கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

“இப்ப இவனை சுகன்யா வேணாம்ன்னு சொல்லிட்டாளா? ரெண்டு கதையிலேயும் கொஞ்சம்தான் வித்தியாசம்… அன்னைக்கு நீங்க என்னைக் கட்டிக்கணுமின்னு ஒத்தைக்கால்லே நிக்கலையா?”

ராணி இதை வெகு சாதாரணமாகத்தான் எந்தவிதமான உள்ளர்த்தமும் இல்லாமல்தான் சொன்னாள். ஆனால் அந்த நேரத்தில் நல்லசிவத்தால் தன் பிள்ளை எதிரில் தன்னை அலட்சியமாக பேசுவதை அவரால் சுலபமாக ஜீரணிக்கமுடியவில்லை.

“ஆனா நீ என்னை வேணாம் சொன்னதுக்கு உன்னை நான் பொட்டை நாய்ன்னு எங்க வீட்டுலே போய் யார்கிட்டவும் இவனை மாதிரி அசிங்கமா பேசலை…”

“நான் கருப்பாயிருந்தேன்; அது என் தப்பு இல்லே? நீ செகப்பா அழகா இருந்தே; அதுலே உன் பங்கு என்னா பெரிசா இருக்கு? அந்த திமிர்ல நீ என்னை வேணாம்ன்னு சொன்னேன்னு, நான் அந்தக்காலத்துல எந்த தப்புத்தண்டாவுலேயும் எறங்கலே; உன்னை நாயே பேயேன்னு கேவலமா பேசலை.. ஆனா உன் புள்ளை அப்படியா இருக்கான்…?”

“சரி சரி இப்ப என்னா அதுக்கு? முடிஞ்சுப் போன நம்ம கதையை இப்ப நாம ரெண்டு பேரும் ஏன் பேசணும்?

“நீதாண்டி ஆரம்பிச்சே… நீ ஆரம்பிச்ச அந்தக்கதையை நான் ஒழுங்கா நேராக்கறேன்… உன் புள்ளை இனிமேலாவது திருந்தட்டும்ன்னு அவனுக்குச் சொல்றேன்… அவ்வளவுதான்..” அவர் ஆத்திரத்துடன் கத்தினார்.

“சும்மா கத்தாதீங்க… நாலு தரம் எங்க வீட்டுக்கு, நீங்க எட்டுப்பேரைத் தனிதனியா அனுப்பலையா? அது தப்புன்னு உங்களுக்கு தோணலயா? அது அந்த நேரத்துல எனக்கு எவ்வளவு டென்ஷனா இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?” ராணியும் தன் கண்களை சற்றே உருட்டி விழித்து அவரை வெகுண்டாள். ராணி இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே அதிகம்.

“சரி…சரி… நிறுத்துடி போதும்… உன் பழங்கதையை… உன் ஞாயத்தை… கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன் அழகைப் பாத்து உன்னை பண்ணிக்கணும்ன்னு நான் நாலு தரம் உன் வீட்டுக்கு ஆள் அனுப்பினேன்… அது உண்மைதான்…?”

“அதைத்தான் நானும் சொன்னேன்.. நீங்க என்ன இப்ப புதுசா சொல்றீங்க எனக்கு?”

“கல்யாணத்துக்கு அப்புறம், உன் கேடு கெட்ட கதை தெரிஞ்சதுக்கு அப்புறமும், நானா இருக்கவே உன் கூட இன்னைக்கு வரைக்கும், எதையும் யாருகிட்டவும் வெளியச் சொல்லாம … வெக்கத்தை விட்டுட்டு உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்!” நல்லசிவத்தின் கண்கள் கோவைப்பழமாக சிவந்திருந்தன. அவர் தன் பற்களை நறநறவெனக் கடித்தார்.

விஷக்கடி நேரத்தில் ஆரம்பிக்கும் பேச்சு எப்போதும் திசைமாறிப் போகும். திசைமாறியப் பேச்சு விஷமாகவும் மாறும். கோபத்தில் பேச்சைக்குறை என்றார்கள் பெரியவர்கள். குடும்பத்தில் எதிராளி உன் பேச்சைக் கேட்கவில்லையென்றால், வாழ்ந்து கெட்டவர்கள் வாயைப் பொத்து என்றார்களே, தெரியாமலா சொன்னார்கள் அவர்கள்?

தன் மகன் ஒரு பெண்ணை மதிக்கவில்லையே என தான் படும் ஆதங்கத்தை, தன் மனைவியும் புரிந்து கொள்ளவில்லேயே என அவர் வருத்தப்பட்டார். அவள் தன்னை வேண்டாம் என சொன்னபோதிலும், அவளுக்கு எந்தக் கெடுதலையும் தான் நினக்கவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்பினார்.

நல்லசிவம் நல்லவர். வாழ்க்கையை நிதானமாக எத்தனை குறையிருந்த போதிலும், அமைதியாக கழித்தவர். தன் மனைவி காரணமேயில்லாமல் கோபமாக பேச ஆரம்பித்தால் கூட அவர் மவுனமாகிவிடுவார். ஆனால் விதி யாரை விட்டது? அன்று கோபத்தின் வசத்தில் நல்லசிவம் தன் நிலையிழந்து, தெரிந்தோ தெரியாமலோ அவர் பேச்சை தன் மனைவியிடம் வார்த்தைக்கு வார்த்தையாடிவிட்டார்.

“என் கதை தெரிஞ்ச அன்னைக்கே என்னை வுட்டுட்டு போயிருக்க வேண்டியதுதானே? இல்லே போடீன்னு என்னை அடிச்சு வெரட்டியிருக்க வேண்டியதுதானே? யாரு உங்க கையை புடிச்சிக்கிட்டது? ராணியும் கோபத்தின் உச்சத்தில் என்னப் பேசுகிறோம் எனப் புரியாமல் கத்த ஆரம்பித்தாள். அவளும் பேச்சை இன்றைக்கு நிறுத்துவதாக தெரியவில்லை.

“சரியாத்தாண்டி நீ சொல்றே! அன்னைக்கே உன்னை அடிச்சு வெரட்டியிருக்கணும்…! என் மனசாட்சிக்கு பயந்துகிட்டு… ஆண்டவனுக்குப் பயந்துகிட்டு, உன்னை நானே விரும்பி வந்து, தொட்டுத் தாலி கட்டின பாவத்துக்காக, நான் சும்மா இருந்துட்டேன்!”

இத்தனை காலமாக தன் மனதின் ஆழத்துக்குள் அவர் பொத்தி பொத்தி வைத்திருந்தது அன்று வெளியில் வந்துவிட்டது. நல்லசிவம், என்னடா இப்படி பேசிட்டே? இது நல்லதுக்கு இல்லேடா! மல்லாந்து படுத்துக்கிட்டு வானத்தை நோக்கி எச்சில துப்பற கதையாகிப் போச்சே? இங்கேயே இந்தப் பேச்சை நிறுத்திடு… ராணி என்னச் சொன்னாலும், இதுக்கு மேலே பேசாதே! இப்ப இதையெல்லாம் பேசறதால யாருக்கும் பலன் இல்லே! அவர் மனதின் ஓரத்தில் ஒரு குரல் மெல்ல ஒலித்தது.

“என்னைத் தொட்டு தாலி கட்டினது பாவம்ன்னு இன்னைக்குத்தான் தெரியுதா?”

“அறுபதுக்கு மேலத்தான் விவேகமே வருது…”

“அனுபவி ராஜா அனுபவின்னு, உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் என்னை அனுபவிச்சிட்டு, அறுவது வயசுல ரத்தம் சுண்டினதுக்கு அப்புறம் இப்ப என் கிட்ட இந்த பேச்சா? இதுக்குப் பேரு விவேகமா? என்னை வீட்டை விட்டு அடிச்சு விரட்டணுங்கற ஆசை வேற உன் மனசுக்குள்ள இத்தனை நாளும் இருந்திருக்கா?

நல்லாருக்குய்யா உன் ஞாயம்; நான் எதுக்கு என் வீட்டை விட்டுப் போவணும்? என் பொணம்தான் இந்த வீட்டை விட்டு வெளியிலப் போவும்…” வயது வந்த பிள்ளை எதிரில் இருவரும் சாதாரணமாக எண்ணி பேச ஆரம்பித்தப் பேச்சு அன்று வம்பில் சென்று முடிந்தது. அவர்களுடைய முப்பத்தெட்டு வருட தாம்பத்ய வாழ்க்கையில் இரண்டாவது முறையாக விஷத்தைக் கலந்தது.

“நீ பொணமா ஏன் போவனும்? உன் புள்ளை கூட இன்னும் நூறு வருஷம், அவன் பண்ற அநியாயம் எல்லாத்துக்கும் ஆமாம் போட்டுக்கிட்டு… நல்லபடியா இருன்னு சொல்றேன்.”

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?” ராணி உக்கிரமானள். தனக்கு தன் கணவன் கொடுத்த வாக்கை மீறிவிட்டதை எண்ணி மனதுக்குள் எரிமலையாய் வெடித்தாள்.

“என்னை நிம்மதியா இருக்க விடுங்கன்னு சொல்றேன். அதனாலத்தான் உன் புள்ளைகிட்டச் சொன்னேன்; ரெண்டு பேருமா எங்கேயாவது போய் தொலையுங்கன்னு..” நல்லசிவத்தின் வாயில் அன்று நல்லதாக எதுவும் வரவில்லை. சிவன் அவர் வாயில் தப்புத்தப்பாகத் தாண்டவமாடிக்கொண்டிருந்தான்.

“நீங்க கருவண்டாட்டாம் இருந்துக்கிட்டு, அழகா செவப்பா, அம்சமா, பொண்டாட்டி வேணும்ன்னு ஆசைப்பட்டீங்களே இளமையிலே? அந்தப் பொண்டாட்டி நான் உங்களுக்கு இப்ப கசந்துப் போயிட்டேனா?”

Updated: April 15, 2021 — 3:36 am