங்கோ… மேடம்..”

“உன் குடும்பத்துல அண்ணன்.. தம்பி ரெண்டுபேரும் ஒரு மரியாதைப்பட்ட பொண்ணை.. பிகரு கிகருன்னுதான் பேசீப்பீங்களா..?”

“மேடம்… என்னன்னமோ தப்புத் தண்டாவா பேசறீங்களே.. எங்க தலை கிட்ட கொஞ்சம் செல்லைக் குடுங்க.. நான் என் தோஸ்தாண்டா பேசிக்கிறேன்…”

“இந்த கலாய்க்கற வேலையெல்லாத்தையும் வேற எங்கயாவது வெச்சுக்க்க்க”

இனிமே
“என் சீனு’ கிட்ட எந்தக் காரணத்தைக் கொண்டும் தோஸ்தி வெச்சிக்காதே.. மீனாவின் குரலில் சூடு ஏறிக்கொண்டே போனது. அவள் குரலில் சீனுவின் மேல் அவளுக்கு இருக்கும் உரிமையை, துப்பாக்கியிலிருந்து சீறி வரும் குண்டாக வெளிப்படுத்தினாள்.

“சாரிங்க மேடம்… நீங்க யார் பேசறீங்கன்னு எனக்குத் தெரியலை.. நான் கேக்கறனேன்னு கோச்சீக்காதீங்க.. நீங்க எங்கிட்ட தமாசுக்காக, காமெடி கீமடி எதுவும் பண்ணலயே?

“அது ஒண்ணுதான் கொறைச்சல் இப்ப…?”

பேசறக் குரலைக் கேட்டா ஷார்ப்பா ஒரு சின்ன பொண்ணு குரல் மாதிரி இருக்கு.. சீனுவோட அம்மா குரலா.. இல்லையே.. நிச்சயமா இல்லே… நான் வேலாயுதம் பேசறேன்னு தெரிஞ்சா, எப்பவுமே அவங்க ரொம்ப ரொம்ப அன்பா என் கிட்ட பேசுவாங்களே..

நம்ம
“தலை’ கையிலேருந்து செல்லைப் புடுங்கி பேசற அளவுக்கு அவங்க வீட்டுல யாருக்கு தைரியம் இருக்கு..? பேசறது சீனுவோட அத்தையா இருக்குமா..?. வேலாயுதத்துக்கு குழப்பமாக இருந்தது. தன் தலையை சொறிந்து கொண்டான்.

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.