கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

“அடிடீ நீ… ஒதைடீ நீ என்னை… உன்னால ஆனதை நீ பாத்துக்கோ… நான் அவனைத்தான் கட்டிக்குவேன்…இல்லேன்னா வெஷத்த குடிச்சிட்டு சாவுவேன்…” வெறியுடன் எழுந்து கத்திக்கொண்டே சோற்றுத் தட்டை எடுத்து தாயின் மேல் வீசி அடித்தாள் ராணி.

“சோத்தையாடி வீசி எறியறே.. அதுவும் பெத்தவ மூஞ்சியில அடிக்கிறியா? இதுக்கா உன்னைப் பெத்து வளத்தேன்… இந்த சோத்துக்காவத்தான் என் புருஷன் ராத்திரி பகலா ஒழைச்சிட்டு வர்றான்… உனக்கு அவ்வள கொழுப்பாடீ… ஆணவமாடீ… சிறுக்கி நாயே..”

தாய் மூலையில் கிடந்த, சாக்கடை கழுவும் தென்னம் தொடப்பத்தை எடுத்து, கழுத்து, முதுகு, முகமென்று பார்க்காமல், ராணி எழுந்து ஓட ஓட, சமையலறைக்குள்ளேயே, அவளைத் துரத்தி துரத்தி அடித்தாள்.

“நான் இப்பவே அவன் கிட்டப் போறேன்… உங்களால என்னப் பண்ண முடியுமே பண்ணிக்கடீ நீ..”

ராணி தன் புடவை நழுவ, உதட்டில் ரத்தத்துடன் எழுந்து புறக்கடை வழியாக வீட்டுக்கு வெளியில் ஓடினாள். அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த ராணியின் தம்பி பழனி, நடப்பது என்னவென்று புரியாமல், அவிழ்ந்த புடவையோடு ஓடும் தன் அக்காவை கட்டிப்பிடித்து, தரதரவென வீட்டுக்குள் இழுத்து வந்தான்.

“பழனீ அவளை வெட்டுடா… உன் அக்கா மானம் கெட்டுப்போயிட்டா, அந்த சிறுக்கி இனிமே உசுரோட இருக்கக்கூடாது. அந்தப் பொட்டை நாயை அடிச்சேக் கொல்லுடா…” ராஜாத்தி குரலெடுத்து கூவீனாள்.

“அண்ணீ… உங்களுக்கு என்னா பைத்தியமா புடிச்சுப் போச்சு…வயசுக்கு வந்த பொண்ணைப் போட்டு இப்படி அடிக்கிறீங்களே…! அறியாத வயசு.. ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிடாப் போறா அவ…! அவ எது பண்ணாலும் நஷ்டம் நமக்குத்தான். நம்ம வூட்டு மானம்தான் காத்துல பறக்கும்..!”

பக்கத்து வீட்டிலிருந்து ராஜாத்தியின் நாத்தனார் பாக்கியம், தன் அண்ணன் வீட்டிலிருந்து திடீரென எழுந்தக் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தவள், சாமியாடிக்கொண்டிருந்த தன் அண்ணி ராஜாத்தியை வளைத்துப் பிடித்துக்கொண்டாள். துடைப்பத்தை அவள் கையிலிருந்து பிடுங்கிப் போட்டாள்.

உடலெங்கும் எழுந்த வலியை விட, தன் தாய் தன்னை இப்படி ஓட ஓட தொடப்பத்தால் அடித்தாளே, அதை தன் அத்தை பார்த்துவிட்டாளே என்ற அவமானம் பொறுக்காமல், ஓவென்று கூடத்தில் படுத்து புரண்டு அழுதுக்கொண்டிருந்த ராணியை எழுப்பி, ஆதுரத்துடன் அணைத்து தன் வீட்டுக்குள் இழுத்துச் சென்றாள் பாக்கியம்.

Updated: April 17, 2021 — 3:56 am