கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

“அப்பா.. நீங்க உங்க பயாலாஜிகல் நாலெட்ஜ்ஜைக் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுங்க; என் அம்மா மட்டுமே நான் பொறந்ததுக்கு காரணமில்லே! அன்பார்ட்சுனேட்லி, இந்த ஜென்மத்துல நீங்க என் அப்பா! நான் உங்க பிள்ளை! உங்களுக்கும் எனக்கும் எதுலயுமே சுத்தமா ஒத்து வரலே!

“நீ என்னோட வெறியில பொறந்தவண்டா… அதான் இப்படியிருக்கே? கொஞ்சம் விவேகம் வந்தப்ப எனக்கு ஆண்டவன் ஒரு நல்லப் புள்ளையை குடுக்கலை..”

“நான் ஒத்துக்கறேன். அதுக்கு … இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? ஒல்ட் மேன்… யூ கான்ட் புட் த க்ளாக் பேக்…!”

“டேய் சம்பத் … நிறுத்துடா உன் கிண்டலை… நானும் பாக்கறேன்… யார்கிட்ட நீ பேசறே? அது புரிஞ்சுத்தான் பேசறீயா?” ராணி நிலைமையை சமாளிக்க குறுக்கேப் புகுந்தாள்.

“அம்மா… எனக்கு நல்லாத் தெரியும்… என்னை பெத்தவர்கிட்டத்தான் நான் பேசிகிட்டு இருக்கேன்… அவருக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவர்தான் என்னை தன் பிள்ளையா நெனக்கறதேயில்லை. அப்படி நெனைச்சுப் பேசறதும் இல்லே!”

“சம்பத்து… போதுண்டா… வீண் பேச்சு பேசாதப்பா…” ராணி தன் மகனை கெஞ்சி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

“அப்பா… எனக்கு நீங்க நெறைய செய்திருக்கிறீங்க; நீங்க செய்த எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி… இப்ப நானும் சம்பாதிக்கிறேன்! நல்ல பொஸிஷன்ல்ல இருக்கேன்; எனக்கும் நாலு பேரை நல்லாத் தெரியும்! நீங்க தேவையில்லாம என்னைப் பத்தி அதிகமா கவலைப்படாதீங்க!

“சரி…அப்புறம் மேல…” நல்லசிவம் தன் மகனைக் கூர்ந்து நோக்கினார்.

“திருப்பியும் போலீஸ்காரன் நம்ம வீட்டுக்கு வந்தா எனக்கு இருபத்து அஞ்சு வயசாயிடுச்சு.. என் புள்ளை மேஜர்.. எனக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லேன்னு பாண்டு பேப்பர்ல எழுதி கையெழுத்துப் போட்டு அவன் கிட்ட குடுத்துடுங்க… மீதியை நான் பாத்துக்கறேன்.” சம்பத் சாய்ந்து உட்க்கார்ந்து கொண்டு, அப்பளத்தை நொறுக்கித் தின்ன ஆரம்பித்தான்.

“அப்படி என்னடா பண்ணிட்டு வந்திருக்கே அந்த சுகன்யா வீட்டுல நீ?”

“என்னை மதிக்காதவளுக்கு… நான் யாருன்னு சூட்சமமா சொல்லிட்டு வந்திருக்கேன்…?”

“இந்த ஊர்ல உன்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, வீட்டு உள்ள வான்னு சொல்ற ஒரு எடத்தையும் கெடுத்துக்கிட்டியா?

“அவசரப் படாதீங்க… ஓண்ணு ரெண்டு நாள்ல ரிசல்ட் தெரியலாம்…!”

“இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியில போடா… உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு; ஒரு நல்ல குடும்பத்து பொண்ணை மதிக்கத் தெரியலை உனக்கு. உன் ஆத்தா பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாவோட தாய் மாமன் ரகுகிட்ட போய் உனக்காக நாலு தரம் பேசிட்டு வந்தேன். சுகன்யா உன்னை சரியாத்தான் எடை போட்டிருக்கணும். என் எதிர்ல நிக்காதே… இப்பவே போயிடு… அந்தக் குடும்பத்தைப் பத்தி உனக்கு என்னடாத் தெரியும்…?”

“தெரிய வேண்டாம் எனக்கு…என்னைப் பத்தி அவ தெரிஞ்சுக்கட்டும்?”

“போவும் போது கூடவே உன்னைப் பெத்தெடுத்து இப்படி வளர்த்து இருக்காளே இந்த மகராசி… இவளையும் உன் கூடவே கூட்டிக்கிட்டுப் போய் தொலை…” நல்லசிவத்தின் வாயிலிருந்து எச்சில் தெறித்தது.

Updated: April 15, 2021 — 3:36 am