கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

சம்பத், இன்னமும் வெறும் உடம்பில் ஜட்டியுடன், ஒரு கையில் ரிமோட்டுடன், எஃப் டீவி, எம் டீவி, வீ டீவி என மாறி மாறி பயணித்துக்கொண்டிருந்தான். அவனுடைய மறு கை தொடை நடுவில் கிடந்தது.

“டேய்… இது என்னடா புது பழக்கம்…? நட்ட நடு ஹால்ல, ஜட்டியை மட்டும் போட்டுக்கிட்டு நெடுக நீட்டிக்கிட்டு கிடக்கிறே.. உள்ளப் போய் உன் ரூமுல படுடா…” என ராணி இறைந்தாள். அவன் படுத்திருந்தவிதம் பிள்ளையைப் பெற்றவளுக்கே பார்க்க கூச்சமாக இருந்தது.

“சரி… சரி… இப்ப ஏன்… என் மேல எரிஞ்சு விழறே?” சம்பத் தன் தாயின்
“மூடை” புரிந்துகொள்ளாமல் வழக்கம் போல் தெனாவட்டாக பேசினான்.

சம்பத்திடமிருந்து வந்த எகத்தாளமான பதிலைக் கேட்டதும், அவரு சொல்ற மாதிரி இவன் ஒழுங்கா வளராததுக்கு காரணம் நான்தான். இவன் அப்பா இவனை கண்டிக்கும் போதெல்லாம், குறுக்கே போய் போய் நின்னது நான்தான். அதுக்குப் பலனை நான் இப்ப அனுபவிக்கறேன். வர வர எங்கிட்டக்கூட சுத்தமா மரியாதையில்லையே?

சுகன்யா இவனை தன் உறவுக்காரன்னு மதிக்கலைங்கறான். என் படிப்பை மதிக்கலங்கறான். என் ட்ரஸ்ஸை பாத்து மயங்கலன்னு புலம்பறான். இவன் அவளைத் தன் உறவுன்னு மதிச்சானா? இவன் ஒரு படிச்சவன் மாதிரியா தன் சொந்த வீட்டுல நடந்துக்கறான்? அவகிட்ட நடந்துகிட்டான். இவன் போனப்ப அந்த பொண்ணு எந்த மனநிலையில இருந்தாளோ? அவ காதலிக்கற பையன் கூட அவளுக்கு என்னப் பிரச்சனையோ? இவன் போய் தன் கையை நீட்டினா, இவனைத் தூக்கி அவ இடுப்புலய வெச்சிக்க முடியும்?

இவன் ஒரு பொண்ணை மதிக்கத் தெரியாம, அடுத்தவங்களை கொறை சொல்லிக்கிட்டு, அவங்களை பழிவாங்றேன்னு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, போன எடத்துல மொக்கை போட்டுட்டு, இன்னொருத்தர் கஷ்ட்டப்படறதை பாத்து சந்தோஷப்படற அளவுக்கு போயிருக்கான்னா அதுக்கு காரணம் நான்தானே?

இவனுக்கு அளவுக்கு மேல செல்லம் குடுத்து தலைக்கு மேல தூக்கி வெச்சிக்கிட்டு ஆடினது என் தப்புத்தானே? ராணியின் அடி மனதிலிருந்து முதல் முறையாக, தன் மகனுக்கு எதிராக, ஒரு இனம் தெரியாத எரிச்சல் சட்டென கிளம்பியது.

“மொதல்லே நீ வளந்தப்புள்ளையா, படிச்சவனா, ஒழுங்கா ட்ரஸ் பண்ணக் கத்துக்கடா..” அவள் குரலில் மெலிதாக கோபம் எட்டிப்பார்த்தது.

“ரெண்டு நிமிஷம் மனுஷனை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே? இப்பத்தான் நச்சுப்புடிச்ச அந்தாளு வெளியில போனாரு…”

“என்னடா உளர்றே?” ராணியின் குரலில் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.

“சும்மா தொணதொணக்காம, நீயும் கொஞ்ச நேரம் எங்கயாவது போய் தொலைங்கறேன். என் வீட்டுல என் இஷ்டப்படி கிடக்கிறேன்; நீங்க ஏன் சும்மா அல்ட்டிக்கிறீங்க?”

“என்னடாப் பேசறே …”அந்தாளு”
“இந்தாளு”ன்னு… படிச்சவனா நீ? பெத்த அப்பன் கிட்ட பேசற மொறையைக் மொதல்ல நீ கத்துக்கணும்…” ராணி தன் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள்.

எல்லாவற்றையும் நொடியில் உதறி எறிந்துவிட்டு, வீட்டை விட்டே கிளம்பத் தயாராகிவிட்ட தன் கணவனின் கலங்கிய முகம், ராணியின் மனதுக்குள் வந்து நிற்க, அவள் முகம் கோபத்தில் சிவந்து, மூக்கு நுனி துடித்து, கன்னங்களில் சூடு ஏற ஆரம்பித்தது.

தன் மகன், முகம் தெரியாத ஒரு செல்வாவை ரிவிட் அடித்தது, அவனுக்கும், சுகன்யாவுக்கும் நடுவில் தேவையற்றப் பிரச்சனையை உண்டு பண்ணிவிட்டு வந்திருப்பது, அவர்களைப் பிரித்து, அதனால் சுகன்யாவை அழவிட்டு வேடிக்கை பார்க்கத்தானே தவிர, அவளைத் திருமணம் செய்து கொள்ளுவதில் தன் மகனுக்கு விருப்பமில்லை என்று தெரிந்தவுடன், தன் தாயின் மதிப்பிலிருந்து சம்பத் விழுந்துவிட்டான்.

தன் தாயும் ஒரு பெண்தான். ஒரு இளம் பெண்ணை தான் அவமானப்படுத்தியதில் தன் தாய்க்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்பதையும் அவன் புரிந்து கொள்ளவில்லை. தனக்காக, சிவதாணுவின் வீட்டில் நடந்த விஷயம் முழுதும் புரியாமல், ராணி தன் தந்தையிடம் இன்று எதிர்த்து சண்டையிட்டிருக்கிறாள். இந்த சண்டை அவர்களுக்குள் சாம்பல் பூத்திருக்கும், ஒரு சின்ன நெருப்புக் கீற்றை கிளறி விட்டுவிட்டது என்ற உண்மையையும் அவன் உணரவில்லை.

தன் தாய், தான் எந்த தவறு செய்தாலும், தனக்காக யாரிடமும் அது சரியே என வாதாடுவாள் என்ற எண்ணத்திலேயே இருக்கும் சம்பத், தன் தாய் இவ்வளவு நேரமாக, தனிமையில் தன் உள்ளத்தை ஆழந்து நோக்கி, தன்னை சத்தியசோதனை செய்துவிட்டு வந்திருக்கிறாள் என்ற உண்மையை சம்பத் முழுவதுமாக உணராத நிலையில் தன் தந்தையை கிண்டலடித்தான்.

“டேய்… சொல்றதை கேளுடா… என் கோபத்தை கிளறாதே?” ராணி வெடித்தாள். தன் மகனின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வெரண்டாவை நோக்கி வீசி எறிந்தாள். அவள் மூச்சிறைக்க அவன் எதிரில் துர்க்கையாக நின்றாள்.

Updated: April 17, 2021 — 3:56 am