கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

புத்திரப் பாசம் யாரை விட்டது? ராணியை மட்டும் விட்டுவிடுமா அது? மகனின் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு, தட்டில் சாதத்தையும், அதன் மேல் வத்தல் குழம்பையும் ஊற்றி, கூடவே ஒரு பொரித்த அப்பளத்தையும், தன் மகனிடம் நீட்டியவாறே கேட்டாள் ராணி.

“இப்ப பசியோட இருக்கற என் வாயைக் கிளறாதே… கொஞ்ச நேரம் நீ சும்மாயிரு.. உன் பேச்சைக்கேட்டு அந்த சுகன்யாவைப் பாக்க போனேன் பாரு..என் புத்தியை நானே, என் செருப்பாலத்தான் அடிச்சுக்கணும்!!!

“என்னடா ஆச்சு… சொல்லித் தொலையேண்டா..!” போன எடத்துல என்னமோ தாறுமாறா நடந்துருக்கு… நடந்தது என்னாங்கிறதை இவன் கிட்டேயிருந்து முழுசா தெரிஞ்சிக்கிட்டே ஆகணும். இப்போது ராணியும் சற்றே சினத்துடன் சீறினாள்.

“ம்ம்ம்.. என்னை அந்த சுகன்யா செருப்பால அடிச்சிருந்தாக்கூட பரவாயில்லே? நான் கவலைப்பட்டு இருக்கமாட்டேன்… ஆனா அவ என்னை மூஞ்சால அடிச்சா! என் மனசைப் புண்படுத்திட்டா… அதைத்தான் என்னாலப் பொறுத்துக்க முடியலை! சரியான திமிர் புடிச்ச பொட்டை நாய் அவ..!! அவளை உன் மருமகளா ஆக்கிக்கணும்ன்னு நீ கிடந்து துடிக்கறே!!?”

“டேய்…ஒரு வயசுக்கு வந்த பொம்பளைக் குழந்தையை… அதுவும் சுகன்யா நம்ம உறவு முறை; அந்தக் குழந்தையை… ஏண்டா அசிங்கமா இப்படியெல்லாம் பேசறே? நீ படிச்சு என்னடாப் பிரயோசனம்? முதல்ல பொம்பளைங்களை மதிக்கக் கத்துக்கடா…”

இதுவரை, அங்கு நடந்து கொண்டிருந்த வேடிக்கையை, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த நல்லசிவம் குறுக்கில் பேசத் தொடங்கிய அவர் பேருக்கு ஏற்றவாறு நல்ல மனுஷன். இயல்பாக அதிகம் பேசாமல் இயல்பாகவே அமைதியாக இருப்பவர். தன் மகனின் சிலுமிஷங்கள் அத்தனையையும் நன்றாக அறிந்தவர். பெண்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் தன் பிள்ளை சம்பத் இந்த அளவிற்கு சீரழிந்து போயிருப்பதற்கு முதல் காரணமும், அளவுக்கு அதிகமாக அவனுக்கு செல்லம் குடுத்திருக்கும் தன் மனைவி ராணி என்பதை, சிறிதும் தயங்காமல் எந்த கோவிலிலும் சத்தியம் செய்ய தயாராக இருப்பவர்.

“நீங்க சித்த நேரம் சும்மா இருங்க… நான் கேக்கறேன்… அவன் பதில் சொல்றான்… அங்க என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்க புள்ளையை நீங்களே மதிக்கலனா… ஊர்ல எவன் மதிப்பான்?” ராணி தன் புகைச்சலை அவர் மீது திருப்பினாள். தன் மகன் செய்யும் சில அட்டூழியங்களை ஏன் என்று அவர் தட்டிக்கேட்பதால், அவளுக்கும் அவருக்குமிடையில் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும்.

“எக்கேடோ கெட்டு நாசமாப் போங்க; ஆனா சொந்த ஊர்ல என் பேரை ரிப்பேர் ஆக்காதீங்க; இவன் ஆட்டத்தை எல்லாம் கண் காணாத இடத்துல, வெளியில எங்கயாவது வெச்சுக்கச் சொல்லு” அவர் தன் துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்.

“இன்னும் அவன் நடந்த விஷயத்தையே சொல்லலை; அதுக்குள்ள நீங்க எதுக்கு கிடந்து குதிக்கறீங்க?”

“உன் புள்ளையைப்பத்தி புதுசா தெரிஞ்சிக்கணுமா என்ன? அந்த பொண்ணு சுகன்யா கிட்ட இவன் எதாவது ஜோக் அடிக்கறேன்னுத் தப்பா பேசியிருப்பான்? இல்லேன்னா கண்ணடிச்சி, சிரிக்கறேன்னு கழுதை மாதிரி கனைச்சிருப்பான்?

“அய்யோ… என் தலையெழுத்து, உங்களைக் கட்டிக்கிட்டு நான் மாரடிக்கறேன்; என் புள்ளை புரியாத வாலிப வயசுல, ஒண்ணு ரெண்டு தரம், இப்படி… அப்படி … சரின்னு சொன்னவளுங்க கூட சந்தோஷமா இருந்துட்டான்… இப்ப அதுக்கு என்னப் பண்ணணுங்கறீங்க?”

“ஆமாம்… உன் புள்ளைகிட்ட அவளுங்களா வந்து, சரின்னு சொன்னாளுங்க; பேச்சு பேசறே நீ; இவன் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்காம… காப்பத்திவிட்டது நான்தாங்கறது ரெண்டுபேருக்கும் ஞாபகம் இருக்கட்டும்… அன்னைக்கெல்லாம் நான் ஒரு பொஸிஷன்ல இருந்தேன்… இன்னைக்கு ஏதாவது வம்பு தும்பு ஆச்சு… இவனை உள்ளத் தள்ளி முட்டிக்கு முட்டி பேத்துடுவானுங்க; இதையும் நல்லா ஞாபகத்துல வெச்சுக்குங்க..”

Updated: April 15, 2021 — 3:36 am