கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

என் மரியாதை கெட்டுப்பூடுங்கறா… இந்த டயலாக்தான் கேக்கறதுக்கு கொஞ்சம் பேஜாரா இருக்குது… போனாப் போவுது.. யாரு அது நம்ப அண்ணிதானே திட்டினது… கோபம் இருக்கற எடத்துலதான் கொணம் இருக்கும்… இதெல்லாம் கண்டுகினா வேலைக்கு ஆவுமா…

மீனா ரொம்பவே
“உஷார்’ பார்ட்டி ஆச்சே.. ஒரு தரம் வெயில் நேரத்துல செல்வா வீட்டுக்கு போயிருந்தப்ப, ஒரு கிளாஸ் தண்ணி குடும்மான்னேன்.. நான் என்னா உனக்கு அம்மாவான்னு சுள்ளுன்னு எரிஞ்சு விழுந்தாளே.. கல்யாணத்துக்கு முன்னாடீயே
“தலயோட’ வீட்டுக்கு வந்து
“தலைக்கே’ நல்லெண்ணைய் தேச்சு சுளுக்கு எடுக்கறாளா அவ..? மேட்டரு இன்ட்ரஸ்டிங்கா போவுதே… வேலாயுதத்துக்கு தலை சுற்றியது.

“சாரி.. மீனா.. மீனா மேடம்… அயாம் சாரி… எக்ஸ்க்யூஸ் மீ… இனிமே இப்டீல்லாம் நடக்காது..

“வேலாயுதம்.. நல்லாக் கேட்டுக்குங்க.. இப்ப இங்க நடந்த விஷயத்தை, நான் உங்க கிட்ட பேசின விஷயத்தை, நான் சீனு கூட இருக்கறதை, ஊரு ஒலகத்துக்கெல்லாம்.. உடனே ப்ராட்காஸ்ட் பண்ணிடாதீங்க…ஆமாம்.” மீனா வேலாயுதத்தை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு, காலை கட் பண்ணினாள். செல்லை விசிறி கட்டிலின் மேல் எறிந்தாள்.

வேலாயுதம் அசந்து போய் நின்றான். காலங்காத்தால மீனா மாதிரி சின்னப் பொண்ணு கிட்ட தேவையே இல்லாம ஓத்தாமட்டை வாங்க வேண்டியதா போச்சே.. செல்வா மாதிரியே அவன் தங்கச்சி மீனாவும் பொம்பளை புத்தரா பொறந்து இருக்கா..
“தலை’ நான் கால் பண்றேன்னு சொன்னப்பவே… அதை புரிஞ்சுக்கிட்டு வாயை பொத்திக்கிட்டு இருந்து இருக்கணும்.. நான் ஒரு கூறுகெட்டவன்… மொக்கையாட்டம் மேல மேல உளறிட்டேன்…

வேட்டிக்குள்ள ஓணானை எடுத்து வுட்டுகிட்டாச்சு… இப்ப கொடையுதே.. குத்துதேன்னு நொந்துக்கிட்டு என்னாப் பண்றது… ம்ம்ம்.. நம்ம
“தலை சீனுவே’ அடிக்கற காத்துல அம்மிக்கல்லா பறக்கறாரு.. என்னடா இது பேஜாரு.. ம்ம்ம். கட்டிங் வுட்டுக்கற மூடே கெட்டுப்போச்சே..

கிணறு வெட்டப் போனா பூதம் கெளம்புற கதையா போச்சே… அட்லீஸ்ட் கடைசீல நமக்கு ஆப்பு வெச்சது யாருன்னு தெரிஞ்சுப் போச்ச்ச்சு… சீனுவோட அத்தையா இருக்குமோன்னு ரொம்பவே பயந்து போயிட்டேன்.. ஏற்கனவே என்னை அவங்க வீட்டுக்குள்ளவே விடமாட்டேங்கறாங்க.. காலிங் பெல் அடிச்சா.. அவங்க வீட்டு வரண்டாக் கதவையே தொறக்க மாட்டாங்க..

தலை சொல்ற மாதிரி நம்ம நேரம் சரியில்லே… இனிமே கொஞ்ச நாளைக்கு நம்ம
“தலை’ வீட்டுப் பக்கமே நாம தலைவெச்சு படுக்கக்கூடாது… மனதுக்குள் முனகிக்கொண்டான் வேலாயுதம்.
“மீனா.. என்னடி இது…? நீ படிச்சவதானே… நீ பண்ணது உனக்கே நல்லாயிருக்காடீ…?” சீனுவின் முகம் எக்கச்சக்கத்திற்கு கோபத்தில் சிவந்து போயிருந்தது. தன் தலையை அவன் அழுந்த தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான். தாறுமாறாக அவனுக்கு வந்த கோபத்தில் அவன் இடது கை விரல்கள் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.

“ஏன்.. கையில வந்த கட்டிங்க் சான்ஸ்.. என்னால பாதி வழியில பாழாப் போயிடிச்சேன்னு… உனக்கு வெறுப்பா இருக்கா…” மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

“ப்ளீஸ் மீனா.. என் மேல உனக்கு என்னதான் அக்கறை இருந்தாலும், என்னதான் நீ என் காதலியா இருந்தாலும், நீ பண்ணது மட்டும் சரியா.. வேலாயுதத்துக்கு மேனர்ஸ் இருக்கான்னு கேட்டியே… உனக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்காடீ.. சொல்லுடீ.. மீனாவின் தோளைப் பிடித்து உலுக்கினான் சீனு..”

“சீனு.. நீ கோவத்துல இருக்கே.. என் மேலேருந்தே உன் கையை எடு மொதல்லே.. கோவப்படாதே.. கூல் டவுன்.. நல்லா யோசனைப் பண்ணி பாரு.. நான் மட்டும் இப்ப இங்க இல்லேன்னா.. நீ குதிச்சிக்கிட்டு அந்த வேலாயுதம் வாலை புடிச்சிக்கிட்டு போயிருப்பேல்லா…”

“போதும்டீ… காலையிலேருந்து உன் லெக்சரை கேட்டு கேட்டு என் காது புளிச்சுப் போச்சு…” சீனு திரும்பவும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மீனா அறை சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள்.

“இவனை மாதிரி ஆளையெல்லாம் இப்படித்தான் டீரீட் பண்ணணும்… அப்பத்தான் அவனுங்களுக்கு புத்தி வரும்…” அவள் குரல் வெடித்துக்கொண்டு வந்தது.

“மீனா.. நீ பேசறது ட்டூ மச்… ஆஃப்டர் ஆல் வேலாயுதம் என் ஃப்ரெண்ட்… அவனுக்கு புத்தி சொல்றதுக்கு நீ யாருடீ?”

“அக்ரீட்… நான் உனக்கு புத்தி சொல்லலாம்லே.. பொறுக்கி ராஸ்கல் அவன்.. அவனுக்கு என்ன தைரியம் இருந்தா உன்னை
“நாட்டுக் கோழி அமுக்க’ கூப்புடுவான்..”

“மீனா.. பிளீஸ்.. போதும்டீ…”

வேலாயுதத்தின் ஒரு சிறு வார்த்தை மீனாவை எந்த அளவுக்கு உசுப்பேத்தியிருக்கிறது என்பது சீனுவுக்கு மெல்ல மெல்ல புரிந்தது. அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு, கோபத்தில் பொங்கி எழும் தன் காதலியை பரிதாபமாகப் பார்த்தான். மீனாவுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது.

“கோழி அமுக்கறதுன்னா என்னடா அர்த்தம்..? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா..? நான் ஒண்ணும் கோணம்பட்டி கிராமத்துலேருந்து இன்னைக்கு காலையிலதான் கோயம்பேடு பஸ் ஸ்டேண்டல, நாலு முழம் கனகாம்பரம் பூவை தலையில சொருகிக்கிட்டு வந்து கருப்பு பொட்டியோட வந்து இறங்கலே…

“இந்த ஊர்லேயே பொறந்து இந்த ஊர்லேயேத்தான் வளந்து… நாலுவருஷமா இந்த சென்னையிலேயே அடவாடித்தனத்துக்கு பேர் போன இஞ்சினீயரிங் காலேஜ்லதான் நானும் படிக்கிறேன்..

“அய்யோ.. அய்யோ.. என்னடீ சொல்றே நீ?” சீனு கூவ ஆரம்பித்தான்.

“உன் வேலாயுதத்துக்கு அப்பன்ல்லாம் என் கூட என் க்ளாஸ்ல படிக்கறானுங்க.. கொழுத்துப் போய் பொதி காளை மாதிரி அலையற நீங்கள்லாம்… உங்களுக்குள்ள பேசிக்கற ஸ்லாங்க் லேங்க்வேஜ் எனக்குத் தெரியாதா? எனக்கும் நல்லாத் தெரியும்.. நான் பேச ஆரம்பிச்சேன் மவனே நீ செத்துடுவே… சொல்லிட்டேன்..”

“அய்யோ.. அய்யோ.. கொஞ்சம் நிறுத்துடீ கண்ணூ” சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.