கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

“உன் புருஷன், உன் கொறை காலத்துக்கு சோறு போடமாட்டான்னு பயந்திட்டியா… நீ பெத்த புள்ளை.. .நான் இருக்கேம்மா… கவலைப்படாதே” சம்பத் அர்த்தமில்லமால் உளறிக்கொண்டே எழுந்து நின்றான்.

“யாரடா வாடா போடாங்கறே…என் புருஷனையா சொல்றே? அந்த மனுஷனைப் பத்தி உனக்கென்னடா தெரியும்?” ராணி பளீரென சம்பத்தின் வலது கன்னத்தில் மூர்க்கமாக அறைந்தாள்.

விழுந்த அறையின் வேகத்தில் சம்பத் அதிர்ந்தான். தன் தாய் தன்னை அடித்தாள் என்பதையே அவனால் ஒரு நொடி நம்பவே முடியவில்லை. கன்னத்தில் சுரீர்ரென நெருப்பை கொட்டினமாதிரி எரியுதே? காது ங்கொய்ங்குது… கண்ணு விண்ணு விண்ணு தெறிச்சுப்போச்சே? அப்படீன்னா, அம்மா அடிச்சது உண்மைதானா? சம்பத் தன் தாயின் முகத்தை இதுவரை இல்லாத ஒரு அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தான்.
ஹாலில் சுவரில் சாய்ந்து, இரு தொடைகளும் மார்புடன் அழுந்தியிருக்க, கைகளால் தன் முழங்கால்களை கட்டிக்கொண்டு, விழிகள் மூடி, முகத்தில் சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள் ராணி. மூடியிருந்த இமைகளுக்குப் பின் கண்கள் வலித்தன. ராணியின் இமையோரத்திலும், கன்னங்களிலும், கண்ணீர் வழிந்தோடி காய்ந்த கோடுகள் கோலமிட்டிருந்தன.

ராணி இப்போது மவுனமாக மனதுக்குள் அழுதுகொண்டிருந்தாள். நெற்றியும், தலையும் விண் விண்ணென்று வலித்துக்கொண்டிருந்தது. விளக்கு வைக்கற நேரத்துல வீட்டுல பொம்பளை அழுதா குடித்தனம் உருப்படுமா? தன் தலையை இட வலமாக உதறினாள். மெல்ல எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சம்பத்தின் அறைப் பக்கம் நடந்தாள். மூடியிருந்த கதவைத் தள்ளினாள். உட்புறம் தாள் போடப்பட்டிருந்தது.

“சம்பத்து… கண்ணு… கதவைத் தொறடா..” மனதின் சூட்டில் தாய்மை பாலாக பொங்கி மேலேழுந்து வழிந்தது.

“…..”

“தட்….தட்ட். தட்ட்” கதவைத் தட்டி தட்டி கை ஓய்ந்து போனதுதான் மிச்சம். அறையின் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு… சும்மாவா சொன்னாங்க..!

மெல்ல நடந்து வெராந்தாவில் கிடந்த சேரில் உட்க்கார்ந்தாள். வீட்டுல இருக்கற ரெண்டு ஆம்பளையில ஒருத்தன் கோவத்தோட வீதியில அலையறான். அடுத்தவன் வீட்டுக்குள்ளவே மூடின கதவுக்குப் பின்னால இருந்துக்கிட்டு கூப்பிட்டக் குரலுக்கு பதில் குடுக்காம என்னைக் கொல்றான்.

தோளுக்கு மேல வளந்த புள்ளயை நானே அடிச்சுட்டேனே? என் நாலு விரலும் அவன் கன்னத்துல பதிஞ்சு, வரி வரியாக பூத்திருந்ததை இப்ப நெனச்சாலும் என் அடிவயிறு பத்தி எரியுதே? இன்னைக்கு வரைக்கும், என் புருஷனை கூட அவன் மேல கை ஓங்க விட்டதில்லே. கண்ணுல பயத்தோட அப்படியே மலைச்சுப் போய் நின்னானே என் புள்ளே..! அலமந்து போன ராணியின் மனசின் அலையும் வேகம் இன்னும் மட்டுப்பட்டப்பாடில்லை.

உலகத்துல நீதான் புள்ளையை அடிச்ச மொதத் தாயா? உன் அப்பன் என்னைக்காவது உன் மேல கையை ஓங்கியிருப்பானா? உன் ஆத்தா உன்னை வெறும் தரையில போட்டதில்லையேடி..! ஒண்ணுக்கு ரெண்டா பட்டுப்புடவையை விரிச்சி தேக்குமரத் தொட்டில்லத்தானே கிடத்தினாங்க.

அப்படிப்பட்டவளே, உன் ஆத்தாளே, உன்னை ஒரு நாள் வீடு பெருக்கற விளக்குமாத்தால, வெளுத்துக் கட்டினா. அன்னைக்குத்தான் உன் திமிரும், நெஞ்சுல இருந்த அகந்தையையும் கொஞ்சம் அடங்கிச்சி. ஆகாசத்துல பறந்துக்கிட்டிருந்த நீ தரைக்கு மெல்ல மெல்ல வந்து சேர்ந்தே. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பியும் ஒதவ மாட்டான்னு சொல்றாங்களே… இதுவும் உண்மைதானா?

ராணியின் மனசு நொடியில் பின்னோக்கி ஓடி, முப்பத்து மூன்று வருடங்களை கடந்து, முதல் முறையாக அவள் அடி வாங்கிய தினத்தில் சென்று நின்றது.

Updated: April 17, 2021 — 3:56 am