கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

“ராணீ … நான் என் வாழ்க்கையிலத் தொட்ட மொதப் பொண்ணு நீ… கடைசிப் பொண்ணும் நீதான்…” இதுவரை உறுதியாக பதட்டமில்லாமல் பேசிக்கொண்டிருந்தவனின் குரல் தழுதழுத்து வந்தது. அவன் கண்கள் குளமாகியிருந்தது. மூக்கு விடைத்து, கன்னங்கள் கோணிக்கொண்டன. தன் கையிலிருந்த அவன் விரல்கள் நடுங்குவதை ராணி தெளிவாக உணர்ந்தாள்.

உணர்ச்சிவசப்பட்டிருந்ததால் ஞானம் பேசமுடியாமல் தவித்தான். ராணியின் முகத்தை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான். ராணி தன் காதலனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். தன் இரு கைகளாலும் காதலுடன் அவன் முகத்தை இழுத்து தன் மார்பில் பதித்துக்கொண்டாள். அவனை தன் மார்புடன் இறுக்கித் தழுவிக்கொண்டாள்.

ராணியின் உடல் வலுவும், மன உறுதியும் ஞானத்துக்கு அவள் அணைப்பில், அந்த அணைப்பின் இறுக்கத்தில், இறுக்கம் தந்த ஆதரவில், தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண்ணைத் தான் இழக்கிறோம் என்ற உண்மை அவனுக்குப் புரிய, அவன் உடல் பதறி வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

அவன் அழ ஆரம்பித்ததும், ஞானம் தன்னைத் தன்னுடன் இன்று அழைத்துப் போகப் போவதில்லை என்பது ராணிக்கு அக்கணம் ஐயத்துக்கிடமில்லாமல் புரிந்துவிட்டது. இனிமே இவனை இன்னைக்கு நம்பறதுல பலனில்லை. கொஞ்ச நாள் கழிச்சி அவன் வீட்டுக்கு நானே கட்டினப் புடவையோட போயிடவேண்டியதுதான். ராணி மனதுக்குள் உறுதியாக முடிவெடுத்தாள்.

இப்ப இந்த நிமிஷம், என்னை நேசிச்சவனோட இருக்கற இந்த தருணத்தை, வாய்ப்பை, நான் இழக்க மாட்டேன். இந்த நொடியை நான் சந்தோஷமா அனுபவிச்சே ஆவணும். அவனும் சந்தோஷமா இருக்கணும்… மனதில் தீர்க்கமாக யோசித்தாள் ராணி.

ராணி, ஞானத்தின் கைகளை தன் இடுப்பில் இழுத்து தவழ விட்டாள். தன் மார்பில் அவன் முகத்தை மீண்டும் அழுத்தமாக பதித்துக்கொண்டாள். அவன் முகத்தை நிமிர்த்தி அவன் முகமெங்கும் ஆசை பொங்க முத்தமிட்டாள். தன் காதலனின் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டாள்.

ஞானத்தின் மார்பு அவள் மார்பின் மென்மையையும், திண்மையையும் ஒருங்கே உணர்ந்தது. அவன் கைகள் அவள் பின்னெழில்களில் அழுந்தி அதன் செழிப்பை தடவி தடவி மகிழ்ந்து கொண்டிருந்தன. நான்கு இதழ்கள், பரஸ்பரம் தங்கள் ஈரத்தையும், வெப்பத்தையும், இனிப்பையும், உப்பையும் கலந்து பரிமாறி, சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தன.

ரயில், ஸ்டேஷனை வேகமாக நெருங்கி வரும் ஓசை கேட்டது. ஞானசம்பந்தன், தன்னை ராணியின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டான். அவள் தலையை ஒரு முறை ஆசையுடன் வருடினான். அவள் முகத்தை நேசத்துடன் தன் கைகளில் எடுத்துக்கொண்டான். கண்களால் தன் மனதைக் கவர்ந்தவளின் அழகைப் ஒரு நொடிப் பருகினான். ஐ லவ் யூ ராணீ… ஐ ஷல் பி லவ்விங் யூ ஃபார் எவர் டியர்…! அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

ராணியின் வலதுகையை ஆதுரமாக பற்றித் திருப்பினான் ஞானம். அவள் புறங்கையில் மென்மையாக தன் இதழ்களை ஒருமுறை பதித்தான்.
“ஆல் த வெரி பெஸ்ட் டு யூ மை டியர்” அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்கி மெல்ல முனகியவன், அதன்பின் அவளைத் திரும்பிப் பார்க்காமல், மதகின் மேல் ஏறி, எப்போதுமே இணைய முடியாத இரு தண்டவாளங்களின் நடுவில், ஸ்டேஷனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“நீ என்னை கடைசீல இப்படித் தனியா தவிக்க விட்டுட்டுப் போறீயேடா பாவீ? இதுக்குத்தான் நீ என்னை காதலிச்சியா? சத்தியமா சொல்றேன் நீ நல்லா இருக்கமாட்டேடா…

தன் உடலும், உள்ளமும் பதற கூவிய ராணி, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்க முயற்சிக்காமல், மதகின் சுவரில் சாய்ந்து நின்றாள். நிற்க முடியாமல் சரிந்து அங்கயே தரையில் உட்கார்ந்து கொண்டாள். தன் காதலன் ஆசையுடன் கடைசியாக முத்தமிட்ட தன் புறங்கையையே வெறித்துக்கொண்டிருந்தாள். நேரம் நழுவிக்கொண்டிருந்தது. ராணியின் கண்களுக்கு அவள் கையே புலனாகவில்லை. எது மதகு, எது சாலை, எது தண்டவாளம், எது ஸ்டேஷனுக்கு செல்லும் வழி எதுவும் புரியாமல், புலன்கள் மழுங்கி, தனியாக பைத்தியம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள்.

“அக்கா… இருட்டிப் போச்சுக்கா… எழுந்துருக்கா… வீட்டுக்குப் போய்த்தான் ஆவணும்… வேற வழியில்லே!!” ஆதரவாகப் பேசிய தம்பி பழனி அவள் கையை பிடித்து எழுப்பினான்.

நல்லசிவம் தெருமுனையில் திரும்பியதும், வேகமாக படபடவென்று ஓசையுடன் மழை பெய்யத் தொடங்கியது. நாலெட்டில் தன் வீட்டை அவர் அடைந்துவிட முடியுமென்ற போதிலும், நடையின் வேகத்தை அதிகரிக்காமல், பதட்டமில்லாமல் நிதானமாக, தன் உடல் மீது வேகமாக வந்து மோதும் மழை நீர் தன் மனதையும் உடலையும் ஒருங்கே குளிர்விப்பதை, ரசித்து அனுபவித்தவாறு தெப்பலாக நனைந்துபடி வீட்டுக்கு நடந்து வந்தார்.

Updated: April 17, 2021 — 3:56 am