கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“டேய்… சீனு இந்தக் கொழந்தயை எனக்குத் தெரியாதாடா? இவளை நான் வீட்டுக்குள்ள வராதேன்னு சொல்லிடுவேனாடா? ரொம்பத்தான் டிராமா பண்ணே… சஸ்பென்ஸ் அது இதுன்னு… வரப்போறவ யாரா இருக்கும்ன்னு ஒரு மணி நேரமா என் மண்டையை போட்டு ஒடைச்சிக்கிட்டு இருந்தேன்…” சீனுவின் முதுகில் செல்லமாக அடித்தாள், தாய்.

“என்னம்மா நீ… இவ எதிர்லே என்னை அடிக்கிறே நீ” அம்மாவிடம் கொஞ்சினான் சீனு. தன் வீட்டுக்குள் நுழைந்ததும் எந்த எதிர்ப்புமில்லாமல், தன் தாய் மீனாவை ஆசையுடன் வரவேற்றதும், அவனுடைய முகம் மகிழ்ச்சியில் பூவாய் மலர்ந்திருந்தது. என் செலக்ஷன் உங்களுக்கும் திருப்திதானே என்று தன் அத்தையைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

“எப்படியிருக்கேடீ மீனா… முதல்ல வாயைத் தொறடீ…” அவள் வாய் கொள்ளாத சைசில் ஒரு துண்டு பால்கோவாவைத் திணித்தாள், உஷா. எங்க சீனு தப்பான காரியம் பண்ணமாட்டான்னு எனக்குத் தெரியும்ன்டீ மீனா… உன் அம்மா சவுக்கியம்தானே?

“நல்லாருக்கேன் அத்தே.. நீங்கள்ளாம் எப்படி இருக்கீங்க…” முகத்தில் பொங்கிவரும் சிரிப்புடன், கண்களில் மிரட்சியுடன் பேசினாள் மீனா.

“டேய் சீனு.. கன்கிராட்ஸ்டா… உள்ளே வாம்மா மீனா…” ராகவன் தன் கையை மீனாவின் புறம் நீட்டினார்.

“தேங்க் யூ அங்கிள்…” ராகவனின் கையை குலுக்கிய மீனா, தன் தலையை குனிந்தவாறு சொன்னாள்.

“மீனு… இந்த புடவையில நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கேடீ… இதுக்கு முன்னே எப்பவும் உன்னை நான் புடவையில பாத்ததே இல்லே..” உஷா, அவள் தலையை கண்களில் பொங்கும் மகிழ்ச்சியுடன் மெல்ல வருடினாள்.

“மீனாட்சி… நீ என் பையனை உன்னோட வாழ்க்கைத் துணையா செலக்ட் பண்ணதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா… அதுக்கு மேலயும் எனக்கு மகிழ்ச்சி குடுக்கற ஒரு விஷயம் என்னன்னா… இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே நீ சீனுவோட வாலை ஒட்ட அறுத்துட்டேன்னு கேள்விப்பட்டேன்… அதுக்கு நான் உனக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்..” ராகவன் சிரிப்புடன் தன் மகனை நோக்கி கண்ணடித்தார்.

“அங்கிள்.. ப்ளீஸ்… அவரை என் எதிர்ல ஒண்ணும் சொல்லாதீங்க…” வெட்கத்துடன் கெஞ்சலாக பேசினாள் மீனா.

“இப்பவே சீனுவுக்கு ரொம்ப வக்காலத்து வாங்கதடீ…மீனு…” உஷா உரக்கச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு தன்அறையை நோக்கி நடந்தாள்.

உஷாவுடன் சென்ற மீனாவை பின் தொடர்ந்து பத்மாவும், அவள் அறைக்குள் மெல்ல நுழைந்தாள். பெண்கள் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொள்ளும் மெல்லிய ஓசை ஹாலுக்குள் மிதந்து வந்தது.

“மீனா… எங்க சீனு உன்னைக் காதலிக்கறேங்கறான்… உனக்கும் அவனை பிடிச்சிருக்குல்லம்மா…” உஷா அவள் கையை வருடிக்கொண்டிருந்தாள்.

“ரொம்ப பிடிச்சிருக்கு…அத்தே” ஒரு நொடி முகம் சிவந்து பேசியவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.

“ஏம்மா.. என் பிள்ளை மீசை வெச்சிருந்தது உனக்குப் பிடிக்கலையா?”

“ஹூகூம்…”

“ஏம்மா…”

“என்னமோ எனக்கு மீசை வெச்சவங்களைப் பாத்தாலே பயம்..”

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.