கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

“ம்ம்ம்…ராணீ என் மேல கோபப்பட உனக்கு உரிமையிருக்கு.. என்னை அடிக்கறதுக்கு உனக்கு உரிமையிருக்கு…” ராணியின் பூங்கரங்களை தன் வலுவான கைகளால் பற்றி அந்த கைகளை முத்தமிட்டான் ஞானம்.

“என் ஆத்தா என்னை வெளக்குமாத்தால மூஞ்சி மொகம் பாக்காம, வெரட்டி வெரட்டி அடிச்சாடா.. என் வாழ்க்கையில மொதல் மொறையா உனக்காக நான் அடி வாங்கினேன்… ஒரு வாரம் அந்த ஊமை வலியை மூச்சு விடாம நம்ம காதலுக்காக நான் தாங்கிக்கிட்டேன்…!! நான் உன் மேல இருக்கற அன்புக்காக எவ்வளவு அடி வாங்கியிருக்கேன்ன்னு உனக்குத் தெரியுமா? ஒரு கோழையாட்டம் பேசறீயே? உனக்கு வெக்கமாயில்லே?”

“நான் என் உயிருக்குப் பயப்படலே… நான் ஆசையா காதலிச்ச, என் காதலியோட உயிருக்குப் பயப்படறேன்..!”

“ஞானம்… புரியறமாதிரிப் பேசுடா..”

“தங்கம்… எனக்காக என் காதலுக்காக நீ உன் அம்மாகிட்ட அடிவாங்கினே… இதுல அர்த்தமிருக்கு… உன் மேல வெச்ச ஆசைக்காக நான் உன் அப்பா அனுப்ச்ச கூலிகார நாய்ங்க கிட்ட அடிவாங்கினேன்… இதுல அர்த்தமிருக்கு… என் அப்பா எதுக்காக அடிபடணும்? நம்ம ரெண்டு பேரு காதலுக்காக… சம்பந்தமேயில்லாத நாலு பேரு என் பக்கத்துல… உன் பக்கத்துல நாலு பேரு ஏன் அடிச்சிக்கிட்டு சாகணும்?

“ஞானம்… என்னைக் கொழப்பாதடா… நான் உன்னைக் காதலிக்கறேன்.. உன் கூட வாழ ஆசைப்படறேன்.. இவ்வளவுதான் எனக்கு வேணும்… இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது…?

“எனக்குத் தெரியாதா நீ என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு?”

“டேய் ஞானம்.. நான் ஒரு கன்னிப்பொண்ணு… வெக்கத்தைவிட்டு என் ஆத்தாக்கிட்ட நானும் நீயும் அவுத்துபோட்டுட்டு ஒண்ணா இருந்தோம்ன்னு பொய் சொன்னேண்டா… அதுக்கப்பறதான் என் அம்மா என்னை அடிச்சு நொறுக்கினா…!? ஏன் அப்படி சொன்னேன்? இதை கேட்டதுக்கு அப்புறம் நம்பளை அவங்க ஒண்ணு சேத்து வெச்சுடுவாங்கன்னு நான் நம்பினேன்…”

“நீயும் நானும் ஒண்ணு சேரலைன்னா… என் ஆத்தா மூஞ்சை நான் எப்படிடா பாப்பேன்..? அன்னையிலேருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு மாசமாச்சு… என் அம்மாகிட்ட நான் ஒரு வார்த்தைப் பேசல. என் அப்பன் மூஞ்சை நான் நிமிர்ந்து கூடப் பாக்கலை. எல்லாம் உனக்காகத்தான் நான் பண்ணேன். இதுக்கு மட்டும் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.’ அவன் சட்டையைப் பிடித்து ஆவேசமாக உலுக்கினாள் ராணி.

“நான் உன்னைப் பாத்தா… உன் கூட இன்னொரு முறை பேசினா… உன்னை அன்னைக்கே வெட்டி குழித்தோண்டிப் புதைக்கப் போறதா உன் அப்பா என் கிட்ட சபதம் பண்ணியிருக்காரு.. ராணீ நீ நல்லாயிருக்கணும்… ராணீ.. நீ
“ராணி” மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்… எனக்காக, எந்த சந்தர்ப்பத்திலும் உன் உயிரை நீ விட்டுடக்கூடாது. இதுதான் எனக்கு முக்கியம்..”

“இதெல்லாம் எப்ப நடந்தது ஞானம்?” அவள் கேவினாள்.

“இப்பவும் ஸ்டேஷன் வாசல்லே உன் மாமாவும் உன் தம்பியும் உனக்கு காவலா நிக்கறாங்க… அவங்க பின்னாடி நாலு பேரு கம்பும் கத்தியுமா நிக்கலாம்… நாம எங்கேயும் ஓடமுடியாது… இவ்வளவும் தெரிஞ்சும் தனியா உன்னை கடைசியா ஒரே ஒரு தரம் பாக்கணும்ன்னு நான் இங்கே வந்திருக்கேன்…” மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினான்.

“எதுவே சொல்லாமா ஓடிப்போன கோழைன்னு, உன் வாழ் நாள் பூராவும் என்னை நீ கரிச்சுக் கொட்டக்கூடாது பாரு… அதுக்காகத்தான் என் உயிரையும் துச்சமா நெனைச்சு இன்னைக்கு உன்னை தனியாப் பாக்க இங்க வந்திருக்கேன்.. ஆனா உன் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா ராணீ… ஐ லவ் யூ ராணி.. ஐ லவ் யூ வெரி மச்…” அவன் இப்போது பொறுமையாக பேசினான்.

“ஞானம்… நீ சொல்றது சரிடா.. இன்னைக்கு நாம எங்கேயும் ஓட வேணாம்… பத்து நாள் போவட்டும்.. ஒரு மாசம் போவட்டும்.. ஏன் ஒரு வருஷம் போகட்டும்… உனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும்… அது வரைக்கும் நான் உனக்காக வெய்ட் பண்றேன்… என்னை மறந்துடுன்னு மட்டும் சொல்லாதேடா…”ராணி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“அழாதே ராணி.. நீ அழறதை என்னால பாக்க முடியலை… சகிச்சுக்க முடியலை.. என் மனசு வெடிச்சுடும் போல இருக்கு.. நான் உன்னை மறக்க மாட்டேன்… நீயும் என்னை மறக்க வேண்டாம்.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசுக்குள்ள காதலிக்கறதை யாராலும் தடுக்க முடியாதே?” ஞானம் அவளை தன் புறம் இழுத்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவள் முதுகை மெல்ல வருடிவிட்டான். அவள் நெற்றியில் பாசத்துடன் காதல் பொங்க முத்தமிட்டான்.

“சரி… முடிவா நீ என்னதான் சொல்றே? கண்களைத் துடைத்துக்கொண்ட ராணி அவன் கையை இறுகப் பற்றினாள்.

Updated: April 17, 2021 — 3:56 am