கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

இரவு வீடு திரும்பிய சுவாமிநாதன் – ராணியை பெற்றவன் – வீட்டில் நடந்த அமர்களத்தைத் தெரிந்து கொண்டு, தங்கையின் வீட்டுக்கு கோபத்துடன் பெண்ணை ஒரு கை பார்த்துவிடுவது என பாதி சோற்றில் எழுந்து ஓடினான்.

“மச்சான்… பொறுமையா இருங்க.. ராணி பாக்கியம் கூடத்தான் உள்ளப் படுத்திருக்கா. உங்க தங்கச்சிகிட்ட பக்குவமா நடந்ததை கேக்கச் சொல்லியிருக்கேன்.”

“என்னை விடுங்க மாப்பிள்ளே… அவளை கொன்னு கூறுபோட்டாத்தான் என் மனசு ஆறும். விசாரணை என்னா பெரிய விசாரணை அவகிட்ட? வெளியில தலைகாட்ட முடியாதபடி பண்ணிட்டாளே? அப்பன் கோபத்துடன் குமைந்தான்.

“மச்சான் நான் சொல்றதை கேளுங்க… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது. நாம வளத்தப் பொண்ணு. சின்னப்பொண்ணுதானே அவ.. கூடப் படிக்கறவன் பாக்கறதுக்கு வாட்ட சாட்டமா நல்லா இருக்கானேன்னு ஆசைப்பட்டிருக்கலாம். இந்த விஷயத்தை இன்னும் நாலு பேருக்கு தெரியற மாதிரி பெரிசு பண்ணிடாதீங்க…”

“இப்ப மட்டும் என்னா… ஊருக்கு தெரியாமலா இருந்திருக்கு..?”

“மச்சான்… ஆறுமாசம் ஆனா எல்லாம் சரியா போயிடும். ஊர் நாட்டுல இதை விட என்னன்னமோ நடக்குது… வீட்டுக்கு வீடு வாசப்படி; பின்னாடி நம்ம பொண்ணுக்கு, நம்ம ஜாதியில நல்ல மாப்பிளை கிடைக்கறதுல பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாது. இதை மனசுல வெச்சுக்குங்க…”

“என்னா மாப்பிளை நீங்க புரியாம பேசறீங்க… வேத்தூர் காரன் நம்ம பொண்ணை சினிமாக் கொட்டாயுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்கான்… நம்ம வீட்டு குழந்தை தோள்ல கையைப் போட்டவனை சும்மா விடறதா?

“மச்சான்… ரெண்டு நாள் பொறுங்க… நம்ம பொண்ணும் குழந்தையில்லே! வேண்டி விரும்பி அவன் கூட சினிமாவுக்கு போயிருக்கா… இதை மறந்துடாதீங்க… அவன்
“அந்த ஜாதியை” சேந்தவன்னு தெரியுது…வீனா விவகாரத்துல மாட்டிக்கவேண்டாம்…”

“மாப்பிள்ளை… நீங்க என்னா அவனுங்களுக்கு பயப்படறீங்களா?”

“நான் நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்ன்னு நெனைக்கிறேன். சுத்துபட்டுல நாலு ஊருக்கு இந்த கதை தெரிஞ்சா… நம்ம ஜாதிக்காரன் யாரும் உங்க வீட்டுக்கு பொண்ணெடுக்க வரமாட்டான்னு சொல்றேன்..”

“ம்ம்ம்…”

“அவனை அடிக்கறேன்… புடிக்கறேன்னு அவனைத் தேடிக்கிட்டு போய் உங்கப் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.. இதனால கண்டிப்பா நம்ம பொண்ணுக்கு எந்த பிரயோசனமும் இல்லே…! நான் சொல்றதை சொல்லிட்டேன்… அப்புறம் உங்க இஷ்டம்..”

“நீங்க சொல்றீங்களேன்னு இப்ப போறேன்.. இன்னொரு தரம் இவ அவனைப் பாக்கப்போனான்னு தெரிஞ்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உங்க மருமவளுக்கு புத்தி சொல்லி காலையில வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க..”

***

“கண்ணு ராணி.. எழுந்துரும்மா… கொஞ்சம் சாப்பிடும்மா” அத்தை மருமகளிடம் பக்குவமாக பேசினாள்.

Updated: April 17, 2021 — 3:56 am