கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

“சாரி… பாதர்… இந்த வீடு என் தாத்தாவுது… நீங்க மத்திய அரசாங்கத்தில பெரிய லா ஆஃபிஸரா இருந்து ரிட்டையர் ஆகியிருக்கீங்க… உங்களுக்கு சட்டம் நல்லாவேத் தெரியும்…”

“என்னடா சொல்றே நீ?”

“ஏதோ இந்த வீட்டுக்கு நீங்க பெயிண்ட், கியிண்ட், அடிச்சிருக்கீங்க; திண்ணையை இடிச்சி வரந்தாவா ஆக்கியிருக்கீங்க; அதுக்கு கம்பி கதவு போட்டு இருக்கீங்க; அனுபவ பாத்தியதையை என் தாத்தா உங்களுக்கு குடுத்துட்டு, அவரு தனக்கு சங்கு ஊதிக்கிட்டாரு..”

“செத்தவங்களை எல்லாம் ஏண்டா இப்ப இழுக்கிறே?” ராணி தன் மகனின் பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்தாள்.

“அப்பா… நீங்க இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருங்க… எனக்கு ஒரு அப்ஜக்ஷனும் இல்லே; ஆனா என்னை வெளியில போடான்னு சொல்ல உங்களுக்கு உரிமையில்லை… ஏம் ஐ ரைட்?”

சம்பத் தட்டை வழித்து நக்கி, வத்தல் குழம்பு சோற்றை ருசித்து தின்றுக்கொண்டிருந்தான். சோற்றைத் தின்று முடித்த சம்பத் பக்கதிலிருந்த நியூஸ் பேப்பரை ட்ர்ரென கிழித்து, பேப்பரால் தன் கையையும், வாயையும், துடைத்தான். கையைத் துடைத்த பேப்பரை சாப்பிட்ட தட்டிலேயே வீசி எறிந்தான். தண்ணீரை நிதானமாக குடித்து, நீண்ட ஏப்பம் விட்டான்.

“எம்மா… அந்த பேனைக் கொஞ்சம் ஆன் பண்ணேன்?” சோஃபாவில் நீளமாக தன் கால்களை நீட்டி, வசதியாக ஜட்டி, பனியனுடன் படுத்துக்கொண்டான்.

“டேய்… உனக்குத்தான் சட்டம் தெரியுமே! என் பொண்டாட்டி தாலி அறுத்ததுக்கு அப்புறம் நீ இந்த வீட்டுக்குள்ள வாடா.. இப்ப ஏண்டா என் கழுத்தை அறுக்கறே?’ நல்லசிவம் எப்போதுமே பேசி அறியாத வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வேகமாக வந்து நெருப்பாகத் தெறித்து விழுந்தன. அவர் மூச்சு உலையிலிருந்து வெளியேறும் வெப்பமாக அவரையே சுட்டது.

“அய்யோ …அய்யோ… அப்பனும் புள்ளையுமாவா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறீங்க? ராணி முடிவில் தன் கணவன் பக்கம் திரும்பினாள்.

“என் கிட்ட ஏன் கேக்கறே? உன் புள்ளையைக் கேளுடீ..”

“அவன்தான் சின்னப்பையன், ஏதோ பைத்தியக்காரத்தனமா பேசறான்னா.. நீங்கதான் கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன்..” ராணி தன் கணவனை வெளியே இழுத்தவள், அவரை வெராண்டாவில் போட்டிருந்த சேரில் உட்க்காரவைத்தாள்.

“உன் புள்ளை என்னை என் உசுரு போற வரைக்கும் இந்த வீட்டுல இருக்கலாம்ன்னு சொல்றான்! நீ ஏண்டி அதுக்குள்ள என்னை வெராண்டா வரைக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டே? உனக்கு அது வரைக்கும் கூட பொறுக்க முடியலியா? இப்படியே, இப்பவே வெளியிலத் தள்ளிடலாம்ன்னு ஏதாவது ப்ளானா?” நல்லசிவம் தன் மனைவி ராணியிடம் எகிறினார்.

“ஆண்டவா! அவன் கிட்ட பேசி நீங்க ப்ளட் பிரஷரை ஏத்திக்கிறீங்களேன்னு, உங்களை வெளியில கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்; ஏன் இன்னைக்கு குதர்க்கமாவே பேசறீங்க?” ராணி அவரைப் பார்த்து சமாதனமாக சிரிக்க முயன்றாள்.

“சிரிக்காதடி… எனக்குப் பத்திக்கிட்டு வருது?”

“ம்ம்ம்ம்… என்னப் பாத்தா பத்திகிட்டு வருதா?”

“எப்ப சுந்தரியும், அவ புருஷன் குமாரும், இப்ப நாங்க எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்றதாயில்லேன்னு நாசுக்கா நம்மகிட்ட சொல்லிட்டாங்களோ, அதுக்கு அர்த்தம் என்னன்னு உன் மரமண்டைக்குப் புரியலையா?

“புரியுது… இதுகூடவா ஒரு எம்.ஏ. படிச்ச எனக்குப் புரியலை?” ராணி திரும்பி அவரிடம் முறைத்தாள்.

“எம். ஏ. படிச்ச புத்திசாலிதானே நீ? அப்புறம் எதுக்குடி நீ இந்த கேடு கெட்டவனை, அதுவும் தனியா, சுகன்யாவை பாத்துட்டு வான்னு, சிவதாணு வீட்டுக்கு அனுப்பினே?”

“நீங்கதான் புரியாம பேசறீங்க… நல்ல எடங்க இது; பொண்ணு கிட்ட அழகுக்கு அழகு; குணத்துக்கு குணம்; சொத்துக்கு சொத்து; ஜாதிக்கு ஜாதி; சொந்தத்துக்கு சொந்தம்; அவங்க வீட்டுல வேணாம்ன்னு சொன்னா நாம அப்படியே விட்டுடறதா? சுகன்யா இவனைப் பாத்தது இல்லே! அதனால அனுப்பிச்சேன்…”

“வேணாங்கறவன் வீட்டு வாசல்ல போய் ஏண்டி நீ முட்டிக்கிறே? இதான் என் கேள்வி?”

“ரெண்டு தரம் முட்டிப் பாக்கறதுல தப்புல்லங்க…?”

“இப்ப இந்த சனியன் புடிச்சவன் அங்க என்னப் பண்ணிட்டு வந்திருக்கான்னு தெரியலியே?” நல்லசிவம் தன் தலையில் அடித்துக்கொண்டார்.

“நீங்க என்னைப் பொண்ணு பாத்துட்டு போனதும், நானும்தான் உங்களை வேணாம்னு சொன்னேன்”.

“நம்ம கதையும் இவன் கதையும் ஒண்ணா? உன் அப்பன் ஆத்தா உன்னை எனக்கு கொடுக்க மாட்டேன்னா சொன்னாங்க?”

Updated: April 15, 2021 — 3:36 am