கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

முப்பத்தஞ்சு வருஷமா, உன் நாடியைப் புடிச்சுப்பாக்கற எங்கிட்டவே உன் ஆட்டத்தை காமிக்கிறியா? உன் நாடி எப்ப வேகமாத் துடிக்கும்ன்னு எனக்குத் தெரியாதா? என்னை அடிச்சி வீட்டை விட்டுத் தொரத்தணுங்கற எண்ணத்தை இவ்வளவு நாளா உன் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டுத்தான்… என் கூட பொய்யா உறவாடிக்கிட்டு இருக்கியா? உன்னை என்னமோ ஒரு பெரிய தியாகின்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்?

பாம்பேயிலதான் சர்வீஸ் பண்ணும் போது சின்ன வீடு; பையனுக்கு ஒரு ரூமைக் குடுத்துட்டு, எப்பவும் நாம ஒரே ரூமுக்குள்ள அடைஞ்சு கிடந்தோம். இங்க கிராமத்துல பெரிய வீடு; எனக்கு தனி ரூம் வேணும்ன்னு சொன்னே? என்னமோ தனியா இருந்து, பொம்பளை ஆசையை கட்டுப்படுத்தப் போறேன்னு சொன்னே? உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? தெரிஞ்சாலும், சரி ஆசைப்படி இருந்துக்கோன்னு சொன்னேன்! ஆனா உன்னாலத் தனியா, முழுசா ஒரு வாரம் உனக்குன்னு இருக்கற ரூமுல படுக்க முடியலை.

அறுபது வயசு முடிஞ்சும், இன்னும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம், ராத்திரிலே, அரை இருட்டுல, வெக்கம் கெட்டுப்போய் என் ரூமுக்கு வந்து, என் பக்கத்துலப் படுத்துக்கிட்டு, ராணீ… ராணீன்னு என்னை முழுசா தடவிப் பாக்கறே? என்னைத் தடவியாவது விடுடீங்கறே? என்னாச்சு…? எங்கப் போச்சு உன் வைராக்கிய சாதனையெல்லாம்…? எனக்கு இன்னைக்கு வேணாம்ன்னா அப்படி மூஞ்சை சுளிச்சுக்கறே?

ராத்திரியில உனக்கு ஒரு வேஷம்? பகல்லே ஊருக்குன்னு ஒரு வேஷம் வெச்சிருக்கே! ராத்திரியில என் ரூம்ல உனக்கு ஒரு வேஷம்? ஹால்லே உன் புள்ளை எதிர்ல ஒரு வேஷமா? எத்தனை வேஷம் போட்டாலும், கடைசியா நீ இந்த வயசுல பொம்பளை உடம்புக்கு நாயா பேயா அலையலாம். ஆனா உன் புள்ளை ஆசையா, அழகா இருக்கற பொண்ணுங்க கூட பழகக்கூடாதா?

தன் பிள்ளைப் பாசத்தில், தன் கணவன், தன் உடல் அவஸ்தையில், தன் உடலின் அரிப்பை, தனக்கு உரிமையுள்ள, தன் மனைவியிடம்தானே தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் என்ற விஷயத்தை ராணி துரதிருஷ்டவசமாக அன்று மறந்தாள். தன் மகனை ஒரு பெண் மறுத்துவிட்டாள் என்ற கோபத்தில், தன் மகனின் கட்டுப்பாடற்ற இருபத்தைந்தின் இளமை அலைச்சலையும், அந்த இளமையின் பழிவாங்கும் பரபரப்பையும், அறுபதின் தேக அவஸ்தையையும் ஒன்றாக, சமமாக அவள் பார்த்தாள்.

என்னை வீட்டை விட்டுத் துரத்திடுவியா நீ? அப்புறம் ராத்திரியில நீ எப்படித் தனியாத் தூங்குவே? என் உடம்பு கதகதப்பு இல்லாம உன்னாலத் தூங்க முடியுமா? நல்லசிவம்ன்னு பேரு வெச்சுக்கிட்டா மட்டும் போதுமாய்யா? நீ நிஜமாவே சுத்த சிவமாயிடுவியா? உன் மனசுக்குள்ள எத்தனை சிவம்யா நீ? என் உடம்புக்காகத்தான் நீ என்னை இந்த வீட்டுக்குள்ள இவ்வளவு நாளா சோறு போட்டு, துணி குடுத்து வெச்சிருக்கியா? எனக்காக இல்லையா?

இன்னொருதரம் என்னை இருட்டுல தேடுவே பாரு; அப்ப உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்தறேன். வெக்கறேன்.. உன் வெள்ளை வேஷ்ட்டி.. வெள்ளைத்துண்டு வேஷத்துக்கு ஒரு வேட்டு? என்ன போலியான ஒரு வாழ்க்கையை ரெண்டு பேரும் இந்த வீட்டுக்குள்ள் வாழ்ந்துகிட்டு இருக்கோம்…? நீ சொல்றதும் சரிதான் நான் எதுக்காக இன்னும் உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்? உனக்கு என்னை, என் மனசை, என் மனசின் மூலையில் இருக்கும் அழியாத ஒரு சின்ன ஆசையோடு, என்ன முழுசா ஏத்துக்கப் பிடிக்கலை. ஆனா என் உடம்பு மட்டும் உனக்கு முழுசா வேணும்? அவள் மனதுக்குள் குமைந்தாள். புகைந்தாள். எரிந்தாள்.

“அம்மா… இது என்னம்மா புதுக்கதை? உங்க ரெண்டு பேரோட லைப் ஸ்டோரியில, ஒரு தனி ட்ராக் எனக்குத் தெரியாம ஓடிகிட்டு இருக்கே? இட் சீம்ஸ் டு பி வெரி இன்ட்ரஸ்டிங்…!! ஹாலில் சோஃபாவில் படுத்திருந்த சம்பத், வேகமாக எழுந்து வெரண்டாவிற்கு வந்தான்.

“நீ பொத்திக்கிட்டு போடா உள்ளே… அந்தக் கதை எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல… எங்க கதையில நீ என்ட்ரி கொடுக்க வேண்டிய அவசியமில்லே…! உன்னை யாரும் இங்க தாம்பூலம் வெச்சு அழைக்கல” ராணி அவனை மூர்க்கத்துடன் இழுத்து ஹாலுக்குள் தள்ளினாள். தள்ளிய வேகத்தில் அவள் முந்தானை மீண்டும் அவள் தோளிலிருந்து நழுவியது. நெற்றி வியர்த்து, தன் புடவை முந்தானை தரையில் புரள, கோபத்தில் குங்குமமாய் சிவந்திருக்கும் தன் தாயின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அவள் எதிரில் நின்று பேச சம்பத்துக்கு அச்சமாக இருந்தது. இந்த கோலத்தில் தன் தாயை அவன் எப்போதும் பார்த்ததில்லை.

சம்பத் ஒரு நொடி அதிர்ந்தான். தன் தாயின் உடலில் இத்தனை பலமா? ஒரு கையால என்னைச் சுழற்றி எறிந்துவிட்டாளே? நிஜமாவே அம்மா வெறி பிடிச்ச மாதிரில்ல பேசறா? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நடுவுல அப்படி என்னப் பழங்கதை இருக்கு? அம்மா கோபப்பட்டுத்தான் நான் பாத்திருக்கேன். ஆனா இந்தமாதிரி ஒரு கோபத்தை நான் எப்பவும் பாத்தது இல்லையே? மெதுவாக நடந்து மீண்டும் வெராண்டாவிற்கு அவன் வந்தான்.

நம்ம அப்பா சாதுவான மனுஷன். என் மேல உயிரையே வெச்சிருக்கார். என்னை கோபத்துல அப்பப்ப ஏதோ பேசுவார்… ரெண்டு வார்த்தை திட்டுவார்… அரைமணி நேரத்துல பழையபடி நார்மலாயிடுவார். வீட்டை விட்டு வெளியில போடான்னுட்டாரே? அம்மாவையும் வீட்டை விட்டுப் போடீங்கறார்? என்னா ஆச்சு இவருக்கு? இன்னைக்கு சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கற மாதிரி அம்மாகிட்ட ஏன் நடந்துக்கறார்? நான் போறேன்னு, துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு கிளம்பிட்டாரே?

நான் இன்னைக்கு கொஞ்சம் வழக்கத்தைவிட அதிகமாவே, இந்த வீடு என் தாத்தா சொத்து… பேரனுக்குத்தான் உரிமை, அது… இதுன்னு பேசி அவரை வெறுப்பேத்திட்டேனா? எப்பவும் பொறுமையா இருக்கற அப்பாவுக்கு தீடீர்ன்னு இன்னைக்கு என்ன ஆச்சு?

Updated: April 15, 2021 — 3:36 am